ar
Feedback
🐚ஜீவநாடி~உண்மைகள்💎

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

الذهاب إلى القناة على Telegram

சித்தர்களின்.. ஒளிநிலை இறையாளர்களின்.. ஒரு ஊடகமாக..உள்ள ஜீவநாடி பற்றிய உண்மைகளையும், அனுபவ பலன்களையும்.. பகிரும் தளம்.

إظهار المزيد
1 803
المشتركون
-124 ساعات
-37 أيام
+2930 أيام
أرشيف المشاركات
Photo from R J N
Photo from R J N

Photo from R J N
Photo from R J N

*தினம் ஒரு சித்தவேத சிந்தனை* *மணிபூரகம்* *ஜூலை 17*

👁️ ஞான ரதம் 👁️ (நிஷ்டை👁️குறியில் தவம்) இரவு பகலெல்லாம் ஓட்டும் சாதகனே.. இறையை உணரலாம்!! இறைவனாக லாம்!! 👌🦜🙏

// இந்த உடல்! ஒரு பூமி கடன் // பூமித் தாயிடம் வாங்கிய கடன் இந்த உடல்! திருப்பிக் கட்டத்தான் வேண்டும் வட்டியும் முதலும் சேர்த்து ! இதற்கு இடையில் ... நான் 'பெரியவன்' என்ற திமிர்! என் 'சொத்து' என்ற மயக்கம்! பிடிக்கும்-பிடிக்காது என்ற.. என்ற பேதங்கள் ஆணவ அதிகார கணக்குகளாக! கடைசியில் ... ஆண்டதும் இல்லை மாண்டதும் இல்லை! மண் தந்தது... மண் தின்றது ! நடுவில் நாம் வெறும் கனவு ! "இதுதான் உண்மை" என்றால் "சிந்தித்து செயல்படுங்கள்"!! வாழ்க்கை எனும் இந்தப் பயணத்தில் 'நன்மை- தீமை' இரண்டையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். "மனிதர்கள் மாறுவார்கள்" 'சில விஷயங்கள்' தவறாகப் போகலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்! 'வாழ்க்கைப் பயணம்' தொடர்ந்து கொண்டே இருக்கும்.!!

அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

🛕 கோபுர தரிசனம் 360° *🏛️ அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோவில்.* *✨ பகுதி – 2* (திருக்கருக்குடி / மருதாந்தநல்லூர்) > ✨ "சோழர் கட்டிடக்கலையின் சிறப்பையும், சிவபக்தியின் மகிமையையும் ஒருசேர உணர்த்தும் தேவாரத் திருத்தலம்...!" --- 🏛️ தென்னிந்திய கட்டிடக்கலை 🔱 இத்திருக்கோவில் சோழர் கால கட்டிடக்கலையின் அழகை வெளிப்படுத்தும் சிறந்த சிவாலயமாக விளங்குகிறது. 🛕 கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், விசாலமான பிரகாரங்கள், அழகிய மண்டபங்கள் மற்றும் நேர்த்தியான கருவறை அமைப்பு ஆகியவை பக்தர்களை ஆன்மிக அமைதிக்குள் அழைத்துச் செல்கின்றன. 🪨 கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள கருவறை, காலத்தை வென்ற கட்டிடக் கலைஞர்களின் திறமையை இன்றும் பறைசாற்றுகிறது. --- 📜 கல்வெட்டுகள் 🪔 சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் இத்தலத்தில் காணப்படுகின்றன. 📖 அவற்றின் மூலம் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள், விளக்குத் தானங்கள், பூஜை முறைகள் மற்றும் திருப்பணிகள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய முடிகிறது. 🏛️ இக்கல்வெட்டுகள் தமிழகத்தின் சமய, சமூக மற்றும் நிர்வாக வரலாற்றிற்கு முக்கியமான ஆதாரங்களாக உள்ளன. --- 🌟 அரிய சிறப்புகள் 🌍 இத்தல மூலவர் பிருத்வி (மண்) தத்துவத்தின் மகிமையை உணர்த்தும் சிவலிங்கமாக போற்றப்படுகிறார். 🙏 பிரம்மதேவர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால், பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமமும் சிறப்பாக வழங்கப்படுகிறது. 🕉️ தட்சிணாமூர்த்தி சன்னதி, விநாயகர், முருகப்பெருமான், சந்திகேஸ்வரர் மற்றும் பிற பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன. 🌿 அமைதியான சூழலும், பசுமை நிறைந்த திருத்தல வளாகமும் தியானத்திற்கு ஏற்ற ஆன்மிக அனுபவத்தை அளிக்கின்றன. --- ✨ காணத் தவறாதவை 🔸 🛕 சோழர் கால கட்டிடக்கலை 🔸 🪨 பண்டைய கருவறை அமைப்பு 🔸 📜 வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகள் 🔸 🌳 புனித வில்வத் தலமரம் 🔸 🙏 பிரம்மதேவர் வழிபட்டதாகப் போற்றப்படும் சிவலிங்கம் --- 🙏 கல்லிலும் கலை... கட்டிடத்திலும் பக்தி... ஒவ்வொரு கல்லும் சிவமயம் என்று உணர்த்தும் புனிதத் திருத்தலம் இது...! https://whatsapp.com/channel/0029VbBE7PbKWEKlLwtBdR1P --- ✨ அடுத்த பதிவில்... 🙏 வழிபாட்டு முறை • முக்கிய விழாக்கள் • தரிசன பலன்கள் • இறைச் சிந்தனை ஆகியவற்றைப் பார்ப்போம். தொடரும்... 🕉️ சித்தமெல்லாம் சிவமயத்துடன் சிவபாத சேகரன் 🙏

*இறை நாம ஜெபமும் தியானமும்.!* ஜெபமும் தியானமும் செய்வதால் வரப்போகும் துன்பத்தை நீக்கிக்கொள்ள முடியுமா? தீவினைகள் மூன்று வகைப்படும். அவையாவன: வந்தவை, வந்திருப்பவை, வரவிருப்பவை. இவற்றைத் தொலைக்கக்கூடியது இறை நாமஜபம். நோய் வந்தால் சில மருந்துகளை உட்கொண்டு நோயை நீக்கிக்கொள்கிறோம். மேலும் வரவிருக்கும் நோயையும் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் முன்பே தவிர்த்துக்கொண்டுவிடவும் இயலும் அல்லவா? அதுபோல், வரவிருக்கும் தீவினைகளையும் இறைவனிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதால், போதிய அளவு மேற்கொள்ளப்படும் ஜபம், தியானம் போன்ற தவ சாதனைகளினால் விலக்கிக்கொண்டுவிடலாம். அல்லது வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிடலாம். சில பரிகாரங்கள், தான தர்மங்கள் போன்றவற்றாலும் துன்பங்களை நீக்கிக்கொள்ள முடியும். பொதுவாக மாசில்லாத பக்தி கொண்டவர்கள், துன்பங்கள் நீங்கவேண்டும் என்றுகூட இறைவனிடம் வேண்டுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் துன்பம் சூழ்ந்தபோதும் அதைத் தாங்கும் சக்தியையும் இறைவன் அருளால் பெறுகிறார்கள்... பக்தியால் இறைவனை அடைய கூடிய மிக எளிமையான ஒரு வழி.... நமக்கு பிடித்த இறைநாமத்தை (ஓம், ஓம் கம் கணபதியே நமஹ, ஓம் சூர்யாய நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் சரவணபவ, ஓம் சக்தி, ஓம் நமோ நாராயண, ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜேய் ஜேய் ராம், ஹரேராம ஹரேராம ராம ராம ஹரே ஹர ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...) தினமும் நம் தினசரி பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும் போது மனதில் தியானித்து கொண்டே இருப்பது தான் நாம ஜெபம்... முக்தி அடைவதற்கு மிக விரைவான ஒரு வழியாக இருப்பது பக்தி மட்டுமே... நாமும் இறை நாம ஜெபத்தை தொடங்க முயற்சி செய்வோம்.. *ஆன்மீக வாழ்க்கைக்கு !!

நித்திய ஆனந்தத்திற்கு வழி உடனே காகபுஜண்டர் கருடனை ஆசீர்வதித்து, “உலகில் வாழும் அனைவரிடமும் இந்த ஞானத்தைப் பகிர்ந்துகொள். மரணத்தை நினைத்து அஞ்சுபவர்களுக்கு ஆத்மாவின் உண்மையை எடுத்துரைத்து, தர்மத்தின் வழியில் வாழ்வதே நித்திய ஆனந்தத்திற்கு வழி என்பதை உணர்த்துவாயாக,” என்றார். அன்றிலிருந்து கருடன் மரணத்தைப் பற்றிய அச்சத்தை முற்றிலும் விட்டுவிட்டு, பிறப்பு–இறப்பின் சுழற்சியைத் தாண்டும் ஞானமே மனித வாழ்க்கையின் மிகப் பெரிய செல்வம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். காகபுஜண்டரின் உபதேசங்கள் ஆன்மிக உலகில் உயர்ந்த ஞானமாகப் போற்றப்படுகின்றன. தெரிந்து கொள்ளுங்கள்.... 🙏🏻🥹🙏🏻🥹🙏🏻