இ-நூலகம்
Open in Telegram
Destination of Ebooks and Audiobooks Send Your eBook Request to @AttenderBot
Show moreThe country is not specifiedThe category is not specified
1 453
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
1 453
ஏழை, பணக்காரர் என்று எந்தவித பேதமும் பார்க்காமல் மருத்துவம் செய்த மருத்துவப் பண்பாளர் Dr. ரங்காச்சாரி, 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். அந்தக் காலத்தில் அவர் FLYING DOCTOR என்று அழைக்கப்பட்டார்.
அவர் பர்காம்பூரில் இருக்கும்போது நடைபெற்ற சம்பவம் இது. நடந்து கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை மாடு மேய்க்கும் சிறுவனின் கையில் இருந்த குச்சி கிழித்ததால், வயிற்றில் இருந்த சிசுவின் பிஞ்சு விரல் ஓட்டை வழியே எட்டிப்பார்த்தது. Dr. ரங்காச்சாரி அவர்கள் தன் உதவி டாக்டர் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டைப் பிடுங்கி அந்த சிசுவின் விரலில் வைத்ததும், அது விரலை உள்ளிழுத்துக் கொண்டதால் தாயையும், சேயையும் காப்பாற்ற முடிந்தது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகைய மாமனிதர் 1934, ஏப்ரல் 24ம் தேதி டைபாய்டு காரணமாக சென்னையில் மண்ணுலகை நீத்தபோது இந்திய திருநாடே அழுதது.
1939, நவம்பர் 6 ஆம் நாள் சென்னை பொதுமருத்துவமனை வாயிலில் அவர் சிலை நிறுவப்பட்டது.
