cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

Naushin_Binth_Sha

அல்குர்ஆன் அஸ் ஸுன்னாஹ் ஒளியில் உங்களுக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

نمایش بیشتر
پست‌های تبلیغاتی
912
مشترکین
+124 ساعت
+137 روز
+4530 روز

در حال بارگیری داده...

معدل نمو المشتركين

در حال بارگیری داده...

ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதற்காக குடும்பத்தின் பொறுப்புதாரி தன்னுடைய பிள்ளைகளையும், குடும்பத்தையும் ஸஹர் உணவிற்காக எழுப்பி விட வேண்டும். ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்தார் : ஆஷுரா நோன்பை பற்றி கூறினார்கள் : ரமழானுக்கு முன் கடமையாக்கப்பட்டிருந்தது எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். நூல் : ஸஹீஹ் புகாரி 1960 ஸஹீஹ் முஸ்லிம் 1136
نمایش همه...
👍 2
ஆஷூரா நோன்பு அனைத்து சிறு பாவங்களுக்கும் பரிகாரமாகும் பெரும் பாவங்களுக்கு அல்ல! ஒருவரிடத்தில் சிறு பாவங்கள் இருந்தால் அதற்கு இது பரிகாரமாக அமையும். சிறு பாவங்களோ பெரும்பாவங்களோ அவரிடத்தில் இல்லையெனில் இந்நோன்பின் மூலம் நன்மைகள் பதியப்படுவதுடன் அவருடைய அந்தஸ்து உயர்த்தப்படும். பெரும்பாவங்கள் நிகழ்ந்திருந்தால் அந்த பாவங்களின் வீரியம் இந்நோன்பின் மூலம் குறைக்கப்படும். நூல் : இமாம் நவவி (ரஹி) அவர்களின் ஷரஹ் முஸ்லிம் (3/113,8/51) | அல் மஜ்மூஃ (6/982)
نمایش همه...
👍 1
ரமழான் மாதத்திற்கு பிறகு மிகச் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பு என்று தெளிவாக வந்திருப்பதுடன் முஹர்ரம் மாதம் அல்லாத ஷஃபான் மாதத்தில் நபியவர்கள் அதிகம் நோன்பு நோற்றார்கள் என்பதற்கு உலமாக்கள் இரண்டு விதமான விளக்கங்களை கொடுக்கின்றார்கள்! முஹர்ரம் மாதத்தின் சிறப்பை நபியவர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் அறிந்திருக்கலாம். அல்லது பயணம் நோய் போன்ற காரணங்களினால் இம்மாதத்தில் அதிகம் நோன்பு நோற்க இயலாமலிருக்கலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்) ஆதாரம் இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஷரஹ் முஸ்லிம் (8/37,55) அல் மஜ்மூஃ 6/387 என்ற நூலிலும் இக்கருத்தை பார்வையிடலாம்.
نمایش همه...
👍 2
முஹர்ரம் மாதத்தில் அதிக நோன்பு நோற்பது விரும்பத்தக்க காரியம் எனினும் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரியக் கூடாது. (இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி( ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள். (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை! நூல் : ஸஹீஹ் புகாரி 1969, 1971 ஸஹீஹ் முஸ்லிம் 1156, 1157
نمایش همه...
👍 1
புனிதமான மாதங்களில் ஒருவர் தனக்குத் தானே தீங்கிழைக்க கூடாது. அல்லாஹ் இதனை தடை செய்துள்ளான். ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 9:36) கதாதா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : ஏனைய மாதங்களில் ஒருவர் அநியாயம் இழைப்பதை விட மகத்தான புனித மிக்க இந்த மாதங்களில் அநியாயம் இழைப்பது மிகப்பெரிய குற்றமாகும். அநியாயமாகும் எல்லா நிலைகளிலும் பாவமானது என்றாலும் அல்லாஹ் தான் நாடியதை மிகவும் மகத்துவப் படுத்துகிறான். நூல் : தஃப்ஸீர் தப்ரி 14/238 , தஃப்ஸீர் இப்னு கஸீர் 4/148
نمایش همه...
👍 2
முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்களும் சிறப்பு பெறுகின்றது. அபூ உஸ்மான் அந்நஹ்தி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : மூன்று பத்து நாட்களை சிறப்பிப்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் கடைசி 10 நாட்கள் தில் ஹிஜ்ஜாவின் முதல் 10 நாட்கள் முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்கள். நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப் 35
نمایش همه...
👍 1
இந்த (முஹர்ரம்) மாதத்தின் சிறப்புகளில் ஒன்று அல்லாஹ்வின் மாதம். (நூல் முஸ்லிம் 1163) என்று நபி ﷺ பெயர் சூட்டி இருப்பது . நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் சிலவற்றைத்தான் தன்னோடு இணைத்து சொல்கிறான். அதனால் அது சிறப்பும் மகத்துவமும் பெறுகிறது. உதாரணமாக அல்லாஹ்வின் வீடு , அல்லாஹ்வின் ஒட்டகம் , மேலும் முஹம்மத் ﷺ , இப்ராஹீம் , இஸ்ஹாக் , யஃகூப், என சில நபிமார்களின் பெயர்களை குறிப்பிட்டு தன்னுடைய அடியார்கள் என தன்னோடு இணைத்துச் சொல்வது போல நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப் பக்கம் 36 இமாம் இப்னு ரஜப்
نمایش همه...
அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் ஹிஜ்ரி ஆண்டின் முதல்மாதம் ஆகும். தொடர்ச்சியாக வரும் புனிதமான மூன்று மாதங்களில் (துல் கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ) மூன்றாவது மாதமாகும் . நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. (அல்குர்ஆன் 9:36) காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை : நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும். (நூல் : ஸஹீஹ் புகாரி 3197, ஸஹீஹ் முஸ்லிம் 1679)
نمایش همه...
👍 1
இந்த மகத்தான மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பது விரும்பத்தக்க காரியம் 📌✨ நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ரமழானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும். நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1163 இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : ரமழானுக்குப் பிறகு உபரியான நோன்புகளை நோற்பதற்கு மிகச் சிறந்த மாதம் அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதமாகும் எனபது இந்த ஹதீஸிலிருந்து மிகத்தெளிவாக தெரிகிறது. நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப் 33
نمایش همه...
ஆஷூரா 📌✨ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் (அங்கும்) ஆஷூரா நோன்பு நோற்றார்கள். அந்நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களையும்) பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2068.
نمایش همه...
یک طرح متفاوت انتخاب کنید

طرح فعلی شما تنها برای 5 کانال تجزیه و تحلیل را مجاز می کند. برای بیشتر، لطفا یک طرح دیگر انتخاب کنید.