cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

விண்ணியலும் வாழ்வியலும்

Publicaciones publicitarias
11 701
Suscriptores
+224 horas
+17 días
+2330 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

279. நின்றதன்று, இருந்ததன்று, நேரிதன்று, கூறிதன்று, பந்தமன்று, வீடுமன்று, பாவங்கள் அற்றது. கந்தமன்று, கேள்வி அன்று, கேடிலாத வானிலே, அந்தமின்றி நின்ற தொன்றை , எங்ஙனே உரைப்பது. இறைவன் எப்படி இருப்பான் என்று கேட்டால் அவன் நின்றதன்று அதாவது ஈர்ப்பு விசையில் நின்று கொண்டு இருக்கும் எந்தப் பொருளுமல்ல, இருந்து கொண்டு இருக்கும் எந்தப் பொருளும் அல்ல. நேர் இது அன்று, கூர் இது அன்று அதாவது நேரான பொருளும் அல்ல, கூரான பொருளும் அல்ல ஏதாவது பந்தம் ஆக இருக்குமா ஏன்றால் அதுவும் அல்ல, அண்டத்தின் நடுவாக இருக்கும் வீடு அதாக இருக்குமா? என்றால் அதுவும் அல்ல. ஆனால் அது பாவங்கள் அற்றது என்கிறார். கந்தம் என்றால் ஆண்களின் விதைப்பையில் இருக்கும் விதைதான் கந்து என்பது. அது நீரில் ஊறி உயிர் பெற்றால் அது விந்து. அந்த கந்துமல்ல, கேள்வியாக இருக்குமா? என்றால் அதுவுமல்ல என்கிறார். இந்த கேடு இல்லாத வானில் (வெளி) எது ஆரம்பம் என்று தெரியாதவாறு இருக்கும் ஒன்றை இதுதான் அது என்று சொல்ல என்னால் எப்படி முடியும் என்கிறார்.
Mostrar todo...
5_6249076531193188530.m4a2.98 KB
இன்று ஆடி - 17 (July - 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள். எங்கள் ஆழியார் பகுதியில் காலை 5 மணியிலிருந்து சாரல் ஆரம்பித்தது காலை 9 மணி வரை தொடரந்து தூறலாக மாறி மழையாக பெய்து கொண்டுள்ளது. அடுத்த ஆனியிலும் நல்ல மழைப் பொழிவு உள்ளது என்பதை உணர்த்துகிறது. எங்கள் பகுதியில் வரும் மார்கழி தை 15 வரை மழை உண்டு. மாசி பங்குனியில் மழை இல்லை. சித்திரை ஆரம்பத்திலேயே நல்ல மழையுடன் ஆரம்பிக்கிறது. பின் வைகாசியில் விட்டு விட்டு மழை ஆனி கடைசியில் நல்ல மழையுடன் கர்ப்போட்ட தரவுகள் முடிவடைகிறது இன்று. நன்றி.
Mostrar todo...
278. வண்டுலங்கு போலு நீர் மனத்து மாசு அறுக்கிலீர். குண்டலங்கள் போலு நீர் குளத்திலே முழுகிறீர். பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான். கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே ! மனம் என்ற ஒன்றை நாம் கவனிக்க ஆரம்பித்தால் , அது நம்மை வண்டு இங்கும் அங்கும் உலங்குவதைப் போல தாவிக் கொண்டு நம் மாசு தீருவதற்குப் பதிலாக அதிகமாகும். அதனால் தான் மனதை கவனிக்காமல் நம் மூச்சுக் காற்றை கவனித்து மனதில் எழும் எண்ணங்களில் கவனம் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தானாக நல்ல செயல்கள் நடப்பதை நம் எண்ணங்களால் மடை மாற்றப்பட்டு கர்மாக்களாக மாசாக மாறிவிடும். அதை அறுக்க முடியாது என்கிறார். நம் கர்மாக்களை அகற்ற குளத்தில் , குண்டலங்கள் போல் முழுகி எழுந்தால் தீராது என்கிறார். ஆதியான பழைய (பண்டைய ) பிரம்மாவாகிய நான்முகன் வெளியே பறந்து தேடினாலும் காண முடியாது, அது உங்களுக்குள்ளே காற்று, வெப்பம், நீர நிலமாக கலந்து இருக்கும் பாருங்கள் என்கிறார்.
Mostrar todo...
5_6246824731379502819.m4a3.39 KB
277. முச்சதுரம் மூலமாகி முடிவுமாகி ஏகமாய். அச்சதுரம் ஆகியே அடங்கி ஓர் எழுத்துமாய். மெய்ச்சதுரம் மெய்யுளே விளங்கு ஞான தீபமாய். உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே! நாதம் தான் வெளி. நாதம் தான் சத்தம் (Sound). ஒளி என்பது வெளிச்சம், இருள் என்ற இரண்டும் தான். வெப்பம் என்பது சூடு , குளிர்ச்சி என்ற இரண்டு தன்மைகளும் தான். இந்த ஒளிக்கு காற்று தான் மூலம். ஆக இந்த ஒலி, ஒளி, வெப்பம் சேர்ந்ததுதான் தீபம். இந்த ஒலி வெளி வெப்பம் மூன்றும் வெவ்வேறு கலவைகளில் சேர்வதுதான் இந்த காற்று நீர் நிலம் எனும் தனிமங்கள். இதைத்தான் ஒலி, ஒளி, வெப்பம் எனும் முச்சதுரம் மூலமாகி, முடிவுமாகி என்கிறார். அதாவது வெளி, காற்று, வெப்பம் மூன்றும் சேர்ந்து தான் அணுக்களாகிறது. அணுக்கள சேர்ந்து செல்களாகிறது. செல்கள் உடல்களாகிறது. அணுக்கள் வெவ்வேறு கலவைகளாகி கோடிக்கணக்கான சேர்மங்களாகிறது. சேர்மங்கள் தான் செல்களாக மாறுகிறது. அவைதான் காலத்தின் பிடிக்குள் சிக்கி மீண்டும் மூலமான ஒலி ஒளி வெப்பம் என பிரிந்து விடும். இதைத்தான் மெய்ச் சதுரம் என்கிறார். அனைத்துக்கும் மூலமான நாதம் தான்(கருத்து) மற்ற கண்ணுக்குத் தெரியும் பொருட்களாக (சிவமாக) மாற்றுகிறது. கருத்துதான் அண்டமலர்வில் ஒலி, ஒளி, வெப்பமாக உருவாகிறது. இதை முச்சதுரம் பொருள்களாக மாறுகிறது. இந்த மெய்ச் சதுரம் மெய்யாகி நமக்கு ஞான தீபமாய் கருத்தாக புரிந்தால் அந்த உசசரிக்கும் மந்திரம் (நமசிவாய) நாதமாக கருத்தாக உண்மைகள் இருக்கும் என சிவாயத்தைப் பார்த்து சொல்கிறார். சி என்றால் வெப்பம் வா என்றால் ஒளி (காற்று) ய என்றால் ( ஒலி ) வெளி ம என்றால் நீர் ந என்றால் நிலம்.
Mostrar todo...
276. மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம், மூலமாக மூடுகின்ற மூடமேது மூடரே! காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஓடுங்கினால், ஆதியோடு. கூடுமோ!? அனாதியோடு கூடுமோ? வானில் தெரியும் கோடிக்கணக்கான சூரியன்கள், மற்றும் நம் குடும்பத்தில் உள்ள கோள்கள் என இவைகள் மூலமான நான்கு கரங்களில் உள்ளது. அந்த மூலமான கரங்கள் உருவாவதற்கு முன் அந்த மூல பொருட்களை மூடி இருந்த மூடம் அதாவது மூடி எது தெரியுமா மூடர்களே! என்று கேட்கிறார். உண்மை எது என்று தெரியாமல் வேறு எதையாவது உண்மை என்று நம்பிக் கொண்டு இருப்பவர்களைத் தான் மூடர்கள என்பர். காலனான ஐந்து பூதங்கள் என்றால வெளி காற்று வெப்பம் நீர் நிலம் என்பவை தோற்றம் கொண்டதிலிருந்து ஒடுங்கும் வரை காலம் என்ற வரையரைக்குள் தான் இருக்கும். காலத்திற்குள் இவை மாட்டிக் கொண்டு தான் இருக்கும். காலத்திலிருந்து இந்த ஐந்து பூதங்களும் தப்ப முடியாது. எனவே தான் இந்த ஐந்து பூதங்களையும் காலன் என்கிறார். இந்த ஐந்து பூதங்களும் அஞ்சிலே ஒடுங்குகிறது என்கிறார். அஞ்சாவது பூதம் என்பது நமசிவாய என்ற மந்திரத்தில் ய என்ற அஞ்சாவது எழுத்தைத்தான் வெளி என்பார்கள். இந்த ஐந்தாவது பூதமான வெளியில் தான் இந்த ஐந்து பூதங்களும் ஒடுங்கும். அப்படி அனைத்தும் ஒடுங்கும் போது ஆதியோடு கூடுமோ? அல்லது அனாதியோடு கூடுமோ? என நம்மை கேள்வி கேட்கிறார். இந்த ஆதி என்றால் தொடக்கம் என பொருள். இந்த ஐந்து பூதங்களுக்கும் தொடக்கம் இருப்பதால் தான் ஒடுக்கம் எனும் முடிவு இருக்கிறது. இவை காலத்துக்கு கட்டுப்பட்டவை. ஆனால் அனாதி என்பது காலத்தால் கட்டுபடாதது. அதற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. அதை நாம் அறிய முடியாது. நாம் எதையெல்லாம் நம் ஐந்து புலன்களால் அறிகிறோமோ அவற்றிற்கு காலம் உண்டு . அவை அனைத்தும் ஒடுங்கி விடும். ஆகவே அந்த அனாதி தான் இந்த இறைவன். அந்த அணுக்களையும் இயங்க வைக்கும் ஆற்றல் அதுவும் ஆதி தான். சிவம் சக்தி இரண்டும் ஒன்றிய அந்த சுழியம் , ஒன்றும் இல்லாத அனாதியில் தான் அவ்வளவும் கூடுகின்றது என்கிறார்.
Mostrar todo...
5_6246824731379502818.m4a2.91 KB
இன்று மாலை 5.00 மணியிலிருந்து தூறல் தொடர்ந்து முக்கால் மணி நேரமாக பெய்கிறது. இது சித்திரை மாதத்தில் மழைக்கு உண்டான ஓட்டம்.
Mostrar todo...
Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.