cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

🥕🌽Aadhiyagai Foods🍎🥝

இயற்கை வழியில் உற்பத்தியான விளைபொருட்களையும், வீட்டில் செய்த மதிப்புகூட்டு பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்

Більше
Країна не вказанаМова не вказанаКатегорія не вказана
Рекламні дописи
183
Підписники
Немає даних24 години
Немає даних7 днів
Немає даних30 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

கேரட் மால்ட் & பீட்ரூட் மால்ட் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.. பாலில் கலந்து அருந்துவதற்கு ஏற்ற சத்தான பானம். தேவைப்படுவோர் +919962661258 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். #Carrot_malt #beetroot_malt #aadhiyagai
Показати все...
lak •அகத்திக்கீரை agathi white flower •வெந்தயக்கீரை fenugreek #மூலிகைகள் & #பூக்கள் •பூனைக்காலி velvet beans •சங்கு பூ வெள்ளை Butterfly pea white •சங்கு பூ -ஊதா Butterfly pea blue •தாமரை Lotus •திருநீற்றுப்பச்சிலை basil •கரு ஊமத்தை Datura Black •செண்டுமல்லி marigold •cosmos flower •துளசி Tulsi-Holy basil •கண்டங்கத்தரி Solanum surattense •சுண்டைக்காய் Turkey berries •நில ஆவாரை #தானியங்கள் •மக்காசோளம் சிவப்பு | maize red •மக்காசோளம் மஞ்சள் | maize yellow #சிறுதானியங்கள் •கருந்தினை foxtail millet black •செந்தினை foxtail millet red •சடைதினை foxtail millet cluster •வெண்தினை foxtail millet white •சாமை little millet •வரகு Kodo millet •பனிவரகு proso millet •குதிரைவாலி Barnyard millet •சிவப்பு இருங்கு சோளம் pearl millet red •மஞ்சள் சோளம் pearl millet yellow •வெண்சோளம் pearl millet •கேழ்வரகு finger millet •நாட்டு கம்பு pearl millet Round •காட்டு கம்பு pearl millet long #பயிறு_வகைகள் •கருப்பு மொச்சை hyacinth beans black •நரிபயிறு Moth beans •பாசிபயிறு Green gram •உளுந்து Black urad dhal மேலும் 40ற்கும் மேற்பட்ட மர விதைகள் உள்ளது. _______ ஒரு முறை விதைகளை பெற்று வீட்டுத்தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும், அடுத்த முறை விதைப்பிற்கு இவற்றிலிருந்தே விதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் வழங்கப்படுகிறது. __ சில முக்கிய குறிப்புகள்: தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்று விட்டு நடவு செய்யும் விதைகளை 3மணி நேரம் தண்ணீர் அ சாணிப்பாலில் ஊறவைத்து விதைக்கலாம். வெண்டை, கொத்தவரை, அவரை, பீன்ஸ் போன்ற விதைகளை ஓர் இரவு ஊறவைத்து விதைக்கலாம். பாகல், சுரை, புடலை என கொடி காய்கறி விதைகள் அனைத்தையும் 2-3 நாட்கள் ஊற வைத்து விதைக்கலாம். விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய மழைநீர் உகந்தது. _ முதல் 2,3 அறுவடைகளையும், கடைசி 2,3 அறுவடைகளையும் விதைக்காக பயன்படுத்த வேண்டாம். இடைப்பட்ட காலங்களில் விதைக்காக பயன்படுத்தலாம். _ சேகரிக்கும் விதைகளை உச்சி வெயிலில் காய வைக்க வேண்டாம். காலை மாலை இளம் வெயிலில் காய வைத்து எடுத்து சேமிக்கலாம். அமாவாசை நாட்களில் விதைகளை காய வைக்கலாம். இரவிலும் விதைகளை காய வைக்கலாம். விதைகளை சேமிக்கும்போது, துணிகளில் கட்டி தொங்கவிடலாம். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாக்கலாம். அவ்வபோது வேப்பிலைகளில் புகை போடலாம்(சாம்பிராணி புகை போல). காய்கறிகளை வருடா வருடம் எடுத்து விதைத்து அவற்றிலிருந்து விதைகளை எடுத்து சேமிப்பதன் மூலம் விதைகளில் முளைப்புத்திறனை பாதுக்கலாம். சுரை,பீர்க்கு,வெண்டை போன்ற விதைகளை குடுவைகளிலேயே சேமிக்கலாம். பழமாக மாறிய பின் விதை எடுக்கும் தக்காளி கத்தரி பாகல் புடலை போன்ற காய்களிலிருந்து விதை எடுத்து உடன் சாம்பல் கலந்து விதைகளை சேமிக்கலாம். __ நன்றி, ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm/ -Whatsapp: 8526366796 -Telegram channel: https://t.me/joinchat/AAAAAEz6GQ_4fYejG7T8fQ -www.aadhiyagai.com #Open_pollinated_seeds #Native_seeds #Traditional_seeds #Indigeneous_seeds #heirloom_seeds #மரபு_விதைகள் #நாட்டு_விதைகள் #பாரம்பரிய_விதைகள்
Показати все...
Log in to Facebook

Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மிளகு அறுவடை செய்து காயவைத்து கொண்டுள்ளோம். விலை இன்னும் முடிவு செய்யவில்லை. கருப்பு & வெள்ளை மிளகு மே மாதம் முதல் கிடைக்கும். தேவைப்படுவோர் +919962661258 / +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.
Показати все...
https://youtu.be/QuNjuAh-lqI வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத்தின் அவசியம்
Показати все...
2) வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத்தின் அவசியம்

உடல்நலமும் மனநலமும் பேணும் வீட்டுத்தோட்டம் அமைப்போம். நாம் விரும்பும் வகை வகையான உணவுகளை இயற்கை வழியில் உற்பத்தி செய்து உண்பதோடு, குழந்தைகளுக்கும் நாம் உண்ண...

https://youtu.be/k6p9UeahahI நாம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் தற்போது இருக்கும் சூழல் நல்ல முறையில் இல்லை என்றால் தானே அதை மாற்ற விரும்புவோம். விவசாய முறை இங்கே சரியாக இல்லை. விவசாயிகள் ஆரோக்கியமாக இல்லை. அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தானே இவ்வுலகமே ஆரோக்கியமாக இருக்கும். உலகிற்கே சோறு போடும் விவசாயிகள் உண்ணும் உணவும் இரசாயனங்கள் கலப்பினால் உள்ளது. அவர்கள் உண்ணும் உணவில் அவர்களே இரசாயனங்களை கலக்கின்றனர். அவர்களை, ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்திட செய்ய வேண்டும். அதற்கு நுகர்வோரும் உற்பத்தியாளர்களாக மாறிட வேண்டும். இரசாயன கலப்பில்லா உணவின் ருசியை அனைவரும் அறிய வேண்டும். அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுவே நாம் செய்ய விரும்பும் மாற்றம். விவசாய முறையில் ஏற்பட வேண்டிய மாற்றமும் இதுவே.!! விழிப்புணர்வில்லா நிலையிலுள்ள விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்லுணவை உற்பத்தி செய்யும்பொருட்டு மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்குமானது. #ஆதியகை
Показати все...
தலைப்பு-1: கடந்த 50 வருடங்களில் விவசாய முறைகளால் என்னென்ன இழந்தோம். இழந்ததை மீட்டெடுக்க இயலுமா!!

நாம் ஏதேனும் மாற்றத்தை விரும்பினால் தற்போது இருக்கும் சூழல் நல்ல முறையில் இல்லை என்றால் தானே அதை மாற்ற விரும்புவோம். விவசாய முறை இங்கே சரியாக இல்லை. விவசாயிக...

நம்ம Ks Rajan Cdk ஐயா தோட்டத்தில் நாட்டு துவரை அறுவடை செய்து முடிச்சுருக்காங்க. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ளது ஐயாவின் கிராமம். கோவை, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரங்களில் இருப்பவர்கள் நேரடியாக சென்று கூட பெற்றுக்கொள்ளலாம். விதைக்காகவும் பயன்படுத்தலாம். ராஜன் ஐயாவின் தொடர்பு எண் 9842052663.
Показати все...
நாட்டு ரக சம்பா மிளகாய் விற்பனைக்கு உள்ளது. வரமிளகாயாகவும், மிளகாய்பொடி போன்ற மசலா பொடிகள் அரைக்கவும் ஏற்ற காராமான மிளகாய். விதைகளை விதைக்கவும் பயன்படுத்தலாம். ஒரு மூட்டையாக (15கிலோ) அனுப்ப இயலும். விலை 3300₹ தேவைப்படுவோர் +918526366796 அல்லது +919962661258 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.
Показати все...
#விதைமஞ்சள் உள்ளது. வீட்டுத்தோட்டத்தில் விதைக்கவும், விவசாயம் செய்வதற்கு தேவையான அளவும் வழங்க இயலும். இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்பட்டது. மஞ்சள்தூளும் உள்ளது. தேவைக்கு வாட்ஸ்அப் செய்யவும் +918526366796
Показати все...
பனங்கருப்பட்டி, நாட்டு சக்கரை விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோர் வாட்ஸ்அப் செய்யவும். https://wa.me/message/JHKNQD4H3YYEM1
Показати все...
Оберіть інший тариф

На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.