தமிழ் மின் நூலகம்
Открыть в Telegram
தமிழ் மின் நூலகம் Telegram சேனலில் புதிய மற்றும் பழைய புத்தகங்கள் 📚 pdf வடிவில் கிடைக்கும். புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்த சேனலின் நோக்கம். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
Больше4 240
Подписчики
Нет данных24 часа
Нет данных7 дней
Нет данных30 дней
Архив постов
4 240
உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்
நூலாசிரியர் : என். சி. ஸ்ரீதரன்
நூல் வகை : கல்வி, குழந்தை உளவியல்
4 240
நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)
நூலாசிரியர் : சேவியர்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
மொழி : தமிழ்
வருடம் : 2012
நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்
4 240
பல மேடைகளில் பேசினார், இரு கைகளும், கால்களும் இல்லாத ஒருவர் தன்னம்பிக்கையையும் வாழ்க்கையையும் பற்றிப் பேசுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. Nick இன் புகழ் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்து இன்று உலகெங்கும் பரவி விட்டது. 2012 இல் Kanae Miyahara என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுற்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.
இன்று உலகெங்கும் பலரால் விரும்பப்படும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்றால் அது Nick தான். ஆனால் தனது இன்றைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது 8 வயதில் சக மாணவி கூறிய "நீயும் அழகானவன்தான் Nick" என்ற வார்த்தைகள்தான் என இவர் அடிக்கடி குறிப்பிடுவார்.
.
வாழ்வின் வெற்றிக்கு Nick Vujicic கூறும் டாப் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்...
1. உங்கள் வாழ்வில் எந்த அதிசயமும் நடக்கவில்லை எனில், இன்னொருவரது வாழ்வின் அதிசயமாக நீங்கள் மாறுங்கள்.
2. "நீங்கள் எவ்விதத்திலும் சிறந்தவரல்ல, உங்களால் எதுவும் முடியாது" இவை இரண்டுமே உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்கும் மிகப்பெரும் பொய்கள்.
3. இறந்தகால வலிகளில் உங்கள் வாழ்க்கையைச் சிக்கவைக்காதீர்கள். அது உங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இல்லாமல் செய்துவிடும்.
4. முயற்சிசெய்யுங்கள். முயற்சி வாழ்வின் ஒரு பகுதியல்ல. முயற்சியே வாழ்க்கை. பயத்திற்கும் கனவிற்கு இடையிலேயே உங்கள் வாழ்க்கை இருக்கின்றது.
5. பயமே ஒருவனின் மிகப்பெரிய இயலாமை. அது பக்கவாதத்தைவிட மோசமாக அவனை முடக்கிவிடும்.
6. மாற்றங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும்படி அமையாது. சிலவேளை நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.
7. உங்கள் குறைகளைப் பயன்படுத்தி வாழாதீர்கள். மாறாக திறமைகளைப் பயன்படுத்தி வாழுங்கள்.
8. எனது நம்பிக்கையை இழக்காதவரை நான் ஊனமுற்றவனாகமாட்டேன்.
4 240
NICK VUJICIC வாழ்கை பயணம்
உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வலி நிறைந்த வாழ்க்கை வரலாறு.
உலகில் பலநூறு தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் இருந்தாலும் அவர்களில் Nick Vujicic தனித்துவமானவர். பல உலகத் தலைவர்களிற்கும் தன்னம்பிக்கை சொல்லிக்கொடுப்பவர். பல்லாயிரம் மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்தவர்.
இந்திய உட்பட உலகின் முக்கால்வாசிக்கும் அதிகமான நாடுகளில் உரையாற்றியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு புகழிற்குச் சொந்தமான Nick இன் இறந்தகால வாழ்க்கை மிக வேதனை மிகுந்ததாகவே அமைந்தது. தங்கள் வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் இவரின் வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்ந்துகொள்வார்கள்.
1982 இல் ஆஸ்ட்ரேலியாவின் மெல்பன் நகரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அதன் தந்தை வாந்தியெடுத்துவிட்டார். தாய் "இது என் குழந்தையே அல்ல.." எனக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அக்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகளும், இரண்டு கால்களும் அற்ற நிலையில் வெறும் தலையும், உடலும் கொண்ட உருவமாகப் பிறந்தது.
சில மணி நேரங்களில் மனதை அமைதிப்படுத்திக்கொண்ட அத் தம்பதியினர் கடவுள் தங்களுக்களித்த அக்குழந்தையை மனமாற ஏற்றுக்கொண்டனர். மற்ற குழந்தைகள் போலவே இவனையும் வளர்க்கவேண்டும் என முடிவு செய்தனர். Nicholas James Vujicic என பெயர் சூட்டி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தனர்.
பிற்காலத்தில் அந்தப் பெயர் சுருக்கமாக Nick Vujicic என மாறிவிட்டது.
அக்காலத்தில் Nick போன்ற குறையுள்ள குழந்தைகள் சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்பது தடை செய்யப்பட்டிருந்தது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கென தனியான பாடசாலைகள் இயங்கிவந்தன. இருப்பினும் Nick பள்ளிப்பருவத்தை அடைந்தபோது இந்த சட்டம் மாற்றப்பட்டு அனைத்து குழந்தைகளும் ஒன்றாக கல்விகற்கமுடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
Nick தனது குறையை உணரக்கூடாது என விரும்பிய அவரது பெற்றோர்கள் சாதாரண மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையிலேயே Nick ஐயும் சேர்த்தனர். அந்த மாநிலத்திலேயே சாதாரண பள்ளியில் சேர்ந்த குறைபாடுள்ள முதல் மாணவர் Nick தான்.
ஆனால் நடந்தது மிக்க கொடுமையானது. Nick இனை பள்ளியிலுள்ள சக மாணவர்களால் ஏற்கமுடியவில்லை. அவரை ஒரு தீண்டத்தகாத பொருளாக அனைவரும் நடத்த ஆரம்பித்துவிட்டனர். அவருடன் யாரும் பேசமாட்டார்கள். எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து பகிடிவதை செய்வார்கள். ஏன் அடிக்கவும் செய்தார்கள். இது Nick. இன் 6 வயதிலேயே நடந்துவிட்டது. இதனால் சிறுவயதிலேயே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.
தனது 8 வயதில் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் பாடசாலையில் அமர்ந்திருந்தார் Nick. சக மாணவி ஒருவர் சோகத்தில் அமர்ந்திருந்த அவரிடம் வந்து "Nick நீயும் அழகானவன்தான் ஆனால் உன் அழகை மற்றவர்களால் உணர முடியாது, ஆனால் அதை நான் உணர்கின்றேன்" எனக் கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கணம் இவனினுள் தன்னம்பிக்கை பிறந்தது. தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
காலங்கள் கடந்தன. இருப்பினும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நச்சு வார்த்தைகளால் மனமுடைந்துபோனார் Nick. தனது 10 வயதில் தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் எப்படியோ பெற்றோர்கள் இவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிர் தப்பித்தாலும் 2 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். கண் திறந்தவர் தன் செயலால் தனது தாய் படும் வேதனையைக் கண்டு மனமுடைந்துபோனார். இனி வாழ்க்கையில் தற்கொலை பற்றி எண்ணப்போவதில்லை என முடிவெடுத்தார். சாதாரண ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வானோ அதேபோலவே தானும் வாழவேண்டும் என வைராக்கியம் கொண்டார்.
இரு கைகள், இரு கால்கள் இல்லாமல் நீச்சல் கற்றுக்கொண்டார், உதைப் பந்து விளையாடினார், கோல்ப் விளையாடினார், இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொண்டார், நீர்ச்சறுக்கு விளையாட்டைக் கற்றுக்கொண்டார் ஏன் கணனியில் மிக வேகமாக type செய்யவும் கற்றுக்கொண்டார். இவை அனைத்தையும் தனது கால் இருக்கவேண்டிய இடத்தில் இருந்த சிறு பாதத் துண்டை வைத்து செய்தார்.
Nick அதிகம் கடவுள் நம்பிக்கை கொண்டவர். தனது இளமைப் பருவம்வரை தனக்கு எப்படியாவது கைகளும் கால்களும் முளைத்துவிடவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் பத்திரிக்கையில் மிகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் படிக்க நேரிட்டது. அப்போதே தன்னைவிட மோசமான வாழ்க்கை கொண்ட பலர் இருப்பதை அறிந்தார். இவ்வாறான மனிதர்களிற்கு உதவி செய்வதே தான் படைக்கப்பட்ட நோக்கம் என உணர்ந்தார் Nick. இதுவே Nick இனை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாற்றியது.
4 240
நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)
நூலாசிரியர் : சேவியர்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
மொழி : தமிழ்
வருடம் : 2012
நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்
குறிப்பு:
தமிழின் மிக முக்கியமான நூல்களில் ஒன்று இது. இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் வாயிச்சஸ் எனும் தன்னம்பிக்கை மனிதரின் அசாதாரண பணிகளைப் பற்றிய நூல் இது.
கைகளும், கால்களும் இல்லாத ஒரு மனிதன் எப்படி உலக நாடுகள் அனைத்திலும் பயணித்து கோடிக்கணக்கான மக்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்ப முடியும்? அதற்குக் காரணம் என்ன? அவருடைய உந்து சக்தி என்ன? சிறுவயதில் தற்கொலை செய்து கொள்ள கடுமையாய் முயன்ற அவர் எப்படி பிற்காலத்தில் பல ஆயிரம் மக்களை தற்கொலை சிந்தனையிலிருந்து மாற்றினார்?
நிக்கின் வாழ்க்கை நமக்கெல்லாம் தரப்பட்டிருக்கும் வாழ்க்கைப் பாடம். ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதை நோக்கிய பயணத்தை நம்பிக்கையோடு தொடரவேண்டும். அந்த நம்பிக்கைக்கு இறைவனில் சரணடையும் மனநிலையும் இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது அவருடைய வாழ்க்கை.
தங்கள் வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் இவரின் வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்ந்துகொள்வார்கள். சின்னச் சின்ன குறைபாடுகளுக்கே முடங்கிவிடுகின்ற நமக்கு கைகள், கால்கள் இல்லாத நிக்கின் வாழ்க்கை சவால் விடுக்கிறது. எதையும் தாண்டி வெற்றிகளைத் தொடலாம், நம்பிக்கை இருந்தால் போதும் என்பதை அவருடைய வாழ்க்கை சொல்லிச் செல்கிறது. நாற்பது நாடுகள், நாற்பது இலட்சம் மக்கள் என அவருடைய பயணம் விஸ்தாரமானது. இறைவன் மனது வைத்தால் இன்னும் பல கோடி மக்களைத் தொடுவார் என்பதில் ஐயமில்லை.
அவருடைய வீடியோக்கள் இன்றைக்கு பெரிய பெரிய நிறுவனங்களில் மக்களை உற்சாகப்படுத்தப் பயன்படுகிறது. மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைத் துடைத்தெறிய உதவுகிறது. தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என அவர்களைப் பக்குவப்படுத்துகிறது. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதைப் போதிக்கிறது. விடா முயற்சி எவ்வளவு முக்கியமானது என்பதை உரக்கச் சொல்கிறது!
இறைவனை நேசி, மனிதனை நேசி எனும் இரட்டை சிந்தனையில் அவருடைய வாழ்க்கை கட்டமைக்கபட்டுள்ளது!
நிக்கின் வாழ்க்கை நமக்கான பாடம்! வாழ்க்கை அழகானது, அதை வாழத் தெரிந்தவர்களுக்கு! என்பதே நிக் உங்களுக்கும் எனக்கும் சொல்லும் புதிய தத்துவம்!
4 240
நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)
நூலாசிரியர் : சேவியர்
நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்
4 240
மருந்தில் குணமடையாத 51 நோய்கள்! (மருத்துவச் சட்டத்தின் எச்சரிக்கை! )
நூலாசிரியர் : பதிப்பகத்தார்
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : உடல்நலம், மருத்துவம், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
4 240
மருந்தில் குணமடையாத 51 நோய்கள்! (மருத்துவச் சட்டத்தின் எச்சரிக்கை! )
நூலாசிரியர் : பதிப்பகத்தார்
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : உடல்நலம், மருத்துவம், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
குறிப்பு:
இந்தப் புத்தகம் நவீன மருத்துவத்திற்கு எதிரானது அல்ல. அதைக் கேள்வியே இல்லாமல் 100% நம்பும் நம் அறியாமைக்கு எதிரானது.
இந்திய மருந்துகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் சட்டம், 1940 (The Drugs and Cosmetics Act, 1940) மற்றும் 'மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள் 1945' (The Drugs and Cosmetics Rules, 1945) ஆகிய சட்ட விதிமுறைகளில் உள்ள ஷெட்யூல் ஜெ, மருந்துகளால் குணப்படுத்த முடியாத அல்லது தடுக்க முடியாத 51 நோய்களைப் பட்டியலிட்டுள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு(சர்க்கரை) நோய், கருப்பை தொடர்பான நோய்கள் என பெருமளவு மக்களைப் பாதிக்கும் நோய்கள் அனைத்துமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
நோய்களுக்கு சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியாதென்றால், அதை நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவர்கள் ஏன் சொல்வதில்லை? அல்லது வேறு மருத்துவ முறைகளில் இவற்றைக் குணப்படுத்த வாய்ப்புகள் இருந்தால், ஏன் இவர்கள் அவற்றை சிபாரிசு செய்வதில்லை?
அலோபதி மருத்துவத்திற்கு நோயாளிகளே நுகர்வோர் என்பதாலும், அவர்களால்தான் அலோபதி மருத்துவத்துறை செல்வம் கொழிக்கும் தனியார் துறையாக மாறியுள்ளது என்பதாலும், மருந்தில்லாமல் வாழ்வியல் மாற்றங்களாலேயே சரியாகிவிடக் கூடிய சாதாரண லைஃப் ஸ்டைல் நோய்களுக்கும் அலோபதி மருத்துவர்கள் வீணாக வைத்தியம் செய்து வருகின்றனர்.
4 240
மருந்தில் குணமடையாத 51 நோய்கள்! (மருத்துவச் சட்டத்தின் எச்சரிக்கை! )
நூலாசிரியர் : பதிப்பகத்தார்
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
4 240
சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்
நூலாசிரியர் : சேவியர்
பதிப்பகம் : பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
நூல் வகை : தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம்
மொழி : தமிழ்
வருடம் : 2014
பக்கங்கள் : 390
புத்தகத்தில் இருந்து சில வரிகள்...
நம்மால் சரி செய்ய முடியாத ஆயிரம் சிக்கல்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதை விட, நம்மால் செய்ய முடிந்த வேலைகளைச் செய்வதே சிறப்பானது!
நல்ல விஷயங்களை அதிகம் பேசும்போது நமது சிந்தனைகளும் நல்லவற்றை நோக்கியே நடைபோடும். குறைகளைக் களைய வேண்டியது எவ்வளவு அவசியமோ, நல்லவற்றைக் கண்டுணர்ந்து அதை வளர்க்க வேண்டியதும் அவசியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
4 240
சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்
நூலாசிரியர் : சேவியர்
பதிப்பகம் : பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
நூல் வகை : தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம்
மொழி : தமிழ்
வருடம் : 2014
பக்கங்கள் : 390
குறிப்பு:
தினத்தந்தி இதழில் வெளிவந்து, இலட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட தொடரின் நூல் வடிவம்.
“சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா? செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில், “முடியும்” என்பது தான்! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே! அவர் சிம்பொனி அமைத்தபோது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையில் சாதிக்க முடியாதா?
எது இல்லாமலும் ஒரு மனிதனால் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் எனும் வேகமும், சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதுமானது.
இந்தக் கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் உண்மை நிகழ்வுகளில் பெரும்பாலானவை உங்களுக்குப் புதிதாக இருக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. வேலையிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதே உண்மையான வெற்றி. எனவே தான் கட்டுரைகளில் உயர்வுக்கான வழியையும், உணர்வுகளின் வலியையும் கலந்தே பயணிக்க வைத்திருக்கிறேன்.
வாழ்த்துகளுடன்,
சேவியர்.
இந்தப் புத்தகத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
வாசலில் ஒரு நிமிடம்
01. இல்லையென்றாலும் கவலையில்லை
02. அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்
03. பலவீனங்களை பலங்களாக்குவோம்
04. அடுத்தவன் என்ன சொல்வானோ?
05. திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு
06. உன்னை நீயே உருவாக்கு
07. தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது
08. பதின் வயது, தடுமாறும் மனது
09. தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள்!
10. இனிமேல் முடியாது
11. மாற்றங்கள் வெற்றிகளின் நுழைவுச் சீட்டுகள்
12. மறுத்தல் உயர்வு தரும்
13. அழுத்தமற்ற மனமே அழகானது
14. மாத்தி யோசி, வெற்றியை ருசி…
15. வேலையே வாழ்க்கையல்ல
16. நீ என்னவாக விரும்புகிறாய்
17. பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்
18. இந்த வயசுலயா
19. வெற்றியின் குறுக்கே கோபம்
20. பாராட்டுங்கள்
21. கல்லூரிக்குச் செல்கிறீர்களா
22. குறை சொல்தல் வேண்டாமே!
23. நேரமே கிடைக்கலீங்க
24. எல்லாரும் இப்படித் தானே பண்றாங்க
25. மன்னிப்பு மகத்துவமானது!
26. கூடா நட்பு கூடாது!
27. நேரம் தவறாமை உயர்வு தரும்
28. தேசத்தை நேசிப்போம்
29. அன்பின்றி அமையாது உலகு
30. வல்லினம், மெல்லினம், பாலினம்
31. மரியாதைப் பூக்கள் மலரட்டும்
32. கர்வம் தவிர்
33. விட்டுக் கொடுத்தல் வெற்றியே!
34. வீண் செலவு வேண்டாமே!
35. வேலையில் அசத்தலாம் வாங்க!
36. ஸ்மார்ட்டா வேலை பாருங்க
37. கூடப் பொறந்த பாசம்!
38. பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்
39. நேர்மை பழகு அதுவே அழகு
40. கல்வியால் ஆய பயன்!
41. காதலியுங்கள், ஆனால்!...
42. பொழுதுபோக்கும், பொழுதை ஆக்கும்!
43. இந்தத் தடைகளைத் தாண்டுங்கள்!
44. நிபந்தனையற்ற அன்பு
45. இளைஞனை இறுக்கும் இணைய வலை!
46. திடீர் பணக்காரன்!
47. நீங்களும் தலைவராகலாம்
48. மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்
49. வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே...
50. பூமியை நேசிப்போம்!
51. தன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்
52. உனக்கு நீயே நீதிபதி
4 240
சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்
நூலாசிரியர் : சேவியர்
நூல் வகை : தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம்
4 240
உடலோடு பேசுவோம் (நோய் எனப்படுவன எல்லாம் நோயல்ல!)
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : ஆரோக்கியம், மருத்துவம், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
பக்கங்கள் : 130
4 240
உடலோடு பேசுவோம் (நோய் எனப்படுவன எல்லாம் நோயல்ல!)
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : ஆரோக்கியம், மருத்துவம், விழிப்புணர்வு
மொழி : தமிழ்
வருடம் : 2015
பக்கங்கள் : 130
குறிப்பு:
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நோயற்ற வாழ்க்கை மட்டுமல்ல. மகிழ்வான மனநிலை, சுத்தமான சுற்றுப்புறம், அனைவரின் நலன் காக்கும் சமூகம் இவை அனைத்தும் ஒன்றிணைந்த நிலைதான் அது. ஆனால் உடல் ஆரோக்கியம் கெடும்போது, பிற எதுவும் பயனில்லாமல் போகிறது. அதனால்தான் நம் உடலுக்குக் காய்ச்சல், சளி என்று சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதற்காகக் கவலைப்படுகிறோம். உடனடியாக வைத்தியம் செய்துகொள்கிறோமல். நாம் கவனிக்கத் தவறும் விசயம் ஒன்றுண்டு. நம் மனக் கலக்கத்தை குறைக்கக்கூடிய மருத்துவச் செலவை மிச்சப்படுத்தக்கூடிய, நிறைவான வாழ்க்கைக்கு ஆதாரமான ஒன்று அது. எது நோய், எது நோயல்ல என்ற வித்தியாசத்தை அறியும் கலைதான் அது.
இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன. மூளைக்கு சமிக்ஞைகள் எப்படி கடத்தப்படுகின்றன போன்ற நுணுக்கமான மருத்துவத் தகவல்களை அறிந்திருப்பவர்களுக்குக் கூட, தங்கள் உடல் என்ன பேசுகிறது என்பது புரிவதில்லை. ஏனெனில், நாம் எல்லாவற்றையும் பகுதி பகுதியாக, இயந்திரத்தனமாக அறிந்திருக்கிறோமே தவிர, உடல் என்னும் முழுமையான அற்புதத்தைப் புரிந்துகொள்ள முயல்வதேயில்லை. ஆனாலும் உடல் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றி, தன் தேவையைப் பற்றி, ஆபத்துகள் பற்றி, நீங்கள் கேட்காவிட்டாலும் தொடர்ந்து உங்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாமோ, உடலை உற்றுக் கவனிக்காமல் உணர்வின்றி இருக்கிறோம். காய்ச்சல், வாந்தி, வலிப்பு, வலி, வயிற்றுப்போக்கு என்று உடல் தன் நிலையை வெளிப்படுத்தும்போதெல்லாம் அதை நோயென்று கருதி மருத்துவரிடம் விரைகிறோம், பணத்தை இறைக்கிறோம். எனினும், மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கிறது. உடல் பேசுவதை உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால், நோயைக்கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அதற்கு வழிகாட்டும் ஒரு சிறு முயற்சியின் வெளிப்பாடே இந்நூல். அறிவே பலம்.
உலகில் உள்ள எல்லா மருத்துவங்களும் எதிர்ப்பு சக்தி குறைபாட்டையே நோய்களாகக் கூறுகின்றன. நம் உடலில் தோன்றும் எல்லா விதமான தொந்தரவுகளுக்கும் நம்முடைய எதிர்ப்பு சக்தியை நாம் சரியாகப் பராமரிக்காததே காரணமாக இருக்கிறது.
நம் உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியை நாம் பராமரிக்காத போது, சின்னச் சின்ன தொந்தரவுகள் உடலில் தோன்றுகின்றன. அப்போதும் நாம் உடலைப் பற்றிய அக்கறையின்றி நம் நடவடிக்கைகள் மூலம் மேலும் எதிர்ப்பு சக்தியை பாதிப்புக்குள்ளாக்குகிறோம். சிறிய தொந்தரவுகளை பெரிய நோய்களாக மாற்றுவதற்காக நாம் உதவி செய்கிறோம். பராமரிக்கப்படாத எதிர்ப்பு சக்தி, பயப்படுகிற மனம் என்ற கூட்டு நம் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கிறது.
இன்றைய உலகில் நோய்களுக்கான மிகப்பெரிய காரணமாகக் கூறப்படுவது கிருமித் தாக்குதல்தான். உலகையே அச்சுறுத்துவதாக நம்பப்படும் வைரஸ்கள் பயப்படும் ஒரே விஷயம் என்ன தெரியுமா? அதுதான் நம் எதிர்ப்பு சக்தி. உடலின் எதிர்ப்பு சக்தி சரியாக உள்ள நபர் எவ்வளவு தீவிரமான கிருமித் தாக்குதலில் இருந்தும் தப்பி விட முடியும் என்று கூறுகிறது நுண்ணியிரியல்.
மிக நுணுக்கமான கட்டுமானத்தைக் கொண்ட உடலின் மொழியைப் புரிந்து கொள்வது ஒரு கலை. அந்த கலையைக் கற்றவர்களை நோய்கள் அண்டாது. நோயற்ற வாழ்க்கை வாழ சற்று நேரம் உடல் பேசும் மொழியைக் கேட்கத் தயாராவோமா?
4 240
உடலோடு பேசுவோம் (நோய் எனப்படுவன எல்லாம் நோயல்ல!)
நூலாசிரியர் : அ.உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)
பதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம்
நூல் வகை : ஆரோக்கியம், மருத்துவம், விழிப்புணர்வு
4 240
8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 96
4 240
8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 96
குறிப்பு:
இந்நூலாசிரியர் டாக்டர் P. சிவஞானம் அவர்கள் SBI வங்கியிலிருந்து பணி முடிந்த பிறகும், அக்குபஞ்சரில் பல புள்ளிகள் பயன்படுத்துவதற்கு பதிலாக குறிப்பிட்ட 12 புள்ளிகளை பயன்படுத்தி எல்லா நோய்களையும் தீர்க்க முடியும் என்பதை ஆராய்ந்து அதை நமக்கு நூலாக கொடுத்துள்ளார்.
நமது உடலில் உள்ள உயிர் சக்தி நம் உடல் முழுவதும் தங்கு தடையின்றி தொடர்ந்து குறிப்பிட்ட பாதைகளில் சுற்றி வருகிறது. இந்த சக்தியை (Qi) என அழைக்கின்றோம். இந்த சக்தி பாதையை மெரிடியன் அல்லது சேனல்கள் அல்லது வெஸ்ஸல்ஸ் என அழைக்கின்றோம். நமது உடலில் உள்ள பொதுவான சக்தி பாதைகள் அதாவது மெரிடியன்கள் மொத்தம் 14. இந்த பொதுவான 14 மெரிடியன்கள் தவிர 8 அற்புதமான மெரிடியன்கள் உள்ளன. அவைகள் 8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள் எனப்படும். நமது உடலில் சக்திகளை அற்புதமாக செலுத்தும் இவைகளுக்கு சமநிலைப்படுத்தும் மெரிடியன்கள் என்றும் பெயர்.
இந்த 8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியங்களின் மூலம் சிகிச்சை செய்யும்போது அதன் சக்தி பாதைகள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் குறிப்பாக நாளமில்லா சுரப்பீகள், பிட்யூட்டரி, அட்ரீனல் புறனி, தைராய்டு, ஓவரீஸ், டெஸ்டீஸ் உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு சக்தியை உடலின் அனைத்து பாகங்களுக்கும் செலுத்துகிறது... இந்த 8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்களின் சக்தி பாதைகள் உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் மிக ஆழமாக செல்வதால், உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. நீண்ட நாள் நோய்களும் , மற்றும் மன நோய்களும் உடனடியாக குணமாகிறது.
இந்த எட்டு எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்களும் சிறுநீரகத்தில் சேர்த்துவைத்துள்ள சக்தியை குழந்தை பிறப்பிற்கு முந்தைய நிலைக்கு கருவில் வலுவூட்டுகிறது. ஆகவே குழந்தை உருவாக, நல்ல வளர்ச்சி பெற, முழு வளர்ச்சியுடன் குழந்தை பிறக்க உதவுகிறது. இது குழந்தைக்கு இரத்தம், நீர்ச்சத்து வழியாக சக்தியை கொடுத்து உதவுகிறது. எலும்பு உள்ளே உள்ள மஜ்ஜை மற்றும் மூளையை வளப்படுத்துகிறது. இந்த எட்டு எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள் உடலில் யின் சக்தி மற்றும் யாங்க் சக்தியை சமநிலைப்படுத்தி உடலை, மனதை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த எட்டு எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள் மூலம் செய்யப்படும் சிகிச்சையால் உடல்ரீதியான, மனரீதியான நோய்கள், குறைபாடுகள், மிக விரைவாகவும் நிரந்தரமாகவும், யின் யாங்க் சம நிலைப்படுத்தப்பட்டு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கிறது. இதனால் இதை அற்புதமான மெரிடியன்கள், அதிசயமான மெரிடியன்கள், விரிவாக செயல்படும் மெரிடியன்கள், மன நோய் தீர்க்கும் மெரிடியன்கள், சிறப்பு மெரிடியன்கள், சமநிலைப் படுத்தும் மெரிடியன்கள் என்று அக்குபங்க்சர் மருத்துவர்கள் பாராட்டுகிறார்கள்.
இந்த எக்ஸ்ட்ராடினரி மெரிடியன் மருத்துவம் அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஒரு பொக்கிஷம்.
4 240
8 எக்ஸ்ட்ராடினரி மெரிடியன்கள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 96
4 240
135 முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 84
4 240
135 முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள்
நூலாசிரியர் : டாக்டர் P. சிவஞானம், MD (Acu), Ph.D.
நூல் வகை : அக்குபஞ்சர் மருத்துவம்
பதிப்பகம் : அட்டாமா
மொழி : தமிழ்
பக்கங்கள் : 84
குறிப்பு:
“வணங்கும் கரங்களை விட குணமாக்கும் கரங்களே புனிதமானது”. அதிலும் பக்கவிளைவுகள் அற்ற அக்குபஞ்சர் மருத்துவம் செய்வது அதை விட மகத்துவமானது. அதை கற்றுக் கொள்ள உதவும் நூல்களில் மிகவும் அவசியமானது இந்நூல். டாக்டர் P. சிவஞானம் அவர்கள் தெளிவாக ஒவ்வொரு புள்ளிகளின் இருப்பிடம் மற்றும் தீரும் நோய்களை எழுதியுள்ள விதம் மிகவும் அருமை.
நமது உடலில் ஆயிரக்கனக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளன. அவைகளில் 361 புள்ளிகள் மட்டும் 14 சிறப்பு பாதைகளில் உள்ளன. மற்றவைகள் பாதைகளுக்கு அப்பால் உள்ளது. அந்த பாதைகள் உடலில் கைகளிலும், கால்களிலும், மற்றும் உடலின் முன் மத்திய கோட்டிலும், பின் மத்திய கோட்டிலும் அமைந்துள்ளன. நாம் சிகிச்சையின் போது 361 புள்ளிகளையும் உபயோகப் படுத்துவதில்லை. அவற்றில் முக்கியமான நல்ல பலன் தரக்கூடிய புள்ளிகள் 135. அந்த புள்ளிகள் பற்றிய முழு விபரம் அதாவது புள்ளி இருக்கும் இடம், தீரும் நோய்கள், ஊசி செலுத்தும் முறை தனித்தனியாக படங்களுடன் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
