cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

ஆரோக்யமும் ஆன்மீகமும்

தீதும் நன்றும் பிறர் தர வார

Больше
Рекламные посты
2 346
Подписчики
-124 часа
+57 дней
+4030 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

Фото недоступноПоказать в Telegram
Yogic science Astro healing therapy..!
Показать все...
மழை நீர் நல்லது..! மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும். மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது. நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து. எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம். வாழ்வோம் ஆரோக்கியமாக. ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!
Показать все...
👍 6
சித்தர் சிவவாக்கியரின் பாடல்கள்..! "ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே" அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே. "உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல் விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே". நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். . இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை.. நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்.. ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!
Показать все...
👏 2👍 1
ஒரு சிறு விதையில் ஒரு விருட்சமே மறைந்திருப்பதுபோல..! ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அமானுஷ்யமான சக்தி நிறைந்திருக்கிறது..! அந்தச் சக்தியை அறிந்து, உணர்ந்து, பயன்படுத்தினால், எந்தப் பிரச்னையையும் எளிதில் சமாளிக்கலாம்; தோல்வியைத் தோற்கடிக்கலாம்; வெற்றிப் படிகளில் ஏறி, தொடமுடியாத சிகரங்களைத் தொடலாம். ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்கிறார் வள்ளுவர். வாழ்க்கையில் வெற்றி பெற, இடைவிடாத முயற்சி ஒன்றுதான் வழி என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறியுள்ளனர். முயற்சி எனும் சக்திக்கு ஆதாரமானது தன்னம்பிக்கை. ‘உன்னை நீ நம்பினால், உலகம் உன்னை நம்பும்; உன்னை நீ எடை போட்டு உன்னைப் பற்றிய உண்மைகளை நீ உணர்ந்தால், உன்னை நீ நம்ப முடியும்’ என்று கூறியுள்ளார் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ். அந்தத் தன்னம்பிக்கைதான் நம்முள் ஒளிந்திருக்கும் உன்னத சக்தி. எதை இழந்தாலும், இந்தத் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. "வாழ்க வளமுடன்" வெற்றிகரமான வாழ்க்கை வாழ தன்னம்பிக்கை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!
Показать все...
சுறுசுறுப்பு , ஆரோக்கியம் பெற ஹாலாசனம்..! ஹாலாசனம்.. இது மல்லாந்து படுத்துச் செய்யும் ஆசனமாகும், இதனுடைய இறுதி நிலை கலப்பை போன்று உள்ளதால் இப்பெயர் பெறலாயிற்று. மனம் : வயிறு , முதுகு. மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு. செய்முறை: விரிப்பில் மல்லாந்து படுக்கவும்,கால்களைச் சேர்த்து வைக்கவும், தலைக்கு மேற்புறம் நன்றாக நீட்டி இருக்குமாறு செய்யவும். கால்களை மெல்ல உயரே தூக்கவும்.முழங்கால்களை மடக்காமல் தரையிலிருந்து 45 டிகிரிக்குக் கால்கள் சாய்ந்தபடி இருக்குமாறு வைக்கவும். கால்களை 90 டிகிரிக்குக் கொண்டு வரவும். கால்களைத் தரைக்கு இணையாகக் கொண்டு வரவும். கால்களைப் பின்புறமாக நீட்டிதரையைத் தொடவும் கைகள் நீட்டியவாறு தரையிலிருக்கட்டும். முகவாய்க்கட்டை நெஞ்சுக் குழியைத் தொட்டுக் கொண்டிருக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்குவரவும். பலன்கள்: முதுகுத் தண்டு வடம், தண்டு வடத்தின் நரம்புகள் மற்றும் முதுகுத் தசைகள் நீட்டி, இழுக்கப் பட்டு நன்கு செயல்படுகின்றன. இரத்தஓட்ட மிகுதியால் கழுத்து நரம்புகள் பலம் பெறுகின்றன. தைராய்டு சுரப்பிகள் நன்கு செயல்படுகின்றன. இருமல்,சளிபோன்ற நோய்கள் குணமாகின்றன. இதயம் தலைகீழாக அமைந்து செயலாற்றுவதால், இதயத்தின் மீதான பாரம் குறைகிறது. நுரையீரல்களும் தலைகீழாக்கப்படுவதால், அதன் அடிப்பாகத்தில் தேங்கியிருக்கும் அசுத்தக் காற்று முற்றிலுமாக அகற்றப்படுகிறது. தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிகள் நன்றாக அழுத்தப்படுவதால், தைராக்ஸின் என்ற சுரப்பு நீர் நன்றாகச் சுரந்து, உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மூளைக்கும் நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் அதன் ஆற்றல் பெருகுகிறது. உடல் ரீதியான பலன்கள் : இரத்தம் சுத்தமடையும் கழிவுகள் நீங்கும் சுறுசுறுப்பு , ஆரோக்கியம் பெருகும். குணமாகும் நோய்கள் : அஜீரணம் , பலவீனமான வயிற்றுத்தசைகளால் ஏற்படும் மலச் சிக்கலுக்கு நல்லது. முதுகுத்தண்டு வலி, வயிற்று வலி ,நரம்புத்தளர்ச்சி நீங்கும். ஆன்மீக பலன்கள்: மன உடல் அமைப்பைத் தூண்டி, ஊக்கமூட்டி இலேசாகச் செய்கிறது. எச்சரிக்கை : எந்த நிலையிலும் உடல் உதறுதல் கூடாது. கழுத்து ,முதுகு பிரச்னை உள்ளவர்கள் இதை செய்யக் கூடாது குறிப்பு : உணவு உண்ட பிறகு செய்யக் கூடாது. மாத விடாய் மற்றும் கர்ப்பிணி பெண்கள் செய்யக் கூடாது. இதயக் கோளாறு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ,ஹெர்னியா பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. Yogic Science Astro healing therapy –  Yoga therapist health and spiritual doubts contact through What’s app -  https://wa.me/919894012434 யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!! "ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
Показать все...
எனவே வியாபார ஆன்மிகத்தோடு, இந்த ஆன்மிகத்தை ஒப்பிட வேண்டாம் என்று உங்கள் மலர் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். இதையும் தவறாகப் பயன்படுத்துபவர்கள் இருப்பார்கள். நாம்தான் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும். இதைப்பற்றி பேச விழைகிற போது புத்த பிரானின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. புத்த பிரானின் சீடர் ஒருவர் புத்தரிடம் ஆண்டவன் இருக்கிறாரா ? இல்லையா ? என்ற கேள்வியே பல முறைக் கேட்டுப் பார்த்தார். மௌனமே பதிலாக வந்தது. அவரும் வெறுத்துப் போய் தாம் புத்தரை விட்டு விலகி லௌகீக வாழ்க்கைக்கு போகப் போவதாக அறிவித்தார். புத்தருக்கு தெரியா விட்டால் தெரியாது என்று சொல்ல வேண்டியது தானே என்றும் கேட்கிறார். புத்தர் சிரித்து விட்டு ஒரு குட்டிக்கதையைப் பதிலாகத் தந்தார். ஒரு மனிதன் விஷம் தோய்ந்த அம்பால் தாக்கப்படுகிறான். அவனது கூட்டத்தார்கள் விரைவாகச் செயல்பட்டு அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முற்படுகின்றனர். வலியால் கதறுகிற நிலையிலும் அவன் தன் நண்பர்களைத் தடுத்து, என்மீது அம்பு எய்தவன் யார் ? அது தெரியாத வரையில் நான் இந்த அம்பைப் பிடுங்க சம்மதிக்கமாட்டேன் என்றானாம். அவரின் இந்த கதையைக் கேட்ட சீடர் தன் தவறைப் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம். இது என்னவென்றால் அம்பு எய்தவன் யார் ? அவன் எந்த ஊர் ? எதற்காக அம்பு எய்தான் ? இதையெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தால் இவன் உயிர் பிழைப்பது கடினம். ஆக சீடரின் கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருந்தால் காலம்தான் விரயமாகும். பதிலைக் கண்டு பிடிப்பதற்கு முன் உயிர் பிரிந்து விடும் என்கிறார் புத்தர். இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் இந்த உலகமெங்கும் காணப்படுகின்ற அனைத்தும் இறைவனே. எல்லாம் பேரறிவு சொரூபமே என்கிற நிலையான உணர்வு ஒருவனுக்கு எப்போது ஏற்படுகிறதோ, அப்போதே அவன் தரிசனத்தைப் பெற்றவனாகிறான். ஏன் ? இறைவனாகவே ஆகிவிடுகிறான்... இராம் மனோகர். நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….” ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!
Показать все...
💯 2
எங்கிருந்து வந்ததோ அங்கேயே போக வேண்டும்...! இந்த தியானம், யோகம் பற்றிய பதிவுகளில் ஆன்மிகம் என்று குறிப்பிடுவதைப் பற்றி நாம் சற்று ஆழ்ந்து கவனிக்க வேண்டும். உலக மெங்கும் பரவி, எங்கும் நீக்கமற நிரம்பி இருக்கிற பேராற்றல் நம் உடலிலும் உயிராற்றலாக இருக்கிறது. இதையே முன்னவர்கள் பரமாத்மா, என்றும் ஜீவாத்மா வென்றும் குறிப்பிடுகின்றனர். அதில் இருந்து வந்தாலும் அதற்கு மாறுபட்ட குணநலன்களைப் பெற்றுத் திகழ்வதால், அதனுடைய இயக்க விதிகளுக்கு முரண்படுவதால் துன்ப நிலைக்கு ஜீவாத்மா ஆளாகிறது. நம் முன்னவர்கள் சொல்கிற தீர்மானமான விஷயம் என்னவென்றால் அதைப் போலவே களங்கமற்ற, பேதமற்ற, பரிசுத்தமான ஆன்மா மட்டுமே அதை அடைய முடியும். மற்றவை பரிசுத்தமாகிற வரை உலகில், பிறவிச் சுழலில் சிக்கி உழன்று கொண்டிருக்கும் என்பதுவே. இதற்கும் மாறுபட்ட கருத்து உள்ளது. அது என்னவென்றால் மறு பிறவி என்பதெல்லாம் கிடையாது. வாழும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும் மற்றவர்களையும் சந்தோஷமாக வாழவிட வேண்டும் என்பதாகும். ஆனால் எல்லோரும் இந்தக் கொள்கையை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் சுயநலம் என்பது மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனமாக இருக்கிறது. எனவே தன் சந்தோஷத்துக்காக அவன் மற்றவர்களை அழிக்கத் தயங்க மாட்டான். எனவே இந்த கருத்தில் நிறைய பேருக்கு உடன்பாடில்லை. இன்னும் ஒரு கருத்து உள்ளது. மனிதனுக்கு மறுபிறவி கிடையாது. அவன் எண்ண அலைகள் அழிவதில்லை. அவை ஒத்த அலை வரிசை கொண்ட மற்றவர்கள் மனதில் புகுந்து கொண்டு எண்ணங்களை உண்டாக்கி செயலாக மலர்கின்றன. எனவே நல்லவற்றையே எண்ண வேண்டும், நல்லவற்றையே செய்ய வேண்டும், நல்லவர்களாக வாழ வேண்டும். அப்படி எல்லோரும் வாழ்ந்தால் உலகெங்கிலும் நல்ல எண்ண அலைகள் மட்டுமே மிதந்து கொண்டிருக்கும். பிற்காலத்தில் பிறந்து வரக்கூடிய நம் சந்ததிகள் நல்லவர்களாக இருப்பார்கள். இப்படிப் பலவிதமான கருத்துகள் நிலவி வந்த போதிலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வது மறுபிறவிக் கொள்கையையே. சிலர் சித்தர் சிவவாக்கியர் பாடலை மேற்கோள் காட்டுவார்கள். மறு பிறவி இல்லை என்று. கூர்ந்து கவனித்தால் அவர் மற்றொரு பாடலில் எழு பிறப்பைப் பற்றிச் சொல்லியிருப்பார். அதாவது, கறந்தபால் முலைபுகா கடைந்தவெண்ணெய் மோர்புகா உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே. இது அந்தப் பாடல். ஆனால் அதற்குப் பிறகு வருகிற ஒரு பாடலில், அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை... என்பார். எனவே அவர் மறு பிறவியை மறுக்கிறார் என்று சொல்வதற்கில்லை. முறைப்படி வாழ்ந்தவன். சிவத்தை உணர்ந்தவன் மறுபடியும் பிறப்பதில்லை என்று கொள்ளலாம். இங்கு சிவம் எனப்படுவது பரம சிவமாகிய பேராற்றலை என்பதை உணர வேண்டும். ஆக ஆன்மிகம் என்று சொல்வது இந்த கோவிலுக்குப் போனால் உங்கள் எண்ணமெல்லாம் பூர்த்தியாகும் என்றோ, இந்த சாமியார் தொட்டால் அல்லது நீங்கள் அவர் காலில் விழுந்தால் உங்களுக்கு பணமும், புகழும் பெருகும் என்றோ, இந்த எங்களது வழியைப் பின்பற்றினால் உங்களுக்கு இரட்சிப்பு, சொர்க்கம் என்றோ வீதிகளில் கூவி வியாபாரம் செய்வதைப் பற்றி பேசவில்லை. அதற்கும் நான் இங்கே குறிப்பிடுகின்ற ஆன்மிக சாதனைகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது தன்னை அறிதல் அதாவது ஆன்மாவை அறிதல். ஆன்மா எது? அது எங்கிருந்து வருகிறது? அதன் பிறப்பிடம் எது ? அதை எப்படி அடைவது என்று தேடுவது. கேட்பது. கேட்பது என்றால் உங்களுக்குள்ளே நீங்கள் தேடி, உங்களிடமே நீங்கள் இடைவிடாமல் கேட்க வேண்டும். இங்கே கேட்கப்படும் கேள்வி அங்கேயும் கேட்கும். ஏனென்றால் அதுவே உங்களுக்குள் உயிராக, ஆன்மாவாக இருக்கிறது. எனவே பதில் உங்களைத் தேடி வரும். எதற்காக பிறப்பிடத்தைத் தேட வேண்டும ? ஏன் அங்கே போக வேண்டும் ? இதற்கு பதில் என்னவென்றால் இந்த உலகத்தில் எல்லா சக்தி இயக்கங்களும் சுழற்சி முறையில் தான் இயங்குகின்றன. எங்கிருந்து வருகிறதோ அங்கேயே முடியும். அது போல ஆன்மாவும் எங்கிருந்து வந்ததோ அங்கேயே போக வேண்டும். போகும். (இதையே வனத்திலே மேய்ந்தாலும் இனத்திலே அடைய வேண்டும் என்பார்கள்.) ஆனால் உணராமல் போனால் ஆகும் கால தாமதத்தை தவிர்ப்பதே இங்கு ஆன்மிகம். ஆன்மாவுக்கு மீட்சி தருவது. ஆன்மாவைக் கடை ஏற்றுவது. நம் ஆன்மாவை பேரான்மாவோடு இணைத்து இன்பமடைவது இதுவே இங்கு கூறப்படும் ஆன்மிகம். இதற்கு ஒரு குரு தேவைதான். அவர் வழியைக் காட்டுவார். நாம்தான் நம்முடைய சொந்த முயற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும். இங்கு கூறப்படும் ஆன்மிகத்தில். உள்ளம் பெருங் கோவில். ஊனுடம்பு ஆலயம். முதுகுத்தண்டே மேருமலை. சோமனபாணமே அமிர்தம். உமிழ்நீரே கங்கை.(எச்சில் வேறு). நல்வினைகளே தேவர்கள். தீவினைகளும் அவற்றின் விளைவுகளும் அசுரர்கள். இடகலையே சந்திரன். பிங்கலையே சூரியன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
Показать все...
Выберите другой тариф

Ваш текущий тарифный план позволяет посмотреть аналитику только 5 каналов. Чтобы получить больше, выберите другой план.