fa
Feedback
சிவசக்தி டெலிகிராம் சேனல்

சிவசக்தி டெலிகிராம் சேனல்

رفتن به کانال در Telegram

எம் கடன் பணிசெய்து கிடப்பதே

نمایش بیشتر
485
مشترکین
-124 ساعت
-37 روز
اطلاعاتی وجود ندارد30 روز

در حال بارگیری داده...

کانال‌های مشابه
هیچ داده‌ای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
ابر برچسب‌ها
هیچ داده‌ای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
ژوئیه '26
ژوئیه '26
+9
در 2 کانال‌ها
ژوئن '26
+4
در 2 کانال‌ها
Get PRO
مه '26
+14
در 2 کانال‌ها
Get PRO
آوریل '26
+10
در 3 کانال‌ها
Get PRO
مارس '26
+11
در 3 کانال‌ها
Get PRO
فوریه '26
+10
در 2 کانال‌ها
Get PRO
ژانویه '26
+7
در 2 کانال‌ها
Get PRO
دسامبر '25
+7
در 2 کانال‌ها
Get PRO
نوامبر '25
+36
در 3 کانال‌ها
Get PRO
اکتبر '25
+2
در 2 کانال‌ها
Get PRO
سپتامبر '25
+3
در 2 کانال‌ها
Get PRO
اوت '25
+6
در 2 کانال‌ها
Get PRO
ژوئیه '25
+8
در 2 کانال‌ها
Get PRO
ژوئن '25
+10
در 2 کانال‌ها
Get PRO
مه '25
+5
در 2 کانال‌ها
Get PRO
آوریل '25
+10
در 2 کانال‌ها
Get PRO
مارس '25
+9
در 3 کانال‌ها
Get PRO
فوریه '25
+11
در 2 کانال‌ها
Get PRO
ژانویه '25
+15
در 2 کانال‌ها
Get PRO
دسامبر '24
+20
در 3 کانال‌ها
Get PRO
نوامبر '24
+13
در 3 کانال‌ها
Get PRO
اکتبر '24
+7
در 2 کانال‌ها
Get PRO
سپتامبر '24
+10
در 2 کانال‌ها
Get PRO
اوت '24
+3
در 3 کانال‌ها
Get PRO
ژوئیه '24
+7
در 3 کانال‌ها
Get PRO
ژوئن '24
+1
در 2 کانال‌ها
Get PRO
مه '24
+2
در 2 کانال‌ها
Get PRO
آوریل '24
+1
در 2 کانال‌ها
Get PRO
مارس '24
+5
در 2 کانال‌ها
Get PRO
فوریه '24
+3
در 3 کانال‌ها
Get PRO
ژانویه '24
+18
در 3 کانال‌ها
Get PRO
دسامبر '23
+34
در 3 کانال‌ها
Get PRO
نوامبر '23
+23
در 3 کانال‌ها
Get PRO
اکتبر '23
+7
در 2 کانال‌ها
Get PRO
سپتامبر '23
+6
در 0 کانال‌ها
Get PRO
اوت '23
+28
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '23
+21
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '23
+24
در 0 کانال‌ها
Get PRO
مه '23
+13
در 0 کانال‌ها
Get PRO
آوریل '23
+21
در 0 کانال‌ها
Get PRO
مارس '23
+23
در 0 کانال‌ها
Get PRO
فوریه '23
+36
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '23
+43
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '22
+42
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '22
+33
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '22
+32
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '22
+26
در 0 کانال‌ها
Get PRO
اوت '22
+52
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '22
+35
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '22
+48
در 0 کانال‌ها
Get PRO
مه '22
+45
در 0 کانال‌ها
Get PRO
آوریل '22
+43
در 0 کانال‌ها
Get PRO
مارس '22
+26
در 0 کانال‌ها
Get PRO
فوریه '22
+25
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '22
+32
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '21
+47
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '21
+127
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '21
+24
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '21
+41
در 0 کانال‌ها
Get PRO
اوت '21
+34
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '21
+36
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '21
+234
در 0 کانال‌ها
تاریخ
رشد مشترکین
اشارات
کانال‌ها
29 ژوئیه0
28 ژوئیه0
27 ژوئیه0
26 ژوئیه0
25 ژوئیه0
24 ژوئیه0
23 ژوئیه0
22 ژوئیه0
21 ژوئیه+1
20 ژوئیه0
19 ژوئیه0
18 ژوئیه0
17 ژوئیه0
16 ژوئیه0
15 ژوئیه0
14 ژوئیه0
13 ژوئیه+1
12 ژوئیه+1
11 ژوئیه+1
10 ژوئیه+1
09 ژوئیه0
08 ژوئیه0
07 ژوئیه+1
06 ژوئیه0
05 ژوئیه+1
04 ژوئیه+1
03 ژوئیه+1
02 ژوئیه0
01 ژوئیه0
پست‌های کانال
https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *"தினம் ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில்,* *மூலவர் : யோகீஸ்வரர்.* *புத்தேரி -629 001,* *நாகர்கோவில்,* *கன்னியாகுமரி.* *காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை வெளியிலிருந்தே தரிசிக்கலாம்.* *+91-4652-275 230, 94871 01770.* *சிறப்பு : பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் கண் திறப்பு வைபவம் நடக்கும். வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது,கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது.* *பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார்.* *மூலவராக வணங்கும் சுவரின் மணலையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்கள் இதனை சிறிதளவு நீரில் கரைத்துச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்புகிறார்கள்.* *யோகீஸ்வரரிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், காவடி எடுத்து காவி வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.* *தினசரி பூஜையின்போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.* *மாம்பால் நைவேத்யம் : வைகாசி விசாகத் தன்று சாஸ்தா மற்றும் யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். அப்போது மாம்பழம், பலாப்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து சாறு தயாரிக்கப்படும். "மாம்பால்' எனப்படும் இந்த கலவையை சுவாமிக்கு படைத்து வழிபடுகிறார்கள்.* *பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று மட்டும் இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால், "புற்றேரி' எனப்பட்ட இவ்வூர் "புத்தேரி' என மருவியது.* *முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில், காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் எழுந்தருளியிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு "பூலா உடைய கண்டன் சாஸ்தா' என்று பெயரிட்டு, சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒருசமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர், இங்கே பலகாலம் தங்கினார். இங்கேயே ஜீவ சமாதியடைந்தார். சிலகாலம் கழித்து, யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. வியந்த மக்கள், புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறைவனாகக் கருதி வழிபட்டனர். இந்தச் சுவரை சிவ அம்சமாகக் கருதிய பக்தர்கள், "யோகீஸ்வரர்' என்றும் பெயர் சூட்டினர்.* *கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது.* *திருச்சிற்றம்பலம்*

2
بدون متن...
5
3
بدون متن...
15
4
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁முத்தழல் ஓம்பி னார்கள் மறைநாலும் ஓதி முறையால்வ ணங்கு முதல்வன்_ _🍁செத்தவர் என்பு தன்னை அணியாம கிழ்ந்த திருவாளன் ஒற்றை விடையன்_ _🍁தெத்தென என்று வண்டு தினமூது கின்ற திருநாவ லூரில் உறையும்_ _🍁அத்தனை எண்ணி நாளும் அலர்தூவி ஏத்த அறுமுன்பு செய்த வினையே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என்ற முத்தீ வளர்க்கும் அந்தணர்கள் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதி முறைப்படி வழிபாடு செய்யும் முதல்வன் !! மாண்டவர் எலும்பை மாலையாக அணிகின்ற செல்வன் !! ஒப்பற்ற இடபவாகனன் !! தெத்தென என்று வண்டுகள் எந்நாளும் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற தந்தையைத் தியானித்துத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
13
5
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏பெரியபுராணம்🙏* *☀️திருமுறை1️⃣2️⃣☀️* *🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்* *🦚பாடல்:1551///4272🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹என்று கூற எல்லையிலா நீறு போற்றும் இருவரையும் சென்று காணும் கருத்துடையேன் அங்குத் தீங்கு புரிஅமணர் நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறிபா ரித்தன்றி ஒன்றுஞ் செய்யேன் ஆணைஉம தென்றார் உடைய பிள்ளையார். ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *நாவரசர் இவ்வாறு கூறக்கேட்ட ஞானசம்பந்தர், அளவில்லாத பெருமை பொருந்திய திருநீற்றைப் போற்றுகின்ற அவ்விரு பெருமக்களையும் அங்குச் சென்று காணும் கருத்துடையேன். அத்தீமைகளைச் செய்கின்ற சமணர்களின் நிலைமையை அழிவித்துச் சைவ நெறியை வளர்த்தன்றி வேறு ஒரு செயல் செய்ய மாட்டேன்! உம் ஆணை! என்று அருளிச் செய்தவராய்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸சேக்கிழார்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
3
6
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருமந்திரம்🌹🙏* *☀️திருமுறை🔟☀️* *🦚பாடல்:2911///3000🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹கோரை எழுந்து கிடந்த குளத்தினில் 🌹ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது 🌹நாரை படிகின்றாற் போலல்ல நாதனார் 🌹பாரை கிடக்கப் படிகின்ற வாறே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *உள்ளம் என்ற குளத்தில் ஆசை என்னும் கோரைப் புற்கள் மண்டிக் கிடந்தன. பாசம் என்னும் ஆரையும் அதில் நீண்டு நிறைந்து இருந்தது. ஆரையும், கோரையும் நிரம்பி இருக்கும் குளத்தில் மீன்பிடிக்கும் நாரை போன்றவன் அல்ல நம் நாதன்! அவன் சலனம் அற்ற, தெளிந்த நீர் நிலை போன்ற, தூய உள்ளத்தில் சீவன் என்னும் மீனை பிடிப்பவன் ஆவான்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸திருமூலர்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
5
7
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை4️⃣☀️* *🌹திருவையாறு🌹* *🦚பாடல்:0955///1070🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த காடகக் கால்கணங் கைதொழுங் காலெங் கணாய்நின்றகால் ஆடகக் காலரி மாறேர வல்லனை யாற்றனவே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், பொன் போன்ற திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருநாவுக்கரசர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
5
8
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை3️⃣☀️* *🌹🌻திருவிளமர்🌻🌹* *🦚பாடல்:0955///1358🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச் சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய அந்தணர் புகலியு ளழகம ரருமறை ஞானசம் பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை பறையுமே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண் நீற்றினை அணிந்த தலைவரை, திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை ( விகிர்தர் ), சிந்தையுள் இடையறாது இருத்தும்படி, அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதுவோர் வினை அழியும்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருஞானசம்பந்தர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
5
9
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருவருட்பா🌹🙏* *☀️திருமுறை2️⃣☀️* *🦚இரண்டாம் தொகுதி🦚* *🌹அருள் மொழி மாலை🌹* *🌷திருவொற்றியூர்🌷* _🌻அஃதாவது பிச்சைத் தேவர் நங்கையின் மனைக்குப் போந்து கவர் பொருள்பட வழங்கி யருளிய மொழிகட்கு நங்கை தோழியோடு உரையாடி யுசாவுவதாம். தேவரது அருண் மொழிகளே பொருளாய் நின்று சொல் மாலையாவதால், இஃது அருண் மொழி மாலை என்ற பெயர் பெறுகிறது._ *🦚பாடல்:1735///5818🦚* ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ 🌹விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில் வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார் தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன் தோகாய் நாமே தொண்டரென்றார் அண்டர்க் கரியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *விளக்கம் :* *திருமால் வணங்கி வழிபடும் திருவொற்றியூரில் உள்ள தேவரே, மெல்லிய பூ மலர்ந்திருக்கவும் வலிய இதழ்களையுடைய பூக்களில் வண்டுகள் படிகின்றன என்றேனாக, எமது மலர்போன்ற கையிலணிந்த வண்டும் விழுந்ததுகாண் என்று கூறுகின்றார்; நீவிர் தொண்டர்கட்கு வேண்டுவ தளிப்பீர் என்று நான் சொல்ல, மயில் போன்றவளே, நாமும் தொண்டரே என்று தேவர்கட்கு அரியவராகிய அவர் எனக்கு உரைக்கின்றார்; அந்த ஐயர் உரைத்த அருள் மொழியின் கருத்தென்னையோ.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🦚🔥வள்ளலார்🔥🦚* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
7
10
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣    *திருமுறை ஓதுவோம்*      *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠     *_🌷சிவ வணக்கம்🌷_* *🌷சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்  உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷        *🌷சிவன் துதி🌷* *🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_சமய குரவர்கள் துதி_* *🌷பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி !!* *🌷ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி !!* *🌷வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி !!* *🌷ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷 *_திருஞானசம்பந்தர் சுவாமிகள்_* *🌷பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் குண்டரை வென்று முன் கூடல் வைகியே வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.* *_திருநாவுக்கரசு சுவாமிகள்_* *🌷பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.* *_சுந்தரமூர்த்தி சுவாமிகள்_* *🌷வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.* *_மாணிக்கவாசகர் சுவாமிகள்_* *🌷கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_* *_🌷அரகர சிவசிவ🌷_*
17
11
வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். விவாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் எண்ணியவை நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் உத்திராடம் : மாற்றம் ஏற்படும். திருவோணம் : சேமிப்பு மேம்படும். அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். --------------------------------------- கும்பம் ஜூலை 30, 2026 அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவருவீர்கள். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும். சதயம் : பயணங்கள் மேம்படும். பூரட்டாதி : கவனம் வேண்டும். --------------------------------------- மீனம் ஜூலை 30, 2026 விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான தேடல்கள் மனதில் உருவாகும். தடைப்பட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம் பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும். உத்திரட்டாதி : தேடல்கள் உருவாகும். ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
50
12
செய்யும் காரியங்களில் எதிர்பார்த்திருந்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலைச்சல்கள் மூலம் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும். திருவாதிரை : பொறுமை வேண்டும். புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும். --------------------------------------- கடகம் ஜூலை 30, 2026 இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான பக்குவம் ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் கைக்கூடி வரும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும். ஆயில்யம் : புரிதல் ஏற்படும். --------------------------------------- சிம்மம் ஜூலை 30, 2026 இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்கள் நிறைவேறும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மகம் : புரிதல் மேம்படும். பூரம் : அறிமுகம் உண்டாகும். உத்திரம் : திருப்பம் ஏற்படும். --------------------------------------- கன்னி ஜூலை 30, 2026 பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும். அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும். சித்திரை : வேறுபாடுகள் குறையும். --------------------------------------- துலாம் ஜூலை 30, 2026 மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் சித்திரை : மாற்றங்கள் ஏற்படும். சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். விசாகம் : பொறுப்புகள் கிடைக்கும். --------------------------------------- விருச்சிகம் ஜூலை 30, 2026 எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விளம்பர சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் விசாகம் : தைரியம் பிறக்கும். அனுஷம் : ஏற்ற இறக்கமான நாள். கேட்டை : திறமைகள் வெளிப்படும். --------------------------------------- தனுசு ஜூலை 30, 2026 நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். தன வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம் மூலம் : மதிப்புகள் மேம்படும். பூராடம் : பிரச்சனைகள் குறையும். உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். --------------------------------------- மகரம் ஜூலை 30, 2026
39
13
Join my WhatsApp group. https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *நமது ஓம் நமசிவாய ஆன்மிக குழுவிலிருந்து 30-07-2026 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :* 30-07-2026 தமிழ் ஆண்டு, தேதி - பரபாவ, ஆடி 14 நாள் - மேல் நோக்கு நாள் பிறை - தேய்பிறை *நமது சிவசக்தி Whatsapp சேனலில் இனைய👇* https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l *திதி* கிருஷ்ண பக்ஷ பிரதமை - Jul 29 08:05 PM – Jul 30 09:30 PM கிருஷ்ண பக்ஷ துவிதியை - Jul 30 09:30 PM – Jul 31 10:31 PM *நட்சத்திரம்* திருவோணம் - Jul 29 03:37 PM – Jul 30 05:43 PM அவிட்டம் - Jul 30 05:43 PM – Jul 31 07:26 PM *கரணம்* பாலவம் - Jul 29 08:05 PM – Jul 30 08:51 AM கௌலவம் - Jul 30 08:51 AM – Jul 30 09:30 PM சைதுளை - Jul 30 09:30 PM – Jul 31 10:04 AM *யோகம்* ஆயுஷ்மான் - Jul 29 11:57 PM – Jul 31 12:04 AM சௌபாக்யம் - Jul 31 12:04 AM – Jul 31 11:53 PM *வாரம்* வியாழக்கிழமை *சூரியன் மற்றும் சந்திரன் நேரம்* சூரியோதயம் - 5:57 AM சூரியஸ்தமம் - 6:32 PM சந்திரௌதயம் - Jul 30 7:16 PM சந்திராஸ்தமனம் - Jul 31 7:08 AM *அசுபமான காலம்* இராகு - 1:49 PM – 3:24 PM எமகண்டம் - 5:57 AM – 7:32 AM குளிகை - 9:06 AM – 10:40 AM துரமுஹுர்த்தம் - 10:09 AM – 10:59 AM, 03:11 PM – 04:01 PM தியாஜ்யம் - 10:00 PM – 11:43 PM *சுபமான காலம்* அபிஜித் காலம் - 11:50 AM – 12:40 PM அமிர்த காலம் - 06:24 AM – 08:08 AM பிரம்மா முகூர்த்தம் - 04:21 AM – 05:09 AM *ஆனந்ததி யோகம்* துவஜ Upto - 05:43 PM ஸ்ரீவச்சம் *வாரசூலை* சூலம் - South பரிகாரம் - தைலம் *சூர்யா ராசி* சூரியன் கடகம் ராசியில் *சந்திர ராசி* மகரம் (முழு தினம்) ______ *வியாழன் ஹோரை* காலை 06:00 - 07:00 - குரு - சுபம் 07:00 - 08:00 - செவ் - அசுபம் 08:00 - 09:00 - சூரி - அசுபம் 09:00 - 10:00 - சுக் - சுபம் 10:00 - 11:00 - புத - சுபம் 11:00 - 12:00 - சந் - சுபம் பிற்பகல் 12:00 - 01:00 - சனி - அசுபம் 01:00 - 02:00 - குரு - சுபம் 02:00 - 03:00 - செவ் - அசுபம் மாலை 03:00 - 04:00 - சூரி - அசுபம் 04:00 - 05:00 - சுக் - சுபம் 05:00 - 06:00 - புத - சுபம் 06:00 - 07:00 - சந் - சுபம் நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். ______ நாளைய (30-07-2026) ராசி பலன்கள் மேஷம் ஜூலை 30, 2026 நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும். பரணி : தெளிவுகள் ஏற்படும். கிருத்திகை : சாதகமான நாள். --------------------------------------- ரிஷபம் ஜூலை 30, 2026 உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும். ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும். மிருகசீரிஷம் : தெளிவுகள் உண்டாகும். --------------------------------------- மிதுனம் ஜூலை 30, 2026
26
14
Join my WhatsApp group. https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து பட்டினத்தார் குருபூஜை – வரலாறு, சிறப்புகள், வழிபாட்டு முறை மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :* தமிழ் சைவ சமய வரலாற்றில் துறவறத்தின் உச்சத்தை உலகிற்கு எடுத்துக்காட்டிய மாமகான்களில் முதன்மையானவர் பட்டினத்தார் சுவாமிகள். செல்வச் செழிப்பின் உச்சியில் வாழ்ந்தவர், உலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து அனைத்தையும் துறந்து சிவநெறியில் முழுமையாக அர்ப்பணித்தார். அவர் இறைவனுடன் இரண்டறக் கலந்த தினமே பட்டினத்தார் குருபூஜை என பக்தர்களால் ஆண்டுதோறும் பக்தி பெருக்குடன் அனுசரிக்கப்படுகிறது. *பட்டினத்தார் யார் ?* பட்டினத்தார் இயற்பெயர் திருவெண்காடர். காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) பகுதியைச் சேர்ந்த பெரும் வணிகரும், சிவபக்தருமாக விளங்கினார். அளவற்ற செல்வம் இருந்தும், ஒரு தெய்வீக நிகழ்வின் மூலம் உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தார். அவரது வாழ்க்கையை மாற்றியதாக பரவலாகக் கூறப்படும் நிகழ்வில், வளர்ப்பு மகன் வழங்கிய ஒரு சிறிய பெட்டிக்குள் "காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே" என்ற ஓலைச்சுவடி இருந்தது. இறக்கும் போது காதில்லாத ஒரு ஊசியைக் கூட எடுத்துச் செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்த அவர், செல்வம், புகழ், குடும்பப் பற்று அனைத்தையும் துறந்து சிவபெருமானின் திருவடிகளை அடைந்தார். *பட்டினத்தார் அருளிய போதனைகள்* பட்டினத்தார் பாடல்கள் மனித வாழ்வின் ஆழ்ந்த தத்துவத்தை எளிய தமிழில் எடுத்துரைக்கின்றன. *அவரது போதனைகளின் மையக்கருத்துகள் :* - வாழ்க்கை நிலையற்றது. - செல்வம், பதவி, புகழ் அனைத்தும் நிலையற்றவை. - இறைவனின் திருவடிகளே நிலையானவை. - அகந்தையை விட்டு எளிமையுடன் வாழ வேண்டும். - தானம், தர்மம் மற்றும் பக்தி வாழ்க்கையை உயர்த்தும். - இறைநாம ஜபமே முக்திக்கான எளிய வழி. *பட்டினத்தார் குருபூஜையின் ஆன்மிக முக்கியத்துவம்* குருபூஜை என்பது ஒரு ஞானியின் உடலை நினைவுகூரும் நாள் மட்டுமல்ல; அவர் வாழ்ந்த நெறியை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த உறுதி எடுக்கும் நாளாகும். இந்த நாளில் பட்டினத்தாரின் பாடல்களைப் பாராயணம் செய்வதும், அவருடைய துறவற வாழ்க்கையை நினைவுகூர்வதும் மனதில் பற்றின்மையையும் இறைநம்பிக்கையையும் வளர்க்கும். *குருபூஜை நாளில் செய்ய வேண்டிய வழிபாடு* அதிகாலையில் நீராடி சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். *வீட்டில் அல்லது பட்டினத்தார் சன்னதி உள்ள ஆலயத்தில் :* - விளக்கேற்றி வழிபடுதல் - சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் - வில்வ இலை அர்ச்சனை செய்தல் - "ஓம் நமசிவாய" மந்திரத்தை குறைந்தது 108 முறை ஜபித்தல் - பட்டினத்தார் பாடல்களைப் பாராயணம் செய்தல் - தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாராயணம் செய்தல் - குருவை மனதில் தியானித்தல் *செய்ய உகந்த தர்மங்கள்* - அன்னதானம் - ஏழை எளியோருக்கு ஆடை வழங்குதல் - மாணவர்களுக்கு கல்வி உதவி - ஆலயங்களுக்கு பூஜைப் பொருட்கள் வழங்குதல் - பசுக்களுக்கு தீவனம் அளித்தல் - மரக்கன்றுகள் நடுதல் - சிவனடியார்களுக்கு உதவி செய்தல் *பட்டினத்தார் குருபூஜை நாளில் பாராயணம் செய்ய உகந்த நூல்கள்* - பட்டினத்தார் பாடல்கள் - சிவபுராணம் - தேவாரம் - திருவாசகம் - திருவிசைப்பா - திருமந்திரம் *குருபூஜை நாளில் கிடைக்கும் பலன்கள்* - மன அமைதி அதிகரிக்கும். - உலகப் பற்றுகள் குறைந்து இறைபக்தி வளரும். - அகந்தை நீங்கி பணிவு உருவாகும். - குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். - தொழில் மற்றும் வாழ்வில் நல்ல சிந்தனை உருவாகும். - குருவருள் கிடைக்கும். - சிவபெருமானின் அருள் பெருகும். - ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். - ஞானம் மற்றும் வைராக்கியம் வளர்ச்சி அடையும். - தர்ம சிந்தனை அதிகரிக்கும். https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l *பட்டினத்தார் நமக்குக் கற்பிக்கும் வாழ்க்கைப் பாடங்கள்* - எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது நிரந்தரமல்ல. - வாழ்க்கையில் தர்மம் செய்ததே நம்மோடு வரும். - இறைவனை மறக்காமல் வாழ்வதே உண்மையான செல்வம். - பிறருக்கு உதவுவது உயர்ந்த வழிபாடு. - பற்றின்மையுடன் வாழ்வதே பேரின்பத்தின் பாதை. பட்டினத்தார் குருபூஜை என்பது ஒரு ஞானியை நினைவுகூரும் விழா மட்டுமல்ல; மனித வாழ்க்கையின் உண்மைப் பொருளை உணர்ந்து இறைவனை நோக்கி மனதைத் திருப்பும் புனித நாளாகும். இந்த நாளில் பக்தியுடன் சிவபெருமானை வணங்கி, பட்டினத்தாரின் அருள்வாக்குகளைப் பாராயணம் செய்து, தானம் மற்றும் தர்ம செயல்களில் ஈடுபட்டால் மன அமைதி, ஞானம், வைராக்கியம் மற்றும் குருவருள் பெருகும். "காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே" என்ற பட்டினத்தாரின் அமுதவாக்கு, உலக வாழ்க்கையின் நிலையாமையை என்றும் நமக்கு நினைவூட்டுகிறது. அந்த உண்மையை உணர்ந்து இறைவழியில் வாழ்வதே பட்டினத்தார் குருபூஜையின் உயர்ந்த நோக்கமாகும்.
34
15
*நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து ஆடி பௌர்ணமி வழிபாடு – சிறப்புகள், வழிபாட்டு முறை மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :* தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுவது ஆடி மாதம். இம்மாதத்தில் வரும் பௌர்ணமி (முழுநிலவு) நாள், சிவபெருமான், அம்பிகை, சந்திர பகவான் மற்றும் குருமார்களின் அருளைப் பெற மிகவும் உகந்த நாளாகும். ஆன்மிக சாதனை, தியானம், ஜபம், விரதம், தானம் ஆகியவற்றிற்கு ஆடி பௌர்ணமி மிகுந்த மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. *ஆடி பௌர்ணமியின் ஆன்மிக சிறப்பு* பௌர்ணமி என்பது சந்திரன் முழுமையாக ஒளிரும் நாள். மனதைக் குறிக்கும் சந்திரன் முழு ஒளி பெறும் இந்த நாளில் மன அமைதி, அறிவுத் தெளிவு மற்றும் இறையருள் எளிதில் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் தெய்வீக சக்திகள் அதிகம் செயல்படும் காலமாகக் கருதப்படுவதால், இந்த மாத பௌர்ணமியில் செய்யப்படும் வழிபாடு பல மடங்கு பலன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. *ஆடி பௌர்ணமி அன்று வழிபட வேண்டிய தெய்வங்கள்* - சிவபெருமான் - அன்னை பார்வதி - சந்திர பகவான் - தட்சிணாமூர்த்தி - குருமார்கள் மற்றும் சித்தர்கள் *வழிபாட்டு முறை* அதிகாலையில் நீராடி சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் விளக்கேற்றி, சிவன் மற்றும் அம்பிகைக்கு பூஜை செய்ய வேண்டும். *பின்வரும் மந்திரங்களை ஜபிக்கலாம் :* - ஓம் நமசிவாய - ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் பார்வத்யை நம: - மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் - லலிதா சஹஸ்ரநாமம் - சிவபுராணம் - தேவாரம் மற்றும் திருவாசகம் இரவு முழுநிலவை தரிசித்து, சந்திர பகவானுக்கு நீர் அல்லது பால் அர்க்யம் செலுத்தி வழிபடுவது சிறப்பாகும். *செய்ய வேண்டிய தர்மங்கள்* - அன்னதானம் - பசுக்களுக்கு தீவனம் வழங்குதல் - பறவைகளுக்கு தானியம் இடுதல் - ஏழை எளியோருக்கு உணவு மற்றும் உடை வழங்குதல் - ஆலயங்களுக்கு எண்ணெய், நெய், பூஜைப் பொருட்கள் வழங்குதல் *ஆடி பௌர்ணமி விரதத்தின் பலன்கள்* - மன அமைதி மற்றும் மன உறுதி அதிகரிக்கும். - குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். - திருமணத் தடைகள் நீங்கும். - புத்திர பாக்கியம் கிடைக்கும். - கல்வி மற்றும் ஞான வளர்ச்சி ஏற்படும். - தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். - கடன் தொல்லைகள் குறையும். - சந்திர தோஷம் தொடர்பான பாதிப்புகள் தணியும். - உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். - முன்னோர் மற்றும் குருமார்களின் அருள் கிடைக்கும். - சிவபெருமான் மற்றும் அம்பிகையின் பரிபூரண அருள் கிடைக்கும். https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l *ஆடி பௌர்ணமியில் செய்ய உகந்த ஆன்மிக சாதனைகள்* - ருத்ராபிஷேகம் - சிவாலய தரிசனம் - கிரிவலம் - தியானம் - மௌன விரதம் - குரு வணக்கம் - சித்தர் ஜீவசமாதி தரிசனம் - மரக்கன்றுகள் நடுதல் - வேதம் மற்றும் திருமுறைகள் பாராயணம் *தவிர்க்க வேண்டியவை* - கோபம் மற்றும் கடுமையான பேச்சு - பிறரை அவமதித்தல் - அசைவ உணவு மற்றும் மதுபானம் - பொய், வஞ்சகம், தீய எண்ணங்கள் ஆடி பௌர்ணமி என்பது வெறும் முழுநிலவு நாள் மட்டுமல்ல; மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் இறையருளால் நிரப்பும் அரிய புண்ணிய நாளாகும். இந்த நாளில் பக்தியுடன் சிவபெருமானையும் அன்னை பார்வதியையும் வழிபட்டு, ஜபம், தியானம், தானம் மற்றும் தர்ம செயல்களில் ஈடுபட்டால் வாழ்க்கையில் அமைதி, ஆரோக்கியம், செல்வம், ஞானம் மற்றும் இறையருள் பெருகும். "ஆடி பௌர்ணமியில் சிவனை நினைப்போம்; அம்பிகையை வணங்குவோம்; தர்மம் செய்வோம்; இறையருள் பெற்று இன்பமுடன் வாழ்வோம்."
36
16
https://chat.whatsapp.com/BwMw5HY2ggB7g6MaBmFBMD?s=qt&p=a&ilr=0 *"தினம் ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில்,* *மூலவர் : குமார சுவாமி.* *உற்சவர் : மணவாளகுமரன்.* *வேலிமலை 629 175,* *நாகர்கோயில்,* *கன்னியாகுமரி மாவட்டம்.* *காலை 6:00 மணி முதல் 11:00  மணி வரை, மாலை 4:00  மணி முதல் இரவு 8:00  மணி வரை திறந்திருக்கும்.* *+91-4651-250706, 233270.* *சிறப்பு : வைகாசி விசாகத் திருவிழா - 10 நாள் ஆவணி கடைசி வெள்ளி -புஷ்பாபிஷேகம் -1 நாள் பங்குனி திருக்கல்யாணம் - 7 நாள். வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.* *மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவர் தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். 10 அடி உயர சிலையாக சுவாமி பிரமாண்டமாக காட்சி தருவது சிறப்பு. சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படுகிறது. இதை வைத்து பார்க்கின்ற போது இந்த சுதை புத்தர்கால கட்டத்தை சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள். சுதை சாதாரண கல் வகையை சேர்ந்ததாக இல்லாமல் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும் அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.* *இத்தலத்தில் வேண்டும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கியருளும் கடவுளாக வேலிமலைக் கடவுள் திகழ்கிறார். திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார விருந்தி, கல்வி ஞானமும், உடல்பலமும் கொடுக்கும் தெய்வமாக திகழ்கிறார். மனபலம், உடல் பலம் ஆகியவை தருபவராகவும், மனதுக்கு அமைதியும் தரும் சிறப்பு பெற்றவராகவும் உள்ளார். இங்குள்ள இறைவனை மலையேறி வணங்கினால் நம் உடற்பிணியெல்லாம் விட்டு விலகும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.* *மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.* *கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோயில் கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் - வள்ளி தோழியரோடு தினைப்புனம் விளையாடிய இடமாக கருதப்படுகிறது.* *முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில், குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமையான இக்கோயிலில் தென் கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது.* *வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.*
81
17
بدون متن...
56
18
بدون متن...
49
19
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁அழலாரும் ஆகத்தில் ஆயிழையோர் பாகத்தன்_ _🍁நிழலாரும் வெண்மழுவன் நிலவேறும் சடைதன்னுள்_ _🍁சுழலாரும் கங்கையினான் துடியேந்தும் அங்கையினான்_ _🍁அழகாரும் பொழில்சூழ்ந்த ஆமூரெம் பசுபதியே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_அழகிய சோலை சூழ்ந்த திருவாமூரில் எழுந்தருளியுள்ள எம் பசுபதி !! தீப் போன்ற செம்மேனியில் உமையை ஒரு பாகமாக உடையவன் !! ஒளி திகழும் வெண்மழுவை ஏந்தியவன் !! சந்திரன் ஏறிய சடையுள் சுழல் மிக்க கங்கையை உடையவன் !! கையில் உடுக்கையை ஏந்தியவன் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
38
20
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏பெரியபுராணம்🙏* *☀️திருமுறை1️⃣2️⃣☀️* *🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்* *🦚பாடல்:1550///4272🦚* மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹ஆய பொழுது திருநாவுக் கரசு புகலி ஆண்டகைக்குக் காய மாசு பெருக்கியுழல் கலதி அமணர் கடுவினைசெய் மாயை சாலம் மிகவல்லார் அவர்மற் றென்னை முன்செய்த தீய தொழிலும் பலகெட்டேன் செல்ல இசையேன் யான்என்றார். ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *அவ்வமயத்தில் நாவரசர், சீகாழி ஆண்டகையாரான ஞானசம்பந்தரிடம் உடலின் அழுக்கைக் கழுவாமல் பெருக்கியவாறே திரியும் தீயவரான சமணர்கள், கொடுமை செய்யும் வஞ்சனைகளில் மிகவும் வல்லவர்கள்; அவர்கள் எனக்கு முன் நாள்களில் செய்த கொடுமைகளும் பல ஆகும். ஆதலின் தாங்கள் அங்குச் செல்ல நான் ஒருப்படேன் என்று அருள் செய்தார்.* எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!! *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸சேக்கிழார்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
38