Winners tnpsc
الذهاب إلى القناة على Telegram
💥What you can get in this channel - 💥 @winerzz YouTube link https://youtube.com/channel/UCMxcFcmAskiUFgeOsXagb4Q 🔥General studies and Current Affairs quiz 📋⏰ 🔥TNPSC BITS - which contains facts📜📚 🔥PDF of Samacheer Books📖
إظهار المزيد5 945
المشتركون
+124 ساعات
+217 أيام
+7030 أيام
أرشيف المشاركات
5 951
செப்டம்பர் 25,
உலக மருந்தாளுநர் தினம்.
(World Pharmacist Day)
துருக்கி நாட்டு இஸ்தான்புல்லில் கூடிய உலக மருந்தியல் கூட்டமைப்புப் பேரவையானது, செப்டம்பர் 25-ம் நாளை சர்வதேச மருந்தாளுநர் தினமாக அறிவித்தது.
உலகில் உள்ள மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களுக்குரிய பங்கினை ஊக்கப்படுத்தி, எடுத்துரைக்கும் விதமாக நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பது, மக்கள் ஆரோக்கியத்திற்கு மருந்தாளுநர்கள் வழங்கும் பல நன்மைகளைப் பிரதிபலிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்தில் மருத்துவருக்கும் , மருந்தாளுநர்களுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. ஏனெனில் மருந்தாளுநர் இல்லையேல் மருந்தியல் இல்லை, மருந்தியல் இல்லையேல் மருத்துவம் இல்லை.
இன்றையக் காலகட்டத்தில் உணவுக்கு இணையான பங்கு மருந்துக்கும் உள்ளது எனில் மருந்தும் மருந்தாளுநர்களும் பிரிக்க முடியாத சக்திகளாகவே உணர முடிகிறது.
மருந்தாளுநர்கள் தங்களின் வாழ்வாதாரமே மக்களுக்கு மருந்து அளிப்பதை சேவையாகக் கொண்டுள்ளதால் எவ்விதத்திலும் புறக்கணிக்க முடியாத அத்தியாவசியமான பொறுப்பு மருந்தாளுநர்களுடையது.
5 951
வரலாற்றில் இன்று.செப்டம்பர். 28
எழுத்தாளர் மகரிஷி நினைவு தினம் இன்று (2019).
மகரிஷி என்ற புனைபெயரைக் கொண்ட பாலசுப்பிரமணி ஐயர் தமிழக எழுத்தாளர் ஆவர்.
மகரிஷியின் பிறந்த ஊர் தஞ்சாவூர். சேலத்தில் வசித்தவர். இவர் தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவனத்தில் பணியாற்றினார்.
மகரிஷி என்ற பெயரில் இவர் கிட்டத்தட்ட 130 புதினங்கள், 5 சிறுக்கதைத் தொகுப்புகள், 60 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் முதலாவது புதினம் "பனிமலை" ஆகும். இதன் கதை 1965 இல் "என்னதான் முடிவு" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.
இவரது ஏனையக் கதைகள் பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), மற்றும் நதியை தேடி வந்த கடல் (1980) ஆகிய திரைப்படங்களாக வெளிவந்தன.
5 951
வரலாற்றில் இன்று.செப்டம்பர். 28
ஷீரடி சாய்பாபா பிறந்த தினம் இன்று(1838).
ஜாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களாலும் போற்றிக் கொண்டாடப்படும் ஆன்மீக மகான் ஷிர்டி சாய்பாபா செப்டம்பர் 28 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் பிறந்தார்.
ஷீரடியில் பழைய மசூதி அருகே வேப்பமரத்தின் அடியில் 8 வயதில் தியானம் செய்தார். பின்னர், ஊரை விட்டுச் சென்றார், 16 வயதில் ஒளிபொருந்திய தோற்றத்துடன் ஷீரடி திரும்பினார். அவரைப் பார்த்த பூசாரி, 'ஸ்வாமி" என்று பொருள்படும் வகையில் 'சாய்" என்று அழைத்தார். 'அப்பா" என்று பொருள்படும் வகையில் 'பாபா" என்றும் அழைக்கப்பட்டார்.
எண்ணிலடங்கா பக்தர்களால் போற்றி வழிபடப்பட்டு வரும் ஷீரடி சாய்பாபா 82ஆவது வயதில் மறைந்தார்.
5 951
வரலாற்றில்இன்று செப்டம்பர் 28
சீன பகுத்தறிவாளர், தத்துவஞானி கன்ஃபூசியஸ் பிறந்த தினம்...
அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன.
கன்ஃபூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி, போர்வீரன், இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர், சீனமரபினை வளர்த்து எடுத்தவர், அரிய தத்துவ ஞானி, இப்படி அவரது ஆளுமை பன்முகப்பட்டது,
வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உருவான ஞானத்தைக் கொண்டே அவர் தனது அறக்கருத்துகளை உருவாக்கியிருக்கிறார், "கன்ஃபூசியஸின் சிந்தனைகளை மாபெரும் கற்றல்" என்று கூறுகிறார்கள்...
5 951
செப்டம்பர் 28,
பசுமை நுகர்வோர் தினம்.
(Green Consumer Day)
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாகக் கொண்டாடி வருகிறது.
5 951
செப்டம்பர் 28,
உலக ரேபிஸ் தினம்.
உலக வெறி நோய் தினம் என்றும் சொல்லலாம்.ரேபிஸ் என்பது ஒருவகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது.
ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாகக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.
கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.
5 951
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற
சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தினம் இன்று.
( 28 செப்டம்பர் 2018 )
இத்தீர்ப்பினை எதிர்த்து கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரின் போராட்டங்கள் நடைபெற்றது.
5 951
செப்டம்பர் 28,
பகத் சிங்.
விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் 1907ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பாகிஸ்தானிலுள்ள பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார்.
கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும் என்று சிறுவயதிலேயே கனவு கண்டவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த போது இவருக்கு 12 வயது.
சைமன் குழு 1928-ல் இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அமைதிப் பேரணி நடத்தினார். துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம்.
இவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். இவர் தி டோர் டு டெத், ஐடியல் ஆப் சோஷலிஸம் போன்ற நூல்களை எழுதினார்.
ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு பெறச் செய்த புரட்சியாளரான மாவீரன் பகத் சிங் 24-வது வயதில் (1931) ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
5 951
செப்டம்பர் – 28
பசுமை நுகர்வோர் தினம்
(Green Consumer Day)
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது.
5 951
செப்டம்பர் 28
உலக ரேபிஸ் தினம்
(World Rabies Day)
ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ். இது வௌவால், நரி, ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும்.
ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும்.
இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார்.
இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
5 951
📰 *நாளும் ஒரு செய்தி*
ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.
📆 *இன்று செப்டம்பர் 28-*
▪️ *உலக எரிமலை நாள்.*
▪️ *உலக துப்பாக்கி சுடுபவர்கள் நாள்.*
▪️ *உலக வெறிநாய்க்கடி நோய் நாள்.*
▪️ *அனைத்து வித தகவலையும் பெறுவதற்கான பன்னாட்டு நாள்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕கி.மு 551- *கன்பூசியஸ்* (சீன மெய்யியலாளர்)
⭕1907- *பகத்சிங்* (புரட்சியாளர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்)
⭕1929- *லதா மங்கேஷ்கர்* (இந்திய பின்ணனிப் பாடகி)
5 951
ஆசிய விளையாட்டு போல் வால்ட் போட்டியில் தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன்,
4.15 - மீட்டர் உயரத்தை கடந்து வெண்கலம் வென்றார்.
போல் வால்ட் போட்டியில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்று சாதனை.
