cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

சட்டத்தெனாலிராமன்

நீ வாழ நீயே வாதாடு!!! உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்! RTI என்பது அரசூழியர்களை காக்க வந்த தறுதலைச்சட்டம், அரசு ஊழியனிடம் கெஞ்சாதே, உரிமையை உரிமையோடு கேளுங்கள், ஹீலர் பாஸ்கர் பரிந்துரைத்த சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா நூல்களின் கருத்து

Mostrar más
El país no está especificadoTamil619Ley3 588
Publicaciones publicitarias
1 454
Suscriptores
+624 horas
+337 días
+21330 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

பதிவு: 82 கடமையாற்ற மறுத்த க(ம)டையனுக்கு கடமையாற்ற உத்தரவு: மேலும் வட்டாட்சியரின் சேவைக்குறைபாட்டிற்கு நஷ்டஈடு: நாமக்கல் மாவட்டத்தில் சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார். அதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100/- க்கு பணம் கட்டியிருந்தார். ஆனால் தாசில்தார் மனையை அளக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். ஆனால் பயனில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும் மற்றும் இழப்பீடாக ரூ. 1 லட்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரினார். வழக்கில் ஆஜரான தாசில்தார், மனையை அளக்க இரண்டு பேர் ஆட்சேபனை தெரிவித்தால் அளக்கவில்லை என்று கூறினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்... மனை சேகருக்கு பாத்தியமானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆவணங்கள் அனைத்தும் சேகர் பெயரிலேயே உள்ளது. ஆனால் தாசில்தார் இரண்டு பேர் நிலத்தை அளந்து கொடுக்க ஆட்சேபனை செய்வதாக கூறுகிறார். அந்த இரண்டு பேரின் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சேபனை செய்பவர்களிடமிருந்து அபிடவிட் பெறவில்லை. ஆட்சேபனை செய்பவர்களை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை. ஆட்சேபனை செய்பவர்களுக்குரிய எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. ஆட்சேபனை செய்பவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தது யார் என்று தெரியவில்லை. பதிவு செய்தவரின் பெயரும் இல்லை. சொத்துக்கு சம்மந்தமே இல்லாத இருவர் ஆட்சேபனை செய்ததாக கூறி சர்வே பண்ணுவது மறுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆட்சேபனை செய்ததால் இடத்தை அளக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், அப்படி அளக்க மறுக்கலாம் என்பதற்கு ஏதாவது சட்டம் அல்லது விதிகள் உள்ளதா? என்று தாசில்தாரால் கூறப்பட முடியவில்லை. ஆட்சேபனை தெரிவித்தால் நிலத்தை அளக்க தேவையில்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்றால் அதற்கும் விளக்கமில்லை. எந்த சட்டமும், ஆணையும் இல்லாமல் ஆட்சேபனை செய்கிறார்கள் என்று கூறி நிலத்தை அளந்து கொடுக்காமல் இருப்பது சேவைக்குறைபாடு ஆகும். தாசில்தார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்துள்ளார். இது சேகருக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தும் செயலாகும். அரசு அதிகாரிகள் சட்டப்படியே ஒரு செயலை செய்யவோ அல்லது மறுக்கவோ முடியும். தாசில்தார் சேகர் ஒரு நுகர்வோர் கிடையாது என்றும் வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியாது என்றும் ஒரு வாதத்தை வைத்துள்ளார். ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் " காஸியாபாத் வளர்ச்சி முகமை Vs பல்பீர்சிங்" என்ற வழக்கில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அனைத்து அரசுத்துறை அலுவலங்களில் நடக்கும் சேவைக்குறைபாடுகளுக்கும் பொருந்தும். அனைத்து அரசு அலுவலகங்களும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் வரும். பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் அலட்சியமாக இருந்தால், அந்த அதிகாரிகளை நுகர்வோர் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல் " ஹரியானா நல வளர்ச்சி முகமை Vs சாந்தி தேவி" என்ற வழக்கில், ஒரு இந்திய குடிமகனுக்கு தீராத மன உளைச்சலையும், நிம்மதியின்மையையும் ஒரு அரசு அதிகாரி பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல்" Dr. R. ஜெகன் Vs Director motor vehicles maintenance department & others என்ற வழக்கிலும், Shiksha vihar sehkari avaas samithi Ltd Vs Chairman Ghaziabad Development Authority and Another என்ற வழக்கிலும் இதே கருத்தை உத்தரவாக தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கியுள்ளது. மேற்கண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வழக்கை பார்க்கும் போது, தாசில்தார் பணியில் அலட்சியமாக இருப்பதும், சேவைக்குறைபாடு செய்திருப்பதும் நன்றாக தெரிய வருகிறது. ஆகவே 15 நாட்களுக்குள் சேகரின் நிலத்தை தாசில்தார் அளந்து கொடுக்க வேண்டும். மேலும் ரூ 10,000/- இழப்பீடாகவும், ரூ. 2000/- வழக்கு செலவுத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. (அரசின் எத்துறையாயினும் ஊழியரின் சேவை குறைபாட்டிற்கு நஷ்ட ஈடு கோரலாம்! தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நம்பி நாசமாய் போக வேண்டாம். இந்த செய்தியை பதிவு செய்து வைத்துக் கொள்ளவும். தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிரவும், நன்றி.) நீ(தி) வாழ நீயே வாதாடு Below click and join 🔻🔺🔻🔺🔻🔺🔻 https://t.me/lawterrorist2
Mostrar todo...
👍 3🔥 2👏 2🏆 1
Photo unavailableShow in Telegram
பதிவு: 81 இதையே ஏன் சட்டமாக்க கூடாது?🤔 ஆமாம், மாதாமாதம் மக்கள் ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியலை அனுப்பும் போது, அவர்கள் நிலுவையில் வைத்துள்ள மனு விவரப் பதிவேடுகளையும் சமர்ப்பிக்க சொல்லி, அந்த மனுக்களுக்கான வேலையை முடித்து இருந்தால் மட்டுமே கூலி வழங்கப்படும் என்பதை சட்டமாகவே கொண்டு வந்தால், கூலிக்கு மாரடிக்கும் அரசூழிய அய்யோக்கியர்கள் எல்லாம் யோக்கியர்களாக மாறி வேலையை செய்ய வாய்ப்பு உண்டே! இதை ஏன் செய்மாட்ரீங்க ஆபீசர்ஸ். உங்களுக்கும் இதே நிலை என்பதால்தானே... 😄😄😄😄😄😄😄😄 http://t.me/youargueyourself For warrent balaw books🖕 https://t.me/lawterrorist2 🖕For our telegram channel
Mostrar todo...
👍 7🔥 2😢 2
Photo unavailableShow in Telegram
பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்பதை விசாரணை செய்து தீர்ப்பு எழுத சுமார் 26வருடங்கள்.. 1⃣ஆதாரம் இல்லை. அப்படி என்றால் இது என்ன பொய் வழக்கா? 2⃣பொய் வழக்கென்பதை இத்தனை வருடங்களாக நீதிபதிகளால் கண்டுபிடிக்க முடியலையா? 3⃣பொய் வழக்கு போட்டவருக்கு என்ன தண்டனை? 4⃣இந்த 26வருடத்தில் இவ்வழக்கை எத்தனை நீதிபதிகள் விசாரித்தார்கள்? 5⃣இவ்ழக்கில் எத்தனை வக்கீல்கள் உள்ளே வந்து சென்றார்கள்? 6⃣இதனால் நீதிமன்றத்திற்கு எவ்வளவு காலவிரயம்? 7⃣அப்படி என்றால், பேருந்து கண்ணாடியின் மீது கல் வீசியவர்கள் யார்? 8⃣அவர்களை கண்டுபிடிக்க வேண்டியது யார் பொறுப்பு? 9⃣அதனை கண்டுபிடிக்காமல் விடுபவர்களுக்கு என்ன தண்டனை? 🔟மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய பேருந்தின் கண்ணாடிக்கு யார் நஷ்ட ஈடு வழங்குவது? 1⃣1⃣ வெறும் பத்தாயிரம் ரூபாய் கண்ணாடிக்கே 26 வருடம் வழக்கு நடத்தி சாதனை.! மேற்படி, உங்கள் கவனம் சிறிதளவேனும் சட்டத்தின் பக்கம் திரும்பினால் மட்டுமே (BNS 2023/356) நம்மால் தெண்டக்கூலி பெறுபவர்களிடம் உங்களால் வேலைவாங்க இயலும். நீ(தி) வாழ நீயே வாதாடு Below click and join 🔻🔺🔻🔺🔻 https://t.me/lawterrorist2
Mostrar todo...
👍 12🤔 3
Photo unavailableShow in Telegram
வயித்துக்கு சோறு திங்ககூட வருமானம் இல்லாத அன்னாடங்காய்ச்சி போல😳, பாவம் ஒசி பட்டானி கேட்கிறான்..🥜🫘😋 அட! அன்னாடங்காய்ச்சிகூட பட்டாணி வித்து சாப்பிடுறாங்களேப்பா! இவிங்க பொழப்ப என்னான்னு சொல்ல; இதோ கெடச்சிடுச்சே; பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அத புடுங்கி தின்னாராம் அனுமாரு! 😇😇😇😇😇😇 Below click and join 👇👇👇👇👇👇 https://t.me/lawterrorist2
Mostrar todo...
👍 12😁 4😢 4
Photo unavailableShow in Telegram
👍 8👏 2
https://youtu.be/ERfuJvKJw7U?si=nu_4IXop-kRcoOYp இவரது முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்... 🤝🤝🤝🤝🤝🤝
Mostrar todo...
Book 1/8 நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்! ஆசிரியர்: வாரண்ட் பாலா. Podcast by : MMY Hamid.

Book 1/8 நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்! ஆசிரியர்: வாரண்ட் பாலா. Podcast by : MMY Hamid. To listen by voice only: 1. Anchor:

https://spotifyanchor-web.app.link/e/IJtCO7iMFvb

2. Spotify:

https://open.spotify.com/playlist/4LYi5kWvQgRjVdfqtZvGxB?si=3ba0998b64fd4460

3. KUKU FM:

https://kuku.page.link/?apn=com.vlv.aravali&link=http://kukufm.com/show/நீதியைத்தேடி-குற்ற-விசாரணைகள்-ஆசிரியர்-வாரண்ட்-பாலா-Podcast-by--MMY-Hamid/?utm_source=share_ch&lang=english

👏 6🤝 3👍 1
பதிவு: 80 இன்று ஜூலை 1 மதன்லால் திங்கரா மறிக்காத சிங்கமடா.. மதன்லால் திங்கரா - 1909 ஜூலை 1ஆம் தேதி லண்டனில் ஸர் கர்ஜான் வில்லி என்பவரைக் கொன்றுவிட்டார். திங்கரா, முதலில் போலீஸ் கோர்ட்டில் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு, தேசபக்தன் என்ற முறையில் இத்தகைய காரியத்தைச் செய்ய தமக்கு உரிமை உண்டு என்றார். பின்னர் ஓல்டு பெய்லி கோர்ட்டில் இவ்வழக்கில் தமக்குத் தண்டனை விதிக்க பிரதம நீதிபதிக்கு உரிமை கிடையாது என்றார். கோர்ட்டில் திங்கரா கூறியதாவது: "தேசாபிமானம் மிக்க இந்திய இளைஞர்களைத் தூக்கிலிட்டு, நாடு கடத்தப்படும் மிருகத்தனமான செய்கைக்கு வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக ஆங்கிலேயர் ரத்தத்தைச் சிந்த அன்று முயன்றேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இம்முயற்சியில் நான் எனது மனச்சாட்சியைத் தவிர வேறு யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. என் கடமையைத் தவிர வேறு யாருடனும் சேர்ந்து நான் சதியாலோசனை செய்யவுமில்லை. அந்நியரின் துப்பாக்கி முனைக்கொண்டு அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டு மக்கள், நிராயுதபாணிகளான ஓர் இனத்தினருக்குப் போராடுவது என்பது அடிக்கடி மறுக்கப்பட்டிருப்பதால், நிரந்தரமான போர் நிலையிலேயே இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். திடீரெனத் தாக்கினேன்; எனக்குத் துப்பாக்கி மறுக்கப்பட்டதால் என் கைத்துப்பாக்கியால் சுட்டேன். ஹிந்து என்ற முறையில், நாட்டுக்கு இழைக்கப்படும் தீமையைக் கடவுளுக்குச் செய்யப்படும் அவமதிப்பாக நான் கருதினேன். அவளுடைய (தாய் நாட்டின்) லட்சியம் ஸ்ரீ ராமரின் லட்சியம்; அவளுக்குச் செய்யும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்குச் செய்யும் சேவை. செல்வத்திலும் அறிவிலும் ஏழையான என்னைப் போன்ற ஒரு மகன் தன் தாய்க்கு அர்ப்பணம் செய்யக்கூடியது, தனது சொந்த ரத்தத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதையே அவளுடைய பாதங்களில் அர்ப்பணஞ் செய்கிறேன். "இந்தியாவுக்கு இப்பொழுது தேவைப்படும் படிப்பினை, எப்படிச் சாவது என்பதை அறிந்து கொள்வதே. இதைப் போதிப்பதற்குள்ள ஒரே வழி, நாமே சாவதுதான். ஆகையால், நான் உயர்ந்த லட்சியத்திற்கு உயிரைக் கொடுத்துக் கீர்த்தியுடன் சாகிறேன். தாம் செய்த காரியம் முற்றிலும் சரியானது என்று திங்கரா கோர்ட்டில் தீரமாக, ஆணித்தரமாகச் சொன்னார். தமது வாக்கு மூலத்தின் இறுதியில் அவர் கூறியதாவது: "கடவுளிடம் ஒன்றே ஒன்றுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். என் தாய்நாடு தன்னுடைய லட்சியத்தில் வெற்றியடைந்து மனித வர்க்கத்தின் நன்மைக்காகவும் கடவுளின் கீர்த்திக்காகவும் சுதந்திரத்துடன் நிற்கும் வரையில், நான் இதே தாய்நாட்டிற்கு மகனாகப் பிறந்து, இதே தெய்வீக லட்சியத்திற்காகத் திரும்பவும் சாக அருள வேண்டும் என்பதே என் பிரார்த்தனை." "வந்தே மாதரம்" என்பதே அவர் உச்சரித்த கடைசிச்சொல். அச்சம்பவம் நடந்துவிட்ட கொஞ்ச காலத்திற்கெல்லாம் காந்திஜி லண்டனுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கரா கோர்ட்டில் கொடுத்த வாக்குமூலம் அநேகருக்கு அதிக உணர்ச்சியை ஊட்டியது. அப்பொழுது பிரிட்டிஷ் காலனிகளின் உதவி மந்திரியாக இருந்த ஸ்ரீ வின்ஸ்டன் சர்ச்சில் "தேசாபிமானத்தின் பெயரால் இதுவரையில் செய்யப்பட்டிருக்கும் சொற்பொழிவுகளிலெல்லாம் இது மிகச் சிறந்தது" என்று குறிப்பிட்டார். இந்திய சுயராஜ்ஜியம் பக்கம் 75,76 நீ(தி) வாழ நீயே வாதாடு Below click and join 👇👇👇👇👇👇👇 https://t.me/lawterrorist2
Mostrar todo...
👍 7🔥 1🤔 1
பதிவு: 79 தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005; தறுதலைச்சட்டமா? நியாயம்தான் சட்டம் என்பதை உணர்ந்ததாலே, அநியாயத்தைத் தட்டிக்கேட்க வேண்டும் ஆர்வகோளாறு எல்லோருக்கும் சகஜமான ஒன்றுதான். அதற்கு, நீங்க மட்டுமல்ல, நானுமோர் உண்மையே! தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு எல்லோருமே ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அது அரசூழியர்களை காப்பாற்றுவதற்கான, அடிப்படை சட்டங்களுக்கு எதிரான, நியாயம் இல்லாத தறுதலைச் சட்டமாகும். ஆம், இதனை விட இந்திய சாட்சிய சட்டத்தின் உருபுகள் 74, 76, 77 ஆகியனவே போதுமானது என 2003 முதலே எதிர்த்து வரும் ஒரே நபர் நானாகத்தான் இருக்க வேண்டும். இதனை 2004 ஆம் ஆண்டில், எழுதிய பிணை எடுப்பது எப்படி நூலிலேயே சொல்லியுள்ளேன். ஆமாம், தகவல் பெறும் உரிமைச்சட்டம் அமலுக்கு வந்ததே 2005 தானே! பின்ன நீங்க மட்டும் எப்படி 2003 முதலே எதிர்க்க முடியும் என நீங்கள் நினைத்தால், அது தவறு. தமிழ்நாடு அரசுதான் முதன்முதலில் இத்தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை 1997இல் கொண்டுவந்தது என்பது பலருக்கும் தெரியாத சட்ட வரலாறு. 2005இல் மத்திய அரசும் இச்சட்டத்தை கொண்டு வந்ததால், மாநிலச் சட்டம் காலாவதியாகி விட்டது. அவ்வளவே! மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் மாநில அரசின் சட்ட விதிகள் இருக்க வேண்டும் என்கிற இந்தியச் அரசியல் சாசனக் கோட்பாடு 251க்கு எதிராக, தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ரூ-10 மட்டுமே கட்டணமாக நிர்ணயித்து இருந்தது. அதனால், தமிழ்நாடு அரசு ரூ-50ஐ வசூல் செய்ததற்கு குடியரசுத் தலைவரிடம் இருந்து சிறப்பான அனுமதி ஏதும் பெறப்பட்டுள்ளதா எனவும், அப்படிப் பெறப்பட்டு இருந்தால் அவ்வுத்தரவின் நகலைச் சாட்சியச் சட்டத்தின் உருபு 76இன் கீழ் சான்று நகலாக வழங்கக் கோரியும் தமிழ்நாடு பொதுத் தகவல் அதிகாரிக்கும், அதன் நகலைக் குடியரசுத் தலைவருக்கும் சமர்ப்பித்ததன் காரணமாக கட்டணம் ரூ10 ஆகக் குறைக்கப்பட்டது. இப்படிக் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு மிகவும் அதிகமாகியது. உண்மையில் தறுதலைச் சட்டமான அச்சட்டத்தை எதிர்ப்பதையே கடமையாக கொண்டுள்ள நான், அச்சட்டம் அடிப்படையில் செழித்துவளர்வதற்கு காரணகர்த்தாவாகவும் இருந்து விட்டேன் என்பது, வேதனைதான். நமது சட்ட விழிப்பறிவுணர்வில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பலரும், எனது பாணியில் சாட்சியச் சட்டத்தின் கீழ் சான்றுநகல் கோரி வெற்றிகரமாகப் பெற்றுவரும் நிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி கேட்காமல், சாட்சியச் சட்டத்தின் கீழ் சான்று நகலாகக் கோரும் போதும், அதை கொடுத்துதான் ஆக வேண்டும் என, மத்தியத் தகவல் ஆணையமும் சட்டப்படி மிகச்சரியான, அதிரடியான உத்தரவை Decision No.CIC/SG/A/2008/00043/SG/1287 and 1288 ஆகிய இருவழக்குகளில் 27-01-2009 அன்றே பிறப்பித்து விட்டது. இப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவையில்லை; தேவையான தகவல்களைச் சான்று நகலாகப் பெற, இந்தியச் சாட்சியச் சட்டம் இருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரியும் போது, இந்த தகவல்பெறும் உரிமைச் சட்டமும், அதன்கீழான செயல்பாடுகளும் தேவையற்றவை எனவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீக்கிட அல்லது செயலிழக்கச் செய்து, ஆணையத்தையும் கலைத்துவிட அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டியது தானே நியாயம்! ஏன் செய்யவில்லை? தகவல்பெறும் உரிமைச்சட்ட ஆர்வக்கோளாறுகள் இருக்கிற வரை, தன்னைத்தேடி வருகிற வருமானத்தையும், பதவி சுகத்தையும் இழக்க இவர்கள் மக்களின் ஊழியர்கள் அன்று! மாறாக, மக்களின் பணத்தில் எப்படியெல்லாம் வசதியாக வாழலாம் என கணக்கு போட்டு வாழும் ஈனப்பிறவிகளே!! இந்தியச் சாசனக் கோட்பாடு 19(1)(அ) இன் கீழான, எனது பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை, கருத்துரிமையின் கீழ், நீங்களும் உங்களது கருத்தை அல்லது மாற்றுக்கருத்தை எனக்கு மட்டுமல்ல; யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனெனில், இவை அத்தனையும் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையின் ஓர் அங்கமாகவே அடங்கி விடும். இதுகூடப் புரியாத அறிவு வறுமைவாதிகளான ஆட்சியாளர்கள், என்னமோ ஏற்கெனவே மக்களுக்கு இல்லாத உரிமையைத், தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 இன் மூலம் பாரிவள்ளல் போல வாரிவழங்கி விட்டதாக பீற்றிக் கொள்கிறார்கள். 2005 இல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்றால், நாடு குடியரசான 1950 முதல் 2005 வரை, சுமார் 55 ஆண்டுகள் யாருமே, எந்தவிதத் தகவலையும் பெறவில்லையா என்ற அறிவுப்பூர்வமான கேள்வி, தன்னார்வத் தறுதலைகளுக்கு எழ வேண்டாமா? ஒருவேளை எழவில்லை என்றே வைத்துக் கொண்டாலும் கூட, நான் இப்படி எவ்வளவுதான் விளக்கமாக எடுத்துச் சொன்னாலும், கண்டுகொள்ளாமல் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆடும் தனிநபர்களையும், ஃபண்டு நிறுவனங்கள் மற்றும் இயக்கங்களின் தன்னார்வலர்களைத், தறுதலைகள் என்றும், எதற்கும் உதவாத அச்சட்டத்தை தறுதலைச் சட்டம் என சொல்லுவதில் என்ன தவறு? Below click and join https://t.me/lawterrorist2
Mostrar todo...
சட்டத்தெனாலிராமன்

நீ வாழ நீயே வாதாடு!!! உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்! RTI என்பது அரசூழியர்களை காக்க வந்த தறுதலைச்சட்டம், அரசு ஊழியனிடம் கெஞ்சாதே, உரிமையை உரிமையோடு கேளுங்கள், ஹீலர் பாஸ்கர் பரிந்துரைத்த சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா நூல்களின் கருத்து

👏 8👍 6🔥 3
Repost from N/a

Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.