cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

𝗠𝗢𝗠'𝗦 𝗞𝗜𝗧𝗖𝗛𝗘𝗡👨‍🍳

Tasty group..😍🥞🍱🍪 Cooking recipes✅ Cooking pdf ✅ Only about cooking video's✅ Food and cooking image🚺✔️ Telegram Group @ammasamayel

Больше
Рекламные посты
201
Подписчики
Нет данных24 часа
+17 дней
+230 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

00:12
Видео недоступноПоказать в Telegram
இந்த நான்கு எளிய பயிற்சிகள் ..உங்கள் எடையை குறைக்க உதவும் !
Показать все...
6.37 KB
​​அரைக்கீரை பொரியல் 🍱தேவையான பொருட்கள் : பொருள் - அளவு அரைக்கீரை 1 கட்டு சின்ன வெங்காயம் 10 பச்சை மிளகாய் 2 மிளகு தூள் 1 டீஸ்பூன் பூண்டு பல் 10 தேங்காய் துருவல் அரை கப் கடுகு 1 டீஸ்பூன் கறிவேப்பிலை ஒரு கொத்து எண்ணெய் தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப 🍴செய்முறை : 👇 கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு கீரையை சேர்த்து வதக்கவும். சிறிது நேரத்தில் கீரையில் உள்ள தண்ணீர் சுண்டியவுடன் உப்பு சேர்த்து வதக்கவும். கீரை வெந்தவுடன் அடுப்பை அணைத்து மிளகு தூள் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும். என்றென்றும் அன்புடன் 🥗அம்மா சமையல் 🥗 𝐓𝐚𝐬𝐭𝐲 𝐠𝐫𝐨𝐮𝐩😍🥞🍱🍪 𝐋𝐞𝐭'𝐬 𝐜𝐨𝐨𝐤 𝐜𝐨𝐦 𝐨𝐧 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬🍲👨‍🍳
Показать все...

👍
❤️
👎
00:13
Видео недоступноПоказать в Telegram
மினி அப்பம்'s + கோழிக்கறி SundaySpecial
Показать все...
1.89 MB
00:37
Видео недоступноПоказать в Telegram
காலை டிபனை இத்துடன் முடிச்சுக்கலாம்
Показать все...
3.18 MB
​​பட்டாணி சாத‌ம் 🍱 தேவையானவை பா‌‌சும‌தி அரிசி - 2 ஆழா‌க்கு பச்சை பட்டாணி - 2 கோப்பை வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 5 இஞ்சி, பூ‌ண்டு ‌விழுது - 2 தே‌க்கர‌ண்டி நெய் - 1 கோ‌ப்பை எண்ணெய் - 8 தேக்கரண்டி சோம்பு, ‌கிரா‌ம்பு, ப‌ட்டை, லவ‌ங்க‌ம் - தா‌ளி‌க்க பு‌தினா - ‌சி‌றிது உப்பு - தேவையான அளவு 🍴செ‌ய்முறை 👇 பச்சை பட்டாணியை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ப‌ச்சை ‌மிளகா‌ய், சோ‌ம்பு, ப‌ட்டை, ‌கிரா‌ம்பு ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். வெங்காயத்தைத் நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் கு‌க்கரை வைத்து பாதி நெய்யையும் எண்ணெயையும் ஊற்றி காய்ந்ததும் ‌சி‌றிது சோ‌ம்பு போ‌ட்டு தா‌ளி‌த்து பு‌தினாவையு‌ம், வெங்காயத்தையும், ‌பிறது ப‌ட்டா‌ணியையு‌ம் போ‌ட்டு வத‌க்கவு‌ம். கழு‌வி வ‌ை‌த்‌திரு‌க்கு‌ம் அரிசியையு‌ம், ‌இ‌‌‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது ம‌ற்று‌ம் மசாலா ‌விழுதை சேர்த்து 4 கோப்பை தண்ணீ‌ர் ஊற்றி உப்பையும் போட்டு நன்றாகக் கிளறிவிட்டு கு‌க்கரை மூ‌டி 2 ‌வி‌சி‌ல் வை‌த்து இற‌க்கவு‌ம். ஆ‌வி அனை‌த்து‌ம் போனது‌ம் மூடியை ‌திற‌ந்து நெ‌ய் ‌வி‌ட்டு ‌கிள‌றி ப‌ரிமாறவு‌ம். என்றென்றும் அன்புடன் 🥗அம்மா சமையல் 🥗 𝐓𝐚𝐬𝐭𝐲 𝐠𝐫𝐨𝐮𝐩😍🥞🍱🍪 𝐋𝐞𝐭'𝐬 𝐜𝐨𝐨𝐤 𝐜𝐨𝐦 𝐨𝐧 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬🍲👨‍🍳
Показать все...

👍 1
👍
❤️
👎
​​பருப்பு குழம்பு 🍱தேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 3 காய்ந்த மிளகாய் - ஐந்து பூண்டு பல் - 5 மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன் நெய் - 1 ஸ்பூன் பொடித்த மிளகு, சீரகம் - ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு கடுகு - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு 🍴செய்முறை 👇 சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய் கிள்ளி வைத்துக் கொள்ளவும். பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 4 பல் பூண்டு, 5 சின்ன வெங்காயம் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியவுடன் அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு மசிய வதக்கவும். பின்பு அதனுடன் வேக வைத்துள்ள பருப்பை கடைந்து சேர்க்கவும். பின்பு அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்தவுடன் மல்லி இலை, நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான வாசமான பருப்பு குழம்பு ரெடி. என்றென்றும் அன்புடன் 🥗அம்மா சமையல் 🥗 𝐓𝐚𝐬𝐭𝐲 𝐠𝐫𝐨𝐮𝐩😍🥞🍱🍪 𝐋𝐞𝐭'𝐬 𝐜𝐨𝐨𝐤 𝐜𝐨𝐦 𝐨𝐧 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬🍲👨‍🍳
Показать все...

👍 1
👍
❤️
👎
​​மட்டன் பிரியாணி (குக்கர் முறை) செய்வது எப்படி 😍 🍱தேவையான பொருட்கள் மட்டன்– 1/2 கிலோ பாஸ்மது அரிசி– 1/2 கிலோ வெங்காயம்– 3 தக்காளி– 3 இஞ்சி பூண்டு விழுது– 3 மே.கரண்டி தயிர்– 150 மில்லி பச்சை மிளகாய்– 5-6 தனி மிளகாய்த்தூள் 1 மே.கரண்டி மஞ்சள்த்தூள்– 1/4 ஸ்பூன் கொத்தமல்லி, புதினா – 1/2 கட்டு எலுமிச்சை பழம்– 1 உப்பு– தேவைக்கு தேங்காய்பால் அல்லது பசும் பால்– 1/4 கப் நெய்– 200மில்லி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை – தலா 2 – 3 முந்திரி,பாதம் – விருப்பம் இருந்தால் அலகரிக்க 🍴செய்முறை 👇 பாஸ்மதி அரிசியினை நன்றாக தண்ணீர் விட்டு அலசி 20 - 30 நிமிடங்கள் பச்சை தண்ணீரில் ஊற வைக்கவும் குக்கரில் நெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை போடவும். பிறகு நீட்டமாக நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு பொன் நிறத்தில் வதக்கவும். வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் நன்றாக குறைந்த தணலில் வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி நீட்டமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். மூடி போட்டு சிம்மிலே தக்காளி கனிய விடவும். பிறகு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு சுத்தம் செய்த இறைச்சி துண்டுகளை போடவும் இதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கிண்டிவிடவும். மசாலா இறைச்சியில் நன்றாக கலந்த பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவை சேர்க்கவும். நன்றாக கிண்டி மட்டன் வேகும் வரை வேக வைக்கவும் மட்டன் வெந்த பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்னே கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதி வரும் பொழுது கால் கப் பால் பால் ஊற்றவும். இதனுடன் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை சுத்தமாக வடிகட்டிவிட்டு அரிசியினை சேர்க்கவும். எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கரண்டி வைத்து கிண்டிவிட்டு ஒரு வீசில் மட்டும் வைத்து இறக்கவும் .. விரும்பினால் மேலே முந்திரி , பாதம், கிஸ்மிஸ் நெய்யில் வறுத்து மேலே தூவி அலகரிக்கலாம் கம கம மணத்துடன் சூவையான ஈசியான மட்டன் பிரியாணி ரெடி.. தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். டிஸ்கி: குக்கர் வீசில் அடங்கிய பின்பு உடனே குக்கரை திறக்க வேண்டாம் 15 நிமிடங்கள் கழித்து வேறு ஒரு பாத்திரத்தில் பிரியாணியினை மாற்றிவிடவும். பிரியாணியினை மர கரண்டி அல்லாது பிளாஸ்டிக் கரண்டியால் பிரட்டவும். அதிகம் பிரட்டினால் சாதம் உடைந்து குழைந்தது போல் இருக்கும். என்றென்றும் அன்புடன் 🥗அம்மா சமையல் 🥗 𝐓𝐚𝐬𝐭𝐲 𝐠𝐫𝐨𝐮𝐩😍🥞🍱🍪 𝐋𝐞𝐭'𝐬 𝐜𝐨𝐨𝐤 𝐜𝐨𝐦 𝐨𝐧 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬🍲👨‍🍳
Показать все...

👍
❤️
👎
​​சப்பாத்திக்கு அருமையான முட்டை உருளைக்கிழங்கு கறி 🍱தேவையான பொருள்கள் முட்டை - 4 உருளைக்கிழங்கு - 1 தக்காளி - 1 மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் துருவல் - 100 கிராம் 🍶அரைக்க இஞ்சி - 1/2 இன்ச் அளவு பூண்டு - 3 பல் கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி 🍳தாளிக்க எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி பட்டை - 1 இன்ச் அளவு கிராம்பு - 2 வெங்காயம் - 1/4 பங்கு கறிவேப்பிலை - சிறிது 🍴செய்முறை :👇 உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும். இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும். அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும். அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி. என்றென்றும் அன்புடன் 🥗அம்மா சமையல் 🥗 𝐓𝐚𝐬𝐭𝐲 𝐠𝐫𝐨𝐮𝐩😍🥞🍱🍪 𝐋𝐞𝐭'𝐬 𝐜𝐨𝐨𝐤 𝐜𝐨𝐦 𝐨𝐧 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬🍲👨‍🍳
Показать все...

👍
❤️
👎
​​திருநெல்வெலி மட்டன் குழம்பு 🍱தேவையானவை : மட்டன் - அரை கிலோ இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 வேகவைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு. அரைக்க : தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்) கசகசா - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் தாளிக்க: பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் -2 கறிவேப்பிலை - சிறிதளவு 🍴செய்முறை: 👇 மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி - பூண்டு விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும்.பின் வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்க்கவும்,பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழைதூவி இறக்கிப்பரிமாறவும். என்றென்றும் அன்புடன் 🥗அம்மா சமையல் 🥗 𝐓𝐚𝐬𝐭𝐲 𝐠𝐫𝐨𝐮𝐩😍🥞🍱🍪 𝐋𝐞𝐭'𝐬 𝐜𝐨𝐨𝐤 𝐜𝐨𝐦 𝐨𝐧 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬🍲👨‍🍳
Показать все...

👍
❤️
👎
​​கால் அட்டென்ட் பண்ணிட்டு வரேன்... லஞ்ச்டைம்
Показать все...

👍
❤️
👎
Выберите другой тариф

Ваш текущий тарифный план позволяет посмотреть аналитику только 5 каналов. Чтобы получить больше, выберите другой план.