ru
Feedback
Periva Kural

Periva Kural

Открыть в Telegram

Daily broadcast service of Kanchi Periva Forum

Больше
2 593
Подписчики
+124 часа
+17 дней
-530 день
Архив постов
☝️Sri Periva Kural - அந்திம ஈஸ்வர தர்சனம் - பாகம் 1 🙏 Periva Saranam 🙏

photo content

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் -  நேக்கு மாம்பழம் வேணும் சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு மந்தஹாஸமாக தரிசனம் தந்து கொண்டு இருந்தார். அவருக்கு முன்பு பலவிதமான பழங்கள் தட்டு தட்டாக வைத்திருந்தது.புரட்டாசி,ஐப்பசி மாதம் என்று நினைவு. அப்போது கூட்டத்தில் ஒரு பெண் குழந்தை சுற்றி சுற்றி வந்தது.பெரியவா அந்த குழந்தையை அழைத்து "இதில் உனக்கு என்ன பழம் வேணுமோ, அதை எடுத்துக்கோ" என்றார்கள்.அங்கு அன்னாசி , ஆப்பிள், திராக்ஷை,கொய்யா,ஆரஞ்சு முதலிய எல்லாவிதப் பழங்களும் இருந்தன. ஆனால், அக்குழந்தை "நேக்கு மாம்பழம் வேணும்" என்றது. அது மாம்பழ காலம் இல்லை. மாவடு கூட ஆரம்பிக்கவில்லை.பெரியவா யோசிக்கலானார்!. "வேதபுரி! உள்ளே மேட்டூர் ஸ்வாமிகிட்ட ஏதாவது மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா, பாரு" என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்துவிட்டார். அச்சமயம் கூட்டத்தை விலக்கிகொண்டு ஆந்திராவிலிருந்து இருவர், பழத்தட்டுடன் வந்தார்கள். அதில் பெரியதாக இரண்டு மாம்பழங்கள். பெரியவா கண்ணைத் திறந்தார். அக்குழந்தையை அழைத்து, "எடுத்துக்கோ" என்றார். அது ஒரு பழத்தை சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டது. வேதபுரி திரும்பி வந்து,"அங்கு ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு குழந்தை கையில் பழத்தைப் பார்த்து திகைத்தார். "ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?" என்று பெரியவா. "பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!" என்று கண்களில் நீர் வழிய வேதபுரி உணர்ச்சிவசப்பட்டு கூறினார். எதிரில் நின்றிருந்த நாங்களும் பெரியவாளின் சக்தியை கண்ணால் பார்த்து ஆனந்தமடைந்தோம். மாம்பழத்தைக் கொண்டுவந்த ஆந்திரக்காரர்கள் அப்புறம், எங்கே தான் போனார்களோ? நம் கண்ணில் படாத ஊருக்கோ? பெரியவா சரணம்! தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

Sri Maha Periva Divya Darshan - Part 19

Periva Kural - Dharma Prachaaram series Dharma Sookshmams - Part 3  - by Ram Ram Mami Periva saranam! We are pleased to bring to your attention this video - Dharma Sookshmams - Part 3 - by Ram Ram Mami (Smt Prema Krishnamurthi Satrigal, Chennai) Link: https://www.youtube.com/watch?v=t3OywBFredQ Periva Saranam! Compiled by: Periva Kural Channel  | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org

☝️Sri Periva Kural - ஈ - அம்பாள் ஸ்வரூபம்- பாகம் 3 🙏 Periva Saranam 🙏

photo content

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - "அர்ஜுனன் தபஸ்" தகவல்-ரா.வேங்கடசாமி 1962 ஆம் வருடம், இளையாத்தங்குடியில் வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்து கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் பெரியவா கூப்பிட்டு அனுப்பினார். நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார். பின்னர், "தமிழ் நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை" என்று அந்த மகாநாட்டில் பங்கு பெற்ற வல்லுனர்களிடம் மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார். பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், "தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை" என்று உடனே பதில் சொல்லிவிட்டனர். "சரி.அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது? என்று ஸ்ரீ பெரியவா அவர்களிடம் கேட்டார். "அர்ஜுனன் தபஸ்" என்றனர். "அந்த சிற்பத்தின் போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்தனர். அந்த பெரிய புகைப்படத்தினை அவர்கள் ஸ்ரீ பெரியவாள் முன் வைத்து நிற்க, அதை அவர் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தார். பிறகு சொன்னார். "இந்த சிற்பத்திலே அர்ஜுனன் பஞ்சாக்னி நடுவிலே தபஸ் பண்ற மாதிரி இருக்கு.இப்படி தபஸ் பண்ற நேரம் உச்சிவேளைன்னு நமக்கு தெரியறது மாதிரி சிற்பி செஞ்சிருக்கார். அது எப்படின்னு யாராவது சொல்ல முடியுமா" என்று கேட்டார். புதிர் போன்ற அக்கேள்விக்கு பதில் சொல்ல அங்கே யாருக்குமே தெரியவில்லை. சென்னை தொல் பொருள் ஆராய்ச்சி இயக்குனர் திரு நாகசாமி உட்பட அங்கு வந்திருந்த அனைத்து ஸ்தபதிகளுக்கும் இதற்கான விடை தெரியவில்லை. எல்லோரும் சிந்தித்தபடி நிற்க ஸ்ரீ பெரியவா, "நல்லா யோசனை செஞ்சி பார்த்துண்டு நாளைக்கு வந்து சொல்லுங்களேன்" என்று அவர்களது தர்ம சங்கடத்தை அந்த நேரம் விலக்கி அவர்களை அனுப்பி வைத்தார். ஆனால் அதற்கான தக்க பதில் அவர்களின் யோசனையில் உதிக்காததால் அதே தர்ம சங்கடத்துடன் அடுத்த நாளும் ஸ்ரீ பெரியவா சன்னதியில் வந்து நின்றனர். "எங்களுக்கு நிச்சயமா எதுவும் தெரியல்லே. ஸ்ரீ பெரியவா தான் எங்களுக்கு விளக்கம் தரணும்" என்றார்கள் பவ்யமாக. ஸ்ரீ பெரியவா சொன்னார்: "சுத்திலும் நெருப்பா சூழ்ந்திருக்க பஞ்சாக்னி தபஸ் சரியா பகல் 12 மணிக்கு மேலே ஒரு முகூர்த்த காலம் செய்ய வேண்டிய தபஸ். இதை அர்ஜுனன் அந்த நேரத்திலே தான் செஞ்சிருக்கான்னு சிற்பத்திலே காட்ட முடியாது இல்லையா? அதனாலே சிற்பத்தோட சம்பந்தப்படாம ஒரு ஓரம் வெறும் எலும்புக் கூடாக ஒரு முனிவரை சிற்பி செதுக்கியிருக்கார். அந்த முனிவர் கையால முத்திரை போட்டுண்டு சூரியனை தரிசிக்கிற மாதிரி இருக்கு. எப்பவும் இது போல முத்திரை போட்டு சூரியனை பார்க்கிற நேரம், சூரியன் நடுப்பகல்லே தலைக்கு நேர்மேலே உச்சியிலே வர்ற போதுதான். இதைத்தான் சிற்பி சூரியனையா, அந்த முனிவரை செதுக்கி அந்த நேரத்தை நாம தெரிஞ்சுக்கிற மாதிரி பண்ணியிருக்கார்." "இப்படி சூட்சுமமான விஷயங்களை ஸ்ரீ பெரியவாளாலே மட்டுந்தான் விளக்க முடியும். எத்தனை படிச்சு இருந்தாலும், எங்களால் இதைத் தெரிஞ்சுக்க முடியாது" என்ற அவர்கள் ஸ்ரீ பெரியவாளை பூர்ணமாக அன்று உணர்ந்து வணங்கி எழுந்தனர். பெரியவா சரணம்! தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

Sri Maha Periva Divya Darshan - Part 18

Periva Kural - Dharma Prachaaram series Dharma Sookshmams - Part 2  - by Ram Ram Mami Periva saranam! We are pleased to bring to your attention this video - Dharma Sookshmams - Part 2 - by Ram Ram Mami (Smt Prema Krishnamurthi Satrigal, Chennai) Link: https://www.youtube.com/watch?v=B_lIdmoepKQ Periva Saranam! Compiled by: Periva Kural Channel  | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org

☝️Sri Periva Kural - ஈ - அம்பாள் ஸ்வரூபம்- பாகம் 2 🙏 Periva Saranam 🙏

photo content

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பெய்யெனப் பெய்யும் மழை ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் மாதிரி! மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார் ”நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?” கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது .பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே? “ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்யலேன்னா? பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு! ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார். மழை வருகிறதா? என்று பார்க்க!பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார். “ஏண்டா? இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?” சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! அன்று அந்த விதண்டாவாதி, ஒன்று மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது? ஆனால், நிச்சயம் ஒன்று நடந்திருக்கும். அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்! பக்தன் தன் மேல் கொண்ட த்ருட விஸ்வாசத்தால் க்ஷணத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, பெரியவா இயற்கையையே இசைய வைத்துள்ளார் என்றால், பகவானுக்கு பக்தன் மேல் உள்ள அன்பை என்னவென்று சொல்லுவது? பெரியவா சரணம்! தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

Sri Maha Periva Divya Darshan - Part 17

Periva Kural - Dharma Prachaaram series Dharma Sookshmams - Part 1 by Ram Ram Mami Periva saranam! We are pleased to bring to your attention this video - Dharma Sookshmams - Part 1 by Ram Ram Mami (Smt Prema Krishnamurthi Satrigal, Chennai) Link: https://www.youtube.com/watch?v=_DhdP2lanTw Periva Saranam! Compiled by: Periva Kural Channel | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org