cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

Aadhiyagai

Official Telegram channel of aadhiyagai's seeds saving & gardening related work

Mostrar más
Publicaciones publicitarias
3 253
Suscriptores
+124 horas
+207 días
+3230 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

2014 ஜூன்/ஜூலை மாதம் நானும் காந்தியும் இனி வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தவேண்டாம். முழுமையாக வேளாண்மையில் மட்டுமே்கவனம் செலுத்துவோம். சுழியத்திலிருந்து துவங்குவோம்.. நமக்கான வாய்ப்புகள் என்னவெல்லாம் இருக்குமென்று கொடிசியாவில் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் போய் பார்த்து விட்டு வரலாம் என அம்மாவிடம் கைசெலவுக்கு காசு வாங்கிக்கொண்டு வந்து ஒரு நாள் முழுக்க சுற்றிவிட்டு சென்றது ஞாபகம். பத்து வருடங்களுக்கு பிறகு காந்தியுடன் கொடிசியாவில் நாமும் ஸ்டால் அமைக்கும் அளவுக்கு பத்து வருடம் ஓடியிருக்கிறது. இந்த பத்து வருடம் ஏறக்குறைய ஐந்து தலைமுறைக்கும் மேலான வறுமையை வென்று மேலான கல்வியை கொடுத்துள்ளது. வேறு யாரேனும் நாங்கள் செய்யும் பணிகளை செய்திருந்தால் இன்னும் பன்மடங்கு சிறப்பாக செய்து இருக்க முடியும் என என்னை சுற்றிலும் உள்ளவர்களிடம் கூறிக்கொண்டிருப்பேன்.. வேறு ஏதேனும் தெரிந்திருந்தால் அதனை பற்றிக்கொண்டு அதன்பின்னே சென்றிருப்பேன்.. ஆனால் விதை தவிர வேறு எதுவும் தெரியாது என்பதாலும், என்னை இழுத்து பிடித்து இதை மட்டுமே செய்து வாழ்ந்து மடி எனும் எண்ணம் மனதில் இருப்பதால்.. எப்படியான சூழலிலும் இந்த விதை சார்ந்த பணிகளில் மட்டுமே இருக்கும் வரை செய்து வாழப்போகிறோம்.. எவ்வளவு போட்டு அடித்து துவைத்தாலும்..சரி, தூக்கி வைத்து கொண்டாடினாலும் சரி மனம் அவற்றை ஒன்றாகவே எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைத்தது தான் கடந்த பத்து வருட கல்வியாக நினைக்கிறேன்.. பேசுவோம்.. ஸ்டால் வேலைகளை குழுவிடன் சேர்ந்து செய்ய செல்கிறேன். வாருங்கள்.. ஸ்டாலில் சந்திப்போம்.. "Get ready to explore the world of traditional seeds! Our team at Aadhiyagai Traditional Seeds Farm is all set to showcase our diverse collection of heritage seeds at Agri Intex 2024! Visit us at Stall G31 and discover the richness of traditional seeds. Support us by sharing this post with your friends and fellow gardeners! Let's work together to preserve our agricultural heritage. See you at Agri Intex 2024! Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm 085263 66796 www.aadhiyagai.co.in #AadhiyagaiTraditionalSeeds #agriintex2024 #heritageseeds #sustainableagriculture #gardeningcommunity
Mostrar todo...
👍 8 2
போரான் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகள மற்றும் அவற்றை சரிசெய்யும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். போரான் பற்றாக்குறையினால் பயிர்களில் மலட்டுத்தன்மையும், காய்கறிகளில் உருமாற்றத்தையும் ஏற்படுத்தும். பயிர்களின் இலைகளில் தேவையற்ற நிறத்தை மாற்றும் போரான் பற்றாகுறையால் மணிபிடிப்பு தடைபட்டு, விளைச்சல் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக பொக்கு கடலை உருவாகுதல், மக்காச்சோளத்தில் மணிகள் சிவப்புநிறம் அடைதல், மல்லிகை பூக்களில் ரோஸ் நிற பூக்காள மாறுதல், தென்னையில் குரும்பைகள் உதிர்தல், வாழை இலை சுருண்டு சுருண்டு காணப்படுத்தல் காய்கிறகள் கோனல்மானலாக இருக்கும் காய்கள் மற்றும் பழுங்களில் வெடிப்பு போன்றவை போரான்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் ஆகும் போரான் சத்து எருக்கம் இலையில் உள்ளது போரான சத்து பற்றாக்குறையை சரிசெய்ய எருக்கம் இலைகளை 2 கிலோ அளவு எடுத்து நன்றாக தட்டி அவை முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து 3 நாட்கள் ஊறவைத்து பிறகு அவற்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். அல்லது எருக்கம் இலைகளை வெட்டி மரத்தை சுற்றி போட்டு மண் கொண்டு மூடிவிடலாம்.
Mostrar todo...
👍 5🙏 2
10 லிடடர் தண்ணீருக்கு  போரான் 25 கிராம் முதல் 50 கிராம் வரை  கரைத்து தெளிக்கலாம் இவ்வாறு செய்வதால் காய்கறி மற்றும் பழங்களில் உள்ள பாதிப்புகளை தடுக்கலாம். , போரான் சத்தானது காய்கறிகளில் உள்ளமாற்றத்தை சரிசெய்து சந்தையில் நல்ல விலைகிடைக்க வழிவகை செய்கிறது.
Mostrar todo...
AGRICULTURAL LAWS TO KNOW 1. Never target high seasons; high seasons come with their own challenges. Be a farmer, not a gambler. 2. Choose at least three main crops and a crop rotation plan. Switching from one crop to another is not directly in your pocket. 3. Plan your farm and always have crops at different stages of age to ensure a constant supply. 4. No crop is profitable in itself; just master the advantages and disadvantages of a particular crop. 5. Having a lot is not a guarantee for successful farming. 6. Have a spraying and manurering plan and stick to it. 7. Never follow the advice of agro-veterinarians and agrochemical sales agents. Most of them are salespeople, not agronomists. 8. Try as much as possible to reduce agricultural expenses without compromising the quality of products. 9. Never hold onto a product if it is perishable. Sell it at prevailing prices. 10. Never plant a new seed on a large scale before testing it, unless you have seen it somewhere. 11. Never entrust your million-dollar idea to a farm worker; make sure you are present during critical stages of crop development until commercialization. 12. Never employ a close family member to manage your farm; most of them will let you down. 13. If you are neighboring farmers, plant the same crop. 14. Never apply agricultural information you get online without consulting your agronomist. 15. Always have a farm plan. 16. Old is always good. Most old seed varieties and chemicals will never disappoint you. Passion is key and patience is vital in agriculture ✅️❤️💥🧑‍🌾 Keep Following
Mostrar todo...
👍 2
Photo unavailableShow in Telegram
மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கு தேவையான மர விதைகள் வழங்குகிறோம். தேவைப்படும் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.. நன்றி ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
Mostrar todo...
👍 2
"30 Days Online Gardening Course through whatsapp" 📅Course Duration: July 1st to July 30th, 2024 🕰️ Flexible Learning: Self-paced via WhatsApp (Not live sessions) 🌿 Who Is This Course For? - Beginners: Learn how to start your own garden from scratch. - Experienced Gardeners: Enhance your gardening skills and knowledge. 🌎 Language: Tamil (தமிழ்) 📝 Course Topics: 1. Basics of Soil 2. Seed Selection 3. Backyard Gardening 4. Terrace Gardening 5. Potting Mix 6. Soil Preparation 7. Seed Saving Techniques 8. Harvesting Stages 9. Composting 10. Garden Maintenance 11. Garden Design 12. Homemade Fertilizers Etc.. 🌾 Course Fee: ₹1000 🌾 Bonus Seeds: Participants receive 20 types of basic gardening seeds! We'll send them via postal service within India. 📲 To Register: 1. Send a WhatsApp message 085263 66796 with your Name and Location. 2. Mention that you want to join the July Gardening Course. Let's create one-cent gardens together! 🌻🌿 Aadhiyagai's Self sustainable one cent garden- one family
Mostrar todo...
👍 6
Photo unavailableShow in Telegram
எலும்பை வலுப்படுத்தும் பிரண்டையில் இட்லி பொடி தயாரித்துள்ளோம்.. பிரண்டை கொழுந்துகளை மட்டும் பயன்படுத்துகிறோம். தேவைப்படும் நண்பர்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். -பரமு
Mostrar todo...
👍 1
பாரம்பரிய ரகங்கள் என்றால் அவை வீட்டு தோட்டத்திற்கு மட்டுமே உகந்தவை.. சந்தைக்கு உரிய ரகங்கள் என்றாலே ஒட்டு ரகங்கள் மட்டும் தான் என்ற ஒரு மாயை பெரும்பாலானவர்களிடம் இருப்பதை காண முடிகிறது.. பாரம்பரிய ரகங்கள் சந்தைக்கும் உகந்தவை என்பதை விதைப்பவர் தான் முடிவு செய்ய வேண்டும்.. அதேசமயம் சந்தைக்கு உகந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு விதைப்பவர் கையில் உள்ளது. விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் பாரம்பரிய ரகங்களில் இருந்து தான் விதைகளை தேர்வு செய்கின்றன என்பது நமக்கு தெரிவதில்லை.. அதனால் விதைகளை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனங்கள் தங்களுடைய விதைகளை எளிதாக விற்பனை செய்து விடுகின்றன. 1) விதைகள் நம் மண்ணிற்கு உகந்தவையா என்பதை முதலில் பயிரிட்டு பார்க்க வேண்டும். 2)விதைத்த பிறகு வளரும் விதைகள் பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் குறைவாக உள்ளதா என்பதை காண வேண்டும். 3)மூன்றாவதாக அதில் வளரும் அல்லது அதிலிருந்து கிடைக்கும் அறுவடைகள் நம் உண்ணும் உணவிற்கு ஏற்றவையா என்பதை காண வேண்டும். 4)நான்காவதாக அந்த அறுவடை நம்மை சுற்றிலும் உள்ள பெரும்பாலானவர்களுக்கு பிடித்துள்ளதா என்பதையும் காண வேண்டும். ஒரு விவசாயியாக விதைகளை தேர்வு செய்வதில் இந்த நான்கு முறைகளை கையாள வேண்டும் இந்த நான்கு முறைகளில் அந்த விதை தேர்வாகிவிட்டால் அந்த ரகம் சந்தைக்கு உரிய ரகமாக இருக்கும். உற்பத்தி செய்து உள்ளூர் சந்தைகளில் நாம் தாராளமாக விற்பனை செய்யலாம். அடுத்ததாக வெளியூர் சந்தைகளுக்கும் அந்த ரகம் உகந்ததாக இருக்கும் என்பதை தேர்வு செய்திட அந்த காய்கறியானது எவ்வளவு நாட்கள் கெடாமல் உள்ளது என்பதை காண வேண்டும். அதிக நாட்கள் அந்த ரகம் கெடாமல் இருக்கும் பட்சத்தில் அவை வெளியூர் சந்தைகளுக்கும் உகந்ததாக இருக்கும் அவற்றை பெருமளவில் பயிரிட்டு வெளியூர் சந்தைகளுக்கும் அனுப்ப இயலும். இந்த முறைகளை விதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கையாளுகின்றன. ஆனால் விவசாயிகளாகிய நாம் இவ்விஷயங்களை தேர்வு செய்வதை விட்டுவிட்டு நேரடியாக கடைகளில் சென்று விதைகள் வாங்கும் வழக்கத்திற்கு வந்து விட்டோம். அதனால் நம்மிடம் இருந்த நல்ல விதைகளை கைவிட்டு விட்டோம். மீண்டும் அவற்றை நம் கையில் கொண்டு வருவதற்கு விதை தேர்வு முறைகளை நாம் பழக வேண்டும். அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். படத்தில் இருக்கும் ஈரோட்டை சேர்ந்த ஒரு விவசாயிக்கு 10-15 பீர்க்கன் விதைகள் கொடுத்திருந்தோம். அவற்றிலிருந்து சந்தைக்கு உரிய ரகத்தை தேர்வு செய்து அவர் சந்தைப்படுத்தி வருவதை தெரியப்படுத்தினார். இந்த முறையை நாமும் பின்பற்றலாம் வேறு ஏதேனும் இது தொடர்பாக தகவல் தெரிந்து கொள்ள 085263 66796 தொடர்பு கொள்ளுங்கள் வாட்ஸ்அப் செய்யுங்கள் கலந்து ஆலோசிக்கலாம் தங்கள் கருத்துகளை பகிரவும்., மாற்றுக்கருத்து இருப்பின் பகிரவும்.. நன்றி..!! Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
Mostrar todo...
👍 4
Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.