TVK VETTRI KURAL
Kanalga Telegram’da o‘tish
3 931
Obunachilar
-624 soatlar
-427 kun
-16230 kun
Postlar arxiv
3 931
வெற்றிப் பயணம் திட்டம் - ஒரு புதிய புரட்சி!
வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள், தாய்மார்கள் என தினமும் போக்குவரத்திற்காக பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் 84.32 லட்சம் பெண்களுக்கு இந்தத் திட்டம் பயணச் செலவை மட்டுமல்ல… குடும்பத்தின் மாதச் செலவையும் குறைக்கும் ஒரு நேரடி நிவாரணம்.
12,695 பேருந்துகள் | 1,68,500 திட்டமிடப்பட்ட தினசரி சேவைகள் -
நகரங்களைத் தாண்டி Express, LSS, Deluxe, Mofussil, Ghat Ordinary என பல்வேறு சேவைகளிலும் விரிவாக்கம்.
பெண்களின் பயணத்தை எளிதாக்கி, சேமிப்பை உயர்த்தி, அவர்களின் சுதந்திரத்துக்கும் கனவுகளுக்கும் துணை நிற்கும் திட்டம்!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைத்து, அக்குடும்பத்தினரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களால் அரவணைக்கும் முதல்வர் நம் வெற்றித் தலைவர் அவர்கள்!
தாய்மார்களுக்கு ஒரு தம்பி…
தங்கைகளுக்கு ஒரு அண்ணன்…
பெண்களின் கனவுகளுக்கு ஒரு துணை…
கர்வத்தோடு பயணிப்போம்!
தலை நிமிர், சிங்கப்பெண்ணே!
#VettriPayanam
3 931
+4
வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு!
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TVKForTN #VoteForTVK #VoteForWhistle@tvkvettrikural
3 931
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுதொடர்பான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#tvk@tvkvettrikural
3 931
+3
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வெற்றித் தலைவர்
#CMVijayInMadurantakam
#tvk@tvkvettrikural
3 931
+1
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வெற்றித் தலைவர்
#CMVijayInMadurantakam
#tvk@tvkvettrikural
3 931
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
