uz
Feedback

Firibgarlarga uchmang! Telemetrio bunday kanallarni topadi va belgilaydi 👉 Belgini ko‘rmoqchi bo‘lsangiz, obuna bo‘ling 👈

❤️Tamil Comics Books❤️🧜‍♀(படக்கதை பகிர்வுகள்)🧜‍♀

❤️Tamil Comics Books❤️🧜‍♀(படக்கதை பகிர்வுகள்)🧜‍♀

Kanalga Telegram’da o‘tish
1 856
Obunachilar
Ma'lumot yo'q24 soatlar
+157 kun
+8230 kun
Postlar arxiv
+4
கல்கியின்_பொன்னியின்_செல்வன்_காமிக்ஸ்_பாகம்_5.pdf132.12 MB

பொன்னியின் செல்வன் (5பாகங்களும்).pdf

நகைச்சுவைக்_கதைகள்_–_சிறுகதைகள்_–_அரவிந்த்_சச்சிதானந்தம்.pdf4.92 KB

பயநத கரஙகக கடட - 25.05.2022.pdf8.45 MB

+8
ஜில் ஜில் - ஜூலை 1950 - 14.04.2022.pdf18.90 MB

பயந்த_குரங்குக்_குட்டி_25_05_2022.pdf8.45 MB

+5
நந்து_சுந்து_மந்து_வாண்டுமாமா.pdf36.54 MB

+3
அரசகுமாரி_ஆயிஷா_வாண்டுமாமா_காமிக்ஸ்.pdf15.22 MB

வாண்டுமாமா ஸ்பெஷல்

அந்த மரத்தின் இருள் போர்வைக்குள்ளே தன்னை ஒளித்துக் கொண்டு வெகுநேரமாகக் காத்திருந்தது அந்த உருவம்.. வெகுதூரத்தில் மெல்லியதாக துவங்கிய அதிர்வுகள் நெருக்கத்தில் தடக்..தடக். தடக் என பலமாக அதிரத் துவங்கின.. அந்த நான்கு குதிரையிலும் நான்கு முகமூடிகள்.. எங்கோ கொள்ளையடித்திருந்த பணக் குவியலோடு பாய்ந்து வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தில் வேகம் குறைத்து பயணிக்க எத்தனித்த வேளையில் திடீரென்று அவர்கள் முன்னே குதித்தெழும்பியது அந்த உருவம். குதிரைகள் ஹீஹீயென ஓசையெழுப்பி கலவரமடைய ககுதிரைகளைக் கட்டுப்படுத்தி நிறுத்திய நால்வர் முன் தன் இரு கரங்களிலும் துப்பாக்கியை ஏந்திய வண்ணம் புன்முறுவலை முகத்தில் தரித்து நின்றான் அந்த வீரன். யாரடா நீ..உயிர் ஆசை இல்லையா உனக்கு..வழியை விட்டு ஒதுங்கடா! அடாவடிக் குரலுடன் குதிரையிலிருந்தவன் உறுமினான். நீ யாரென எனக்கு நன்றாகவே தெரியும்.. பிரபல பேங்க் கொள்ளையன் ஸ்டான் வில்சன்தானே? மரியாதையாக வங்கிக் கொள்ளைப் பணத்தை ஒப்படைத்து சரணடையுங்கள்.. இல்லையென்றால்..டுமீல்.. குதிரையிலிருந்த ஒருவன் அப்படியே சாய்ந்து விழுந்தான். இது வெறும் பேச்சல்ல. என் ஆணை.. ஒழுங்கு மரியாதையாக சரணடையுங்கள்.. கலவரமடைந்த கொள்ளைக் கும்பல் மிரட்டலுக்குப் பணிந்தது. தங்கள் வசமிருந்த பேங்க் பணத்தை ஒப்படைப்பதாகக் கூறி பையைத் தூக்கி வீச விலகி சிரித்தான் ஜானி டைனமைட். ஹெஹெ..இந்த பழைய காலத்து டெக்னிக்குக்கெல்லாம் ஏமாறுவேன் என நினைத்தீர்களா என்றவன் சடசடசடவென தன் தோட்டாக்களை உமிழ்ந்து அத்தனை பேரின் பெல்ட்டிலும் தோட்டாக்கள் உரசிப் போகுமாறு செய்ய மூன்று கொள்ளையர்களும் சரணடைந்தனர்.. அவர்களைத் துரத்தி வந்து கொண்டிருந்த ஷெரீப் டைசனின் படையினரின் குதிரைக் குளம்புகள் எழுப்பும் ஓசை தொலைவில் எழும்போது இங்கே பணத்துடன் குதிரைகளில் பிணைக்கப்பட்ட மூவரும் அவர்களின் பார்வைக்குத் தென்பட ஜானி டைனமைட் அப்படியே மாயமானான். ஷெரீப் தலைவனின் நெஞ்சில் குத்தியிருந்த காகிதத் துணுக்கை எடுத்து படித்தார். டியர் ஷெரீப் டைசன்.. இந்த பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படியே ரிவார்டு தொகையை என் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுங்கள். என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி டைனமைட்..