Tamil Stories தமிழ் கதைகள்
Open in Telegram
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story
Show more5 991
Subscribers
No data24 hours
-27 days
-930 days
Posts Archive
கதை #S940
உனது எண்ணமெல்லாம்
ஒரு நாள், மாலை நேரம், நண்பர்கள் இருவர் வீதி வழியாக போய்க்கொண்டிருந்தனர். போகும் வழியில் ஓரிடத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டனர். நண்பர்களில் ஒருவனுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம், அவன், "வா நண்பா, சொற்பொழிவு கேட்கலாம்," என்று சொல்லிக் கொண்டே அவ்விடத்தினுள் சென்று அமர்ந்து சொற்பொழிவை கேட்கலானான்.
மற்றவன் உள்ளே செல்லவில்லை, ஒரு விலை மாதின் கடைக்கண் பார்வையால் கவரப்பட்டு அவள் பின்னாலேயே அவளது இடத்திற்குச் சென்று விட்டான்.
விலைமாதிடம் சென்றவனுக்கு மிகவும் வெட்கமாயிருந்தது. "எப்படிப் பட்ட மூடன் நான்! என் நண்பனோ அங்கே ஆன்மீகச் சொற்பொழிவு கேட்டுக் கொண்டு உயர்ந்த நிலைக்குச் சென்று கொண்டுள்ளான், நானோ இங்கே தாழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளேன்," என்ற எண்ணத்தில் அவனால் வந்திருந்த காரியத்தையும் முழுமனதுடன் முடியவில்லை.
ஆன்மீகச் சொற்பொழிவுக்குச் சென்றவனோ, "சே, இங்கே வந்து மாட்டிக் கொண்டோம்! நம் நண்பன் அங்கே நன்றாக சந்தோஷமாக இருப்பான்" என்று சிந்தித்துக் கொண்டு சொற்பொழிவில் கவனம் செலுத்தவில்லை.
வருடங்கள் சென்றன, கால ஓட்டத்தில் இருவரும் இறந்தனர், விலை மாதிடம் சென்றவன் நேராக சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். சொற்பொழிவுக்குச் சென்றவனை எமதூதர்கள் வந்து நரகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவனுக்கோ ஆச்சரியம், "எம தூதர்களே, நீங்கள் தவறான ஆளை அழைத்துச் செல்கிறீர்கள். நான் தான் ஆன்மீக சொற்பொழிவுக்கெல்லாம் சென்றவன், விலை மாதிடம் சென்று வாழ்க்கையை வீணடித்தவன் வேறொருவன்." என்றான்.
எமதூதர்கள், "எல்லாம் சரியான ஆளைத் தான் அழைத்துச் செல்கிறோம். நீ சொற்பொழிவில் உட்கார்ந்திருந்தாலும் உன் மனம் முழுவதும் விலைமாதிடமே இருந்தது, அவன் விலைமாதிடம் சென்றாலும் அவன் மனமெல்லாம் ஆன்மீக நாட்டத்திலேயே இருந்தது. அதனால் தான் உனக்கு நரகம், அவனுக்கு சொர்க்கம்" என்று சொல்லிக் கொண்டே அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்!
கதை #S939
பணப் பைத்தியம்
ஒரு வியாபாரி சரியான பணப் பைத்தியம். அப்படியிருக்கவனுக்கு ஈஸியா பணம் கிடைக்குற வழி தெரிஞ்து. ஒரு சூனியக்காரன் ஒருவனிடம் அல்ல குறையாத ஏராளமான தங்கம் இருந்தது. ஆனால் இந்த சூனியக்காரன் வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி அவனுக்கு ஒரு சாபம் இருந்தது. அந்த சூனியக்காரனால் சாப்பாட்டுக்கு கூட அடுத்தவரை நம்பி இருக்க வேண்டி இருந்தது. அதனால் அவனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு தங்கம் எடுத்துக் கொண்டு செல்ல அனுமதித்து இருந்தான்.
இதைத் தெரிந்த வியாபாரி சூனியக்காரன் இருக்கும் இடத்திற்குச் சென்று உணவு கொடுப்பான். அந்த உணவைச் சாப்பிடும் போது அங்கிருந்து தங்க காசுகளை எடுத்துட்டு வந்தான். இப்படியே அவன் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தான். ஆனால் அவன் ஒவ்வொரு முறை சூனியக்காரனை பார்க்க போகும் போதும் ஒரே ஒரு வாளியில் மட்டும் தான் உணவு எடுத்துட்டுப் போனான்.
அவனுக்கு வயசாயிடிச்சி இனி இந்த ரகசியத்தை தன் பையனுக்குச் சொல்லித்தரணும்னு நினைத்தான். அவன் பையனிடம் இதைப் பத்தி சொல்ல அவன் மகன் ஒரு யோசனை சொன்னான். எதுக்கு ஒவ்வொரு முறையும் ஒன்னு ஒன்னா வாளியில் உணவு எடுத்துட்டு போகணும். நிறைய வாளியில் நிறைய உணவு எடுத்துட்டு போவோம். நிறைய தங்க காசுகள் கிடைக்கும்னு யோசனை சொன்னான். அது வியாபாரிக்கு சரின்னு பட அவனும் அதை ஏற்றுக் கொண்டான்.
அதன்படியே மகன் அடுத்த நாள் நிறைய உணவு சமைச்சி நிறைய வாளிகளில் எடுத்துட்டு போனான். உணவை சூனியக்காரனுக்கு கொடுக்க போகும் போது தான் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அவன் எத்தனை வாளிகள் எடுத்துட்டு வந்திருப்பானோ அத்தனை சூனியக்காரன் உருவம் அங்கே இவர்களுக்காக காத்திருந்தது.
வியாபாரி இதை கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டான். சில விஷயங்கள் தாமதமாத் தான் புரியும். ஆனால் புரிஞ்சும் பிரயோஜனமில்லாத நிலைமைன்னு சொல்லுவாங்கள்ள அப்படிப்பட்ட நிலை.
கதை #S938
புலியின் அருகிலேயே
நரி ஒன்று புலி தங்கியிருந்த குகையின் அருகே உள்ள புதரில் வாழ்ந்து வந்தது. அப்ப அங்கே நரி இருப்பது புலிக்கே தெரியாது. புலி மீதம் வைத்த இறைச்சியைத் தின்று வாழ்ந்து வந்தது அந்நரி.
ஒருநாள் அந்த நரியை இன்னொரு நரி சந்தித்தது. "உன் செயல் வேடிக்கையாக உள்ளது. புலியின் அருகிலேயே வாழ்கிறாய். ஆனால் அதற்குத் தெரியாமல் மறைந்து வாழ்கிறாய். அது இல்லாத சமயத்தில் மீதம் உள்ள இறைச்சியை உண்கின்றாய். ஏன் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றாய்?" என்று கேட்டது.
"நண்பா! வாழும் முறையை நான் தெரிந்து கொண்டிருக்கின்றேன். நான் புலியின் எதிரில் செல்வது இல்லை. ஏனென்றால் அது என்னைக் கொன்று விடும். அதன் அருகிலேயே வாழ்கிறேன். என் எதிரிகள் யாரும் புலிக்குப் பயத்தில் என்னிடம் வருவதில்லை" என்று பதில் சொன்னது நரி.
கதை #S937
மேலே இருந்து துடைக்கிறாய்
ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.
அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து,
ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ என்றார்.
வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள். அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே?
எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால் அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு செயலை ஒரு தலைவரோ அல்லது நடிகரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே மாற்றம் இருபக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.கதை #S936
முழுப் பூசணிக்காயை
ஒரு பணக்காரரும் அவர் பொண்டாட்டியும். ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம்.
ஊரில் அரசால் புரசலாக பணக்காரர். பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்களாம்.
இதை மறைக்க, ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து. வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம்.
“இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும், இவரா. கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம்.
இதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் (சோற்றால்) மறைத்த கதை.
கதை #S935
என்ன புரிஞ்சது
விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவனை பார்த்து “எதற்காக விவாகரத்து கேட்கிறாய்? என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு கணவன் “ஐயா! என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள், பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. அதனால் விவாகரத்து தாருங்கள் என்று சொன்னான்
உடனே நீதிபதி “இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது.
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது.
பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி, நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா.” என்றார்
“ஐயா! நல்லா புரிஞ்சதுங்க” என கணவன் சொன்னான்
என்ன புரிஞ்சது? என்றார் நீதிபதி
“எம் பொண்டாட்டி பூண்டு, வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க” என கணவன் சொன்னான்.
கதை #S934
எனக்கு எவ்வளவு வேலை
டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க. "
கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள். கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
சரிங்க.
ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்.
தோ உடனே செய்றங்க.
நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா. இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு.
ஒகேங்க
தூங்கும் மனைவியை எழுப்புகிறான். மனைவி பேசாம படுங்க. காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.
கதை #S933
யார் அதிக ஆண்டுகள்
வியாபாரி மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான். அவன் தம்பிகள் இருவரும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர். வியாபாரி ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார்.
பேராசை கொண்ட தம்பிகள் இருவரும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே அண்ணன் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர்.
அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் அருகில் ஒதுங்கிக் கிடந்தான் அண்ணன். ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை. அவன் முன்னால் கடவுள் தோன்றினார். கடவுளைக் கண்ட அண்ணன் அவரை வணங்கினான். "உனக்கு இனி எந்த ஆபத்தும் வராது. 100 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய். " என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார். அண்ணன் வீட்டிற்குத் திரும்பினான் தம்பிகள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
"காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம். உங்களைப் பார்த்த பின்னர் தான். எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி நடித்து அழுதனர். "என்ன நடந்தது. " என்று கேட்டனர்.
எதையும் மறைத்துப் பேசத் தெரியாத அண்ணன் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான். தான் 100 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான். தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழ வேண்டும் என்று திட்டமிட்டனர்.
பேராசை பிடித்த தம்பிகள் இருவரும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர். அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் அருகில் ஒதுங்கிக் கிடந்தனர். அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். "உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள்.
தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர். "கடவுளே நான் 200 ஆண்டு சாகாமல் வாழவேண்டும். " என்றான் முதல் தம்பி. "நான் 400 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் கடைசி தம்பி. முதல் தம்பி 500 ஆண்டு என்றான். கடைசி தம்பி 600 என்றான். இருவரும் இப்படி ஆண்டுகளை ஏற்றிக் கொண்டே சென்றனர்.
"நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறனுக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம். " என்றார் கடவுள்.
"சொல்லுங்கள். சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக.
"இந்தக் குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.
இருவரும் நீருக்குள் மூழ்கினர். முதல் தம்பிவிட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று கடைசி தம்பி நினைத்தான். கடைசி தம்பி விட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று முதல் தம்பிநினைத்தான். யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் தம்பிகள் இருவரும் பிணமாக குளத்தில் மிதந்தனர்.
கதை #S932
முள் செடியின் குணம்
ஒரு அடர்ந்த காட்டில், ஒரு நரி வேட்டையாடிக் கொண்டிருந்தது. திடீரென்று, அதன் கால்கள் ஒரு முள்செடியில் சிக்கிக் கொண்டன. நரி அதிர்ச்சியடைந்து, தப்பிக்க முயன்றது.
ஆனால், முள்செடிகள் அதன் உடம்பில் ஆழமாக ஊடுருவி, ரத்தம் வர ஆரம்பித்தது. வேதனையால் துடித்த நரி, முள்செடியை வெறுத்து, திட்ட ஆரம்பித்தது.
வேதனையால் துடித்த நரி, தன்னை விடுவிக்க முயன்றது. ஆனால், முள்செடிகள் அதை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டன. தன் உடம்பில் ஏற்பட்ட காயங்களையும் கீறல்களையும் பார்த்த நரி, முள்செடியை நோக்கி, "என்ன செடி நீ! என் உடம்பை எல்லாம் கீறிவிட்டாய். என்ன வேலை இது?" என்று கோபமாக கத்தியது.
முள்செடி அமைதியாக நரியை பார்த்தது. பின்னர், மெதுவாக பேசியது." நான் ஒரு முள்செடி. என் வேலை என்னவென்றால், என்னைத் தொடுபவர்களை குத்துவது. அதை தவிர வேறு எதையும் என்னால் செய்ய முடியாது. என்னை குறை சொல்வதால் உனக்கு என்ன பயன்? உன் தவறு தான்."
தன் தவறை உணர்ந்த நரி, முள்செடியிடம் மன்னிப்பு கேட்டு, அதன் உதவியுடன் வேலியிலிருந்து தப்பித்தது.
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.
கதை #S931
எல்லாம் காதில் வாங்கினால்
ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.
இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.
இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர். இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.
வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.
கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.
இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.
அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அடுத்தவர் பேச்சை எல்லாம் காதில் வாங்கினால் இப்படித்தான்
கதை #S930
இரண்டு வரங்கள்
ஒரு இளைஞன் தனது பின்னால் நெருப்பு கோழியுடன் ஒரு ரெஸ்டாரண்ட்க்கு செல்கிறான் பணிப்பெண் அவர்களிடம் உத்தரவுகளைக் கேட்டாள். அந்த இளைஞன் ”ஒரு சிக்கன் பிரைடு ரைஸ் மற்றும் ஒரு கோக்” என்று சொல்லி, நெருப்பு கோழியின் பக்கம் திரும்பி, ” உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டான்
“எனக்கும் அதே ஆர்டர் செய்யுங்கள்” என்கிறது நெருப்பு கோழி.
சிறிது நேரம் கழித்து, சாப்பிட்டதும் பணிப்பெண் பில்லை கொண்டு வந்தாள். பணிப்பெண். பில்லில் 1847.50 ரூபாய் என்று இருந்தது. அந்த இளைஞன் தனது சட்டைப் பையில் கைவைத்து ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு பணம் செலுத்துவதற்காக சரியாக சில்லறையுடன் கொடுத்தான்.
அடுத்த நாள், இளைஞனும் நெருப்பு கோழியும் மீண்டும் வந்து, ”ஒரு சிக்கன் பிரைடு ரைஸ் மற்றும் ஒரு கோக்” என்று இளைஞன் சொன்னான். ”எனக்கும் அதே ஆர்டர் செய்யுங்கள்” என்று நெருப்புக்கோழி சொன்னது. பணிப்பெண் பில்லை கொண்டு வந்தாள். அந்த இளைஞன் தன் பாக்கெட்டில் வைத்து ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு சரியாக சில்லறையுடன் கொடுத்தான்.
இவ்வாறு அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது. நெருப்புகோழியும் அந்த இளைஞனும் வந்தார்கள் அவன் ஆர்டர்செய்ததையே நெருப்புகோழியும் கேட்டு சாப்பிட்டது. பில் செலுத்தும் போது பாக்கெட்டில் கைவைத்து ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு சரியாக சில்லறையுடன் கொடுத்தான்.
ஒரு நாள் அடுத்து வந்த ஒரு நாளில் இருவரும் வந்தார்கள். அந்த பணிப்பெண் அவர்களிடம் “வழக்கம் போலவே சிக்கன் பிரைடு ரைஸ். கோக்கும் கொண்டு வரட்டுமா?” என்று கேட்கிறாள். அந்தப் பணிப்பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்தது
“இல்லை, இன்று வெள்ளிக்கிழமை இரவு, அதனால் நான் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ், அப்புறம் சாலட். ஜூஸ் கொண்டு வாருங்கள்,” என்று அந்த இளைஞன் சொன்னான்.
“எனக்கும் அதே” என்கிறது நெருப்பு கோழி.
சிறிது நேரத்தில் பணிப்பெண் பில்லை கொண்டு வந்து கொடுத்து 1323.50 என்று சொன்னாள். அந்த இளைஞன் தன் பாக்கெட்டிலிருந்து சரியான சில்லறையை வெளியே எடுத்து மேசையில் வைக்கிறான்.
அந்த பணி பெண்ணுக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை அவளைக் கேட்டாள். “எப்படி ஒவ்வொரு முறையும் பாக்கெட்டில் இருந்து மேஜிக் போல சரியான சில்லறையை எடுத்து தருகிறீர்கள்?”
அந்த இளைஞன் சொன்னான், ”பல வருடங்களுக்கு முன்பு நான் மாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தேன், ஒரு பழைய விளக்கைக் கண்டேன், நான் அதைத் தேய்த்தபோது, ஒரு ஜெனி தோன்றி எனக்கு இரண்டு வரங்களை கொடுத்து. நான் கேட்ட முதல் வரம் என்னவென்றால், நான் எப்போதாவது பணம் செலுத்த வேண்டுமோ அந்த அளவு பணம் என் பாக்கெட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். நான் என் பாக்கெட்டில் கையை வைப்பேன், சரியான அளவு பணம் எப்போதும் இருக்கும்.”
பணிப்பெண் ”நீங்கள் ஒரு மிகச்சிறந்த புத்திசாலி! பெரும்பாலான மக்கள் ஒரு கோடி, இரண்டு கோடி அல்லது ஏதாவது ஒன்றைக் கேட்பார்கள், ஆனால் நீங்கள் வாழும் வரை நீங்கள் விரும்பும் அளவுக்கு பணக்காரராக இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு புத்திசாலி!”
" ஆமாம் ஒரு டீ வாங்க வேண்டும் என்றாலும் அல்லது ஒரு பெரிய மாளிகையை வாங்க வேண்டும் என்றாலும் சரி, சரியான அளவு பணம் எப்போதும் இருக்கும்" என்று பெருமையுடன் சொன்னான் அந்த இளைஞன்.
பணிப்பெண் கேட்டாள், ”அதுசரி ஆனால், இந்த நெருப்புக்கோழி பற்றி எனக்கு ஒன்னும் புரியவில்லை?"
அதற்கு அந்த இளைஞன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு ஓரிரு வினாடி கழித்து மிகவும் சோகத்துடன், ”இது எனது இரண்டாவது வரம், நான் எங்கு சென்றாலும் என்னுடன் சேர்ந்து, நான் சொல்வதையெல்லாம் ஒப்புக் கொள்ளும் நல்ல உயரமான ஒரு அழகான “சிக்” (Chick) பெண் துணை". கேட்டேன் என்றான்
கதையின் நீதி: ஒரு பெண்ணைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் வரை ஆண்களின் மூளை புத்திசாலித்தனமாக வேலை செய்யும்!
கதை #S929
நான்தான் கேக்கல
ஒரு வாடிக்கையாளர் மாட்டு லோன் வாங்குவதற்காக வங்கிக்கு சென்றார் அவரிடம் வங்கி மேலாளர் "ஏம்பா! மாடு வாங்கணும்ன்னு லோன் கேக்குறியே? பணத்தை ஒழுங்கா திருப்பி கட்டுவியா?"
"என்ன சார் நீங்க? கட்டலைன்னா மாடு ஓடிடாதா? நிச்சயமா கட்டி வைப்பேன் சார். "
"நான் கேட்டது மாட்டை இல்லை. "
"மாடுதான் இன்னும் வாங்கவே இல்லையே. அப்புறம் அதை எப்படி சார் கேப்பிங்க?"
"அப்ப வாங்கினப்புறம் கேட்டா?"
"வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது சார். "
"மாட்டை கேக்குறதுன்னு நான் சொன்னது மாட்டை இல்லை. "
"பின்னே எதை?"
"மாடு வாங்குனப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன். "
"மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படி குடுப்பேன்?"
"ஐயோ. சரி ஆரம்பிச்ச இடதுக்கே வருவோமா? கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை. "
"நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தானே கேட்டிங்க?"
"உன்னை ஏன் கட்டணும்?"
"என்னைக் கேட்டா? நீங்கதானே கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு சொன்னீங்க. அப்ப
என்னைன்னு தானே அர்த்தம். "
"கேட்டது உன்னைத்தான். "
"அப்பிடீன்னா ஏன் என்னைக் கட்டனும்னு நீங்களே சொல்லிடுங்க. "
"கட்டறதுன்னா மாடும், நீயும்தானா?
மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா?"
"மூணாவதான்னா? இங்க நீங்கதான் இருக்கிங்க. "
"என்னைப் பிடிச்சி கட்டிடு. இல்லேனா கடிச்சாலும் கடிச்சிடுவேன். "
"அப்பவே சொன்னாங்க! பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்ன்னு. "நான்தான் கேக்கல.
கதை #S928
எப்படி மகிழ்ச்சியா இருப்பது
ஒரு காட்டில் ஒரு காகம் இருந்தது. அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால் அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற எண்ணம் இருந்தது. பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல அதற்கு தோன்றியது. எந்தக் காக்கையுடனும் அது பழகுவதில்லை.
ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை அப்பகுதிக்கு வந்தது. அதன் அலகும் வளைந்துதான் இருந்தது. ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து திரிந்தது. இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது.
அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது கேட்காது என்பது. அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன்பின் இந்தக் காக்கையிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப் படுவதில்லை. எல்லோரிடமும் அது நன்றாகப் பேச ஆரம்பித்தது. சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி விட்டது.
ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான காக்கையிடம் அது பேச ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது பெருந்தலைவர் கேட்டது,
“நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நீ முன்பெல்லாம் கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே? இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?”
இந்த காகம் பதில் சொன்னது “நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப் பழகிக் கொண்டேன். அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. பிறர் சொல்லுக்கு பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன். இப்போது எனக்கு எப்போதும் உற்சாகம் தான்” என்றது
பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது. அப்போதுதான் இக்காக்கை கவனித்தது. பெரிய காக்கையின் அலகு தன் அலகை விட மோசமாக வளைந்திருந்தது.
கதை #S927
பணத்தாசை பிடித்தவன்
சீடர்களுடன் சென்று கொண்டிருந்த குருநாதருக்கு நேரமாகி போனதால் பசியெடுக்க ஆரம்பித்தது. வழியில் எதிர்ப்பட்டவரிடம், “இந்த ஊரில் தர்ம சத்திரம் எங்கிருக்கிறது?” என்று கேட்டார்.
“சுவாமி! தானம் செய்ய இங்கு ஆள் இல்லை. ஆனால், இங்கு உணவகம் ஒன்று இருக்கிறது. பணம் கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்” என்றார்.
சீடரில் ஒருவர் குருவிடம், “சுவாமி! உங்களை நேரில் பார்க்கும் போது எப்படிப்பட்டவரின் மனமும் மாறி விடும். நிச்சயம் அனைவருக்கும் இலவச சாப்பாடு கிடைக்கும்,” என்றார். எல்லாரும் உணவகத்தில் சாப்பிட்டனர். சீடர் எதிர்பார்த்ததற்கு மாறாக, உரிமையாளர் பணம் கேட்டார். மறுப்பேதும் சொல்லாமல் கேட்டதை கொடுத்து விட்டு குரு நடக்க ஆரம்பித்தார்.
“எத்தனை பெரியவர் நீங்கள். உங்கள் முகத்தைப் பார்த்தும் கூட அவருக்கு தர்மம் செய்ய மனம் இல்லையே? அவர் பணத்தாசை பிடித்தவர் போல இருக்கிறது,” என்று படபடத்தார் சீடர்.
துறவியோ சிரித்தபடி, “நீ கோபிப்பதில் நியாயம் இல்லை. உணவகம் நடத்துபவர் ஒரு வியாபாரி. வியாபாரம் நடத்துவதே லாபம் அடைவதற்குத் தான். அந்த நியதியை நமக்காக அவர் மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது நியாயமில்லை. தொழில் என்று வந்து விட்டால் அதற்குரிய தர்மத்தைக் கடைபிடிப்பது தான் முறை. காசு கொடுக்க மனமில்லாத உன்னை வேண்டுமானால் பணத்தாசை பிடித்தவன் என சொல்லலாம்,” என்றார் வேகமாக.
கதை #S926
செவ்வாய் கிழமை
ஒரு சிற்றரசில் அரசன் இருந்தான் அவன் கொஞ்சம் ஆத்திரக்காரன். எல்லாம் அவன் சொன்னபடி சொன்ன நாளில் நடந்து விட வேண்டும் அப்படி அவன் வேலை சொல்லி யாராவது செய்ய வில்லை என்றால் உடனே அவனை கொன்று விடுவான்.
அப்படித்தான் ஒரு நாள் அரண்மனையை வெள்ளை அடிக்க ஒரு ஆளை வேலைக்கு அமர்தினான். எப்பொழுது வேலையை ஆரம்பிப்பாய் என்று கேட்க! அவன் வரும் வாரம் செவ்வாய் கிழமை வேலையை ஆரம்பிப்பதாக வாக்குறுதி கொடுத்தான்! அந்த வாரம் வந்தது! காலை கண் விழித்த அரசன் காலண்டரை பார்த்தான் புதன் கிழமை!
வெள்ளை அடிக்க அவன் வரவில்லை! பொறுத்து பொறுத்து பார்த்து அவன் வரவில்லை என்று கோபம் கொண்டான்! உடனே தன் வாளை எடுத்து கொண்டு அந்த பெயிண்டர் வீட்டுக்கு சென்றான்! இரவு தாமதமாக வேலை முடித்து வந்த பெயிண்டர் உறங்கி கொண்டு இருக்க! அவனை எழுப்பி ஏன் இன்று புதன் கிழமை நேற்று ஏன் வேலைக்கு வர வில்லை என்று கேட்டான்!
அவன் பதில் சொல்லும் முன் தன் வாளால் அவனை கொன்றான்! அலறல் சத்தம் கேட்டு வந்த அவன் மனைவி அரசனிடம் ஏன் அவனை கொன்றீர்கள் என்று கேட்க!
அதற்கு அரசன் செவ்வாய் கிழமை அரண்மனைக்கு வெள்ளை அடிப்பதாக சொல்லிவிட்டு வராமல் போய் விட்டான் அதான் என்றான்.
அவன் மனைவி அழுது கொண்டே சொன்னாள் இன்று தான் செவ்வாய் கிழமை! அரண்மனைக்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்று நேற்றே எல்லா பொருளையும் வாங்கி வைத்துள்ளார் பாருங்கள்!
நீங்கள் தான் தேதியை தப்பாக பார்த்து வந்துள்ளீர்கள் என்றார். அரசனும் வேக வேகமாக அரண்மனை வந்து காலண்டரை பார்க்க தவறி போய் இரண்டு தேதிகளை கிழித்து இருந்தான்!
@Tamilstory
Story List #SL21
கதை பட்டியல் 1001 – 1050
______________________
கதை #S1001 சேமிப்பு
கதை #S1002
கதை #S1003
கதை #S1004
கதை #S1005
கதை #S1006
கதை #S1007
கதை #S1008
கதை #S1009
கதை #S1010
கதை #S1011
கதை #S1012
கதை #S1013
கதை #S1014
கதை #S1015
கதை #S1016
கதை #S1017
கதை #S1018
கதை #S1019
கதை #S1020
கதை #S1021
கதை #S1022
கதை #S1023
கதை #S1024
கதை #S1025
கதை #S1026
கதை #S1027
கதை #S1028
கதை #S1029
கதை #S1030
கதை #S1031
கதை #S1032
கதை #S1033
கதை #S1034
கதை #S1035
கதை #S1036
கதை #S1037
கதை #S1038
கதை #S1039
கதை #S1040
கதை #S1041
கதை #S1042
கதை #S1043
கதை #S1044
கதை #S1045
கதை #S1046
கதை #S1047
கதை #S1048
கதை #S1049
கதை #S1050
https://www.facebook.com/tamilkuttystorys
_________________
Previous Next
முந்தைய
#SL20 அடுத்த#SL22
மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.
அப்போது குரு, “முதல்பாடம் முடிந்தது. இப்போது இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறது. இப்போது நீ உன்னுடைய தூக்கத்திலும் விழிப்போடு இருக்கவேண்டும். உன்னுடைய கதவுகளை திறந்து வைத்திரு. ஏனெனில் நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன். என்றார். இது உண்மையிலேயே கடினமானது.” ஆரம்பத்தில் அவர் வந்து அவனை கடினமாக அடித்தார். வயதானவருக்கு இரண்டு மணி நேர தூக்கம் போதுமானது. ஆனால் இவன் இளைஞன். இவனுக்கு எட்டு மணி நேர தூக்கம் தேவை. ஆனால் முழு இரவும் போராட்டமாக இருந்தது. பலமுறை குரு வந்து அவனை அடித்தார். ஆனால் முதல் பாடம் மிகவும் சிறப்பாக அவனை மிகவும் கவனமானவனாகவும் அமைதியானவனாகவும் மாற்றியிருந்ததால் அவன் இந்த முறை அவரை, இது என்ன மடத்தனம், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என கேட்கவில்லை. குருவோ, “கவலைப்படாதே. தூக்கத்தில் கூட கவனமாக இரு. நான் எவ்வளவு கடினமாக உன்னை அடிக்கிறேனோ அவ்வளவு விரைவாக தூக்கத்தில் கூட சுதாரிப்பாவாய். சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும், அவ்வளவுதான்.” என்றார்.
மூன்று மாதங்களுக்குள்ளாகவே அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். அவன் உடனடியாக தனது கண்களை திறந்து, “இருங்கள். இதற்கு அவசியமில்லை. நான் விழித்திருக்கிறேன்.” என்பான். மூன்று மாதங்களுக்கு பிறகு குரு, “நீ இரண்டாவது பாடத்திலும் தேர்ந்து விட்டாய். இப்போது மூன்றாவதும் கடைசியுமானது.” என்றார். இளைஞன், “இரண்டு நிலைகள் நடப்பது, தூங்குவது தானே இருக்கின்றன. மூன்றாவது என்னவாக இருக்கும்” என்றான். குரு, “இப்போது நான் உன்னை உண்மையான கத்தியினால் அடிக்கப்போகிறேன். இதுதான் மூன்றாவது. என்றார்.
மரக்கத்தியினால் அடிக்கப்படுவது பரவாயில்லை. ஏனெனில் அதிகபட்சமாக பலமாக அடிபடும் அவ்வளவே. நீ இறந்து விடமாட்டாய்.” இப்போது குரு உண்மையிலேயே அசல் கத்தியை கொண்டு வந்தார். அவர் உறையிலிருந்து அசல் கத்தியை எடுத்தவுடன் இளைஞன் முடிந்தது நான் செத்தேன். இது ஒரு அபாயகரமான விளையாட்டு. அவர் இப்போது உண்மையான கத்தியினால் குத்தப் போகிறார். நான் கவனமின்றி ஒருமுறை இருந்தால்கூட அவ்வளவுதான் நான் முடிந்தேன். என நினைத்துக் கொண்டான். ஆனால் அவன் ஒருமுறை கூட தவற விடவில்லை. விஷயம் மிகவும் அபாயமானதாக இருக்கும்போது நீயும் அந்த அபாயத்தை சந்திக்கும் அளவு சக்தி பெற்று விடுவாய். மூன்று மாதங்களில் குருவால் அவனை ஒருமுறை கூட உண்மையான கத்தியால் அடிக்க முடியவில்லை.
பின் குரு, “உன்னுடைய மூன்றாவது பாடமும் முடிந்தது. – நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ புறப்படலாம். நீ போய் உன் தந்தையிடம் எனக்கு உன்னைப் பற்றி முழுத் திருப்தி என்பதை சொல்.” என்றார்.
நாளை காலை அவன் புறப்படப் போகிறான். அன்று மாலை சூரியன் மறைந்துக் கொண்டிருந்தான். குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். இளைஞன் வேறு எங்கோ அமர்ந்திருந்தான். அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த கிழவனை அடிக்க வேண்டும். என்று தோன்றியது. இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை விட்டால் இனி முடியாது. நாளை காலை நான் புறப் பட வேண்டும் என எண்ணினான். அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான்.
அப்போது குரு, “நிறுத்து” எனக் கூறினார். அவர் அவனை பார்க்கக் கூட இல்லை. “இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல அதிலும் நான் உன் குரு” என்றார். இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. “ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே” எனக் கேட்டான்.
குரு, “ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய். முன்பெல்லாம் எனது காலடி சத்தத்தை உனது தூக்கத்தில் உன்னால் கேட்க முடியாமலிருந்தது. ஆனால் இப்போது தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட எனது காலடி ஓசையை உன்னால் கேட்க முடியும். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். சொல்லப்படாத எண்ணங்களையும் உன்னால் படிக்க முடியும். உள்ளுணர்வை தெரிந்து கொள்ள முடியும். உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். அது உனது முயற்சியினால் அல்ல நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால் பிரதிபலிப்பாய். அவ்வளவே.” என்றார்.
கதை #S925
குருவின் பாடம்
ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான். ஆனால் அவனுக்கு அவசரம். ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார்.
தந்தை, “என் வாழ்வில் நான் அதிக காலங்களை தேவையின்றி வீணடித்து விட்டேன். பின்புதான் வாழ்வில் ஒரே அர்த்தமுள்ள விஷயம், மதிப்பிற்குரிய விஷயம் தியானம் என அறிந்தேன். அதனால் உனது காலத்தை வீணடிக்காதே”. என தன் மகனிடம் கூறிவிட்டு, “நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்ய கற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வா. நீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு விட்டால் நான் சந்தோஷமாக இறப்பேன். நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாது. இந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றது. இது உனது உண்மையான அரசாங்கம் அல்ல. உனக்கு இந்த ராஜ்ஜியத்தை கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீ தியானம் செய்ய உதவியிருந்தால்தான் நான் உண்மையான மகிழ்ச்சியடைவேன்”. என்றார்.
அதனால் இளவரசன் இந்த ஜென்குருவிடம் வந்து, “நான் அவசரத்திலிருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் எந்த விநாடியும் இறந்து விடுவார்.” எனக் கூறினான்.
குரு, “தியானத்திற்கான முதல் அடிப்படையே அவசரப்படக்கூடாது என்பதுதான். பொறுமையில்லாதது வேலைக்காகாது. போ வெளியே, இங்கிருந்து போய்விடு திரும்பவும் இங்கே வராதே. யாராவது ஒரு போலி குருவை கண்டுபிடிக்க முயன்று பார். அவர் ஜபிக்க ஒரு மந்திரம் சொல்லித் தருவார், இதை காலை பதினைந்து நிமிடம், மாலை பதினைந்து நிமிடம் அமர்ந்து சொல்லி வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்று உனக்கு ஆறுதலாகக் கூறிவிடுவார்.
ஆனால் நீ இங்கிருக்க விரும்பினால் கால நேரத்தை மறந்து விடு. ஏனெனில் தியானம் அழிவற்றதை தேடுவது. உனது வயதான தந்தையை பற்றி மறந்து விடு. எப்போதும் யாரும் இறப்பதில்லை. என்னை நம்பு. ஒருநாள் நான் கூறுவதை உண்மை என நீ உணர்வாய். யாருக்கும் எப்போதும் வயதாவதுமில்லை, யாரும் இறப்பதுமில்லை. கவலைப்படாதே. எனக்கு உன் தந்தையை தெரியும். ஏனெனில் அவர் என்னிடம்தான் தியானம் கற்றுக்கொண்டார். அவர் இறக்கப்போவதில்லை. அவரது உடல் அழியலாம். ஆனால் நீ தியானம் கற்றுக்கொள்ள விரும்பினால் நீ உனது தந்தை உனது அரசாங்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து இருக்க வேண்டும். அதற்கு ஒருமுனைப்பட்ட அர்ப்பணிப்பு வேண்டும்.” என்றார்.
அந்த குரு அப்படிப் பட்டவர். அவரது இருத்தல் வலிமையானது. அந்த இளைஞன் தங்க முடிவெடுத்தான். மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. குரு தியானத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த இளைஞன் குருவுக்கு எல்லாவழிகளிலும் சேவை செய்து வந்தான். காத்திருந்தான், காத்திருந்தான், அவன் அதைப்பற்றி குறிப்பிடக்கூட அஞ்சினான். ஏனெனில் இங்கிருந்து வெளியே போய்விடு, நீ மிகவும் அவசரப்படுகிறாய் எனக் கூறிவிட்டால். அதனால் அவன் அதைப் பற்றி பேசக் கூட இல்லை.
ஆனால் மூன்று வருடங்கள் என்பது மிக அதிகம். முடிவில் ஒருநாள் காலை குரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, “குருவே, மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் இன்னும் எனக்கு தியானம் என்பது என்ன. அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கூட கூறவில்லை.” எனக் கேட்டான்.
குரு அவனை திரும்பி பார்த்துவிட்டு, பின்னர்,” நீ இன்னும் அந்த அவசரத்திலேயே இருக்கிறாய். சரி, இன்று உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன்.” என்றார். அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். இளைஞன் கோவிலின் தரையை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். மிகவும் பலமாக தாக்கினார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது வந்து குரு தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட உன்னால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும்.
இளைஞன், என்ன வகையான தியானம் இது என நினைத்தான். ஏழு நாட்களில் அவன் மிகவும் சோர்ந்து போனான். காயங்களும் சிராய்ப்புகளும் அடைந்த அவன் குருவிடம், “என்ன செய்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.” எனக் கேட்டான். குரு “இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. கவனமாயிரு, தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி” என்றார்.
தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். அவர் ஒரு பூனையைப் போல வருவார். பூனை எலியை பிடிக்க போகும்போது மிகவும் மெதுவாக சப்தமின்றி போகும். குரு உண்மையிலேயே வயதான பூனை போல. ஆனால் இளைஞன் கவனமாகி விட்டான். அவன் அவருடைய காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று
கதை #S924
வெட்டும் முறை
ஒரு வீட்டில் பலா மரம் இருந்தது. அதில் இரண்டு பலாப்பழங்கள் நன்கு பழுத்திருந்தன. ஒருநாள் அப்பா அந்தப் பலாப்பழங்களை அறுத்து வீட்டினுள் கொண்டுவந்தார். “ஒரு பெரிய கத்தியை எடுத்துகிட்டு வந்து உட்காரு” என்றார் அவனிடம். அப்பாவும் மகனும் ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்துக்கொண்டார்கள். அறுத்துச் சுளை எடுக்க ஆரம்பித்தார்கள்.
சில நிமிடங்களில் அப்பா அந்த முதல் பழத்தை இரண்டாகப் பிளந்து சுளைகளைப் பிரித்து எடுத்துப் பாத்திரத்தில் போட்டுவிட்டார். ஆனால் மகன் இன்னும் போராடிக்கொண்டிருந்தான். அப்பா சிரித்தார். அவனிடம் இருந்த பழத்தை வாங்கிச் சரசரவென்று ஏதோ வித்தை செய்தார். சுளைகள் தானாக உதிர்ந்து விழுந்தன. மகன் ஆச்சர்யத்தோடு கேட்டான்.
“பலாப்பழத்தை அறுக்கறது ரொம்பக் கஷ்டம்ன்னு சொல்வாங்க. ஆனா நீங்கமட்டும் இப்படிப் படபடன்னு அறுத்து முடிச்சுடறீங்களே.
எப்படி? உங்களோட கத்தி ரொம்பக் கூர்மையா இருக்கறதாலயா?”
“விஷயம் கத்தியில இல்லை” என்றார் அப்பா. “பலாப்பழத்தை நறுக்கும்போது சில இடங்கள்ல பழம் நாம வெட்டறதுக்கு வசதியா வளைஞ்சுகொடுக்கும், வேற சில இடங்கள்ல என்னை வெட்டாதேங்கறமாதிரி எதிர்த்துநிற்கும். “எனக்கு இந்தப் பழம் எங்கே வளையும், எங்கே எதிர்க்கும்ன்னு தெரியும். அதுக்கு ஏத்தமாதிரி என் கத்தியை இடம் மாத்துவேன், அதிக எதிர்ப்பு உள்ள இடங்கள்ல போராடாம, குறைவான எதிர்ப்பு உள்ள இடங்கள்ல கவனம் செலுத்துவேன், அதனால கொஞ்ச நேரத்தில, கொஞ்சம் உழைப்பிலயே பழம் நல்லா வெட்டுப்பட்டுடும்!”
நாம் செய்கிற வேலை எதுவானாலும், அதன் இயற்கைக் குணங்களை எதிர்த்து நிற்பதில் சக்தியை வீணடிக்காமல் ஓட்டத்தோடு மிதக்கப் பழகினால் அதிகம் சிரமப்படாமல் கூடுதல் தூரம் முன்னேறமுடியும்.
கதை #S923
நண்டு போதனை
ஒரு அழகிய கடற்கரையில், அம்மா நண்டு தன் குட்டி நண்டை அழைத்துச் சென்றாள். அந்த குட்டி நண்டு பக்கவாட்டில் நடந்து சென்றது.
"மகனே! ஏன் இப்படி பக்கவாட்டில் நடக்கிறாய்? நேராக நட!" என்று அம்மா நண்டு அன்புடன் கண்டித்து.
"அம்மா, எப்படி நேராக நடக்க வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள். நான் நிச்சயம் நேராக நடந்து காட்டுகிறேன்," என்று குட்டி நண்டு பதிலளித்தது.
அம்மா நண்டு பல முயற்சிகள் செய்தும், குட்டி நண்டு நேராக நடக்க முடியவில்லை. எப்போதும் பக்கவாட்டில் தான் சென்றது.
"சரி, உன் விருப்பம் போல நட," என்று அம்மா நண்டு சோர்வடைந்து சொன்னது.
அந்த நேரத்தில், அங்கு வந்த ஓர் ஞானி நண்டைப் பார்த்து, "நண்டு, ஏன் வருத்தப்படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அம்மா நண்டு நடந்ததை விளக்கிது. ஞானி நண்டு புன்னகைத்து, "உபதேசத்தை விட, உதாரணம் சக்தி வாய்ந்தது," என்றார்.
அதைக் கேட்டு, அம்மா நண்டுக்கு ஒரு யோசனை தோன்றியது.
அடுத்த நாள், அம்மா நண்டு தன் குட்டி நண்டை முன்னால் நடத்திக் கொண்டு சென்றது. அம்மா நண்டு நேராக நடந்து சென்றது. குட்டி நண்டு தன் அம்மாவைப் பின்பற்றி, நேராக நடக்க முயன்றது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, குட்டி நண்டு தானாகவே நேராக நடக்க கற்றுக் கொண்டது.
