es
Feedback
U7 News Tamil

U7 News Tamil

Ir al canal en Telegram

🔆👀நெற்றிக்கண் திறக்காவிடினும் குற்றம் குற்றமே👀🔅 ✅️தினமும் குறைவான செய்திகள் ✅️அதிகமான தகவல் ✅️உண்மையின் குரல் எப்பொழுதும் மக்களுக்காக மட்டுமே தொடர்புக்கு: +91 9942177536 MAIL : admin@u7news.online WEBSITE : https://u7news.blogspot.com/?m=1

Mostrar más
4 598
Suscriptores
Sin datos24 horas
-157 días
-10730 días
Archivo de publicaciones
⚪️🔴திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: ஆய்வில் உறுதியானதால் அதிர்ச்சி. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அமராவதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், "ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டுகூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். தற்போது தூய நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலில் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். இந்த சூழலில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி தனது எக்ஸ் வலைதளத்தில், "சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தி உள்ளார். திருப்பதி கோவில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது. எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறவோ மாட்டார்கள். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்வாரா..? " என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் பதக்க விவகாரத்தில் வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 3வது முறையாக ஒத்திவைப்பு. வினேஷ் போகத் பதக்க விவகாரத்தில் தற்போது ஆக.16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிப் பதக்கம் கோரி சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை நாடியிருந்தார்.

போதை பொருட்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு கடத்திய வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின
போதை பொருட்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு கடத்திய வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் தம்பி முகமது சலீம் அமலாக்கதுறையால் கைது செய்யபட்டுள்ளார்.

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது. நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதனை திருச்சியில் வைத்து கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை. ரூ.50 கோடி அளவில் நிதி மோசடி என 140க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரில் தேவநாதன் கைது.

TNPSC தேர்வு: டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு. ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக்கான அறிவிப்பு வெளியீடு. டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: 861 விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 11 கூடுதல் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

2024 இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது. "தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது தமிழகம்" "தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு பெருமையான தருணம்" "நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்"- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

*திருவண்ணாமலையில் ₹10 பாட்டில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே Dailee குளிர்பான ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் ஆய்வு.* திருவண்ணாமலை சிறுமி குடித்த Dailee குளிர்பான ஆலையின் கிளை ராசிபுரத்தில் செயல்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் - தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம். மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைபின் பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம். சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றதோடு இன்ஜினீயரிங் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தையும், தொடர்ந்து 6வது முறையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.

யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம். நடப்பாண்டு யுஜிசி நெட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு. வரும் 21 ஆம் தேதி நடக்கும் தேர்வை 9 லட்சம் பேர் எழுத உள்ள நிலையில் எப்படி ஒத்திவைக்க முடியும்? நாங்கள் இதில் தலையிட முடியாது - நீதிபதிகள் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வை ஒத்தி வைக்க கோரி மனு.

கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

photo content

செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு. ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம். வழக்கில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் அனைத்துமே அமலாக்கத்துறையால் திருத்தம் செய்யப்பட்டவை. தன் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் என செந்தில்பாலாஜி தரப்பு வாதம்.

விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம். ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம். அரசின் விலையில்லா சேலையை பாலிஸ்டர் நூலை தவிர்த்து பருத்தி நூலில் உற்பத்தி செய்யவும், 4,306 மெட்ரிக்டன் பாலிஸ்டர் நூலுக்கான வெளி மாநில கொள்முதல் டெண்டரை ரத்து செய்யவும் வலியுறுத்தி போராட்டம்.

⚪️🔴2022ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ”சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான், அவரது பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மோதலை ஏற்படுத்துதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா?” என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு.

*போதைப்பொருள் ஒழிப்பு: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி.* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவ, மாணவிகள் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு. சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு - பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம். 2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம். 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. 6 பதக்கங்களுடன் இந்தியா 71வது இடத்தில் உள்ளது.

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு, அதானி குழுமம் மறுப்பு. ஹிண்டன்பர்க் அறிக்கை தீங்கிழைக்கும் எண்ணம் கொண்டது என விமர்சனம். அதானி நிறுவன விவகாரத்தில் செபி அமைப்பின் தலைவருக்கு தொடர்பு என ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியிருந்தது. தவறான மற்றும் பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்களைத் தேர்ந்தெடுத்து தயாரிக்கப்பட்ட அறிக்கை. உண்மை, சட்டத்தை அலட்சியம் செய்து தனிப்பட்ட லாபம் ஈட்டுவதற்காக பொய்யான குற்றச்சாட்டு. குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது - அதானி குழுமம்.

மக்கள் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் கார் பந்தயத்தில் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டியது அவசியமா? மக்களின் வரிப்பணத்தில் ரூ.42 கோடி செலவில் கார் பந்தயம் நடத்தப்படுகிறது. மக்களின் பணம், மக்களுக்கு போய் சென்றடைய வேண்டும்-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்தமுள்ள 1.79 லட்சம் இடங்களில் இதுவரை 19,922 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கம்பியூட்டர் என்ஜினியரிங் (CSE) படிப்பில் 4,879 பேரும், எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் (ECE) படிப்பில் 2,704 பேரும் சேர்ந்துள்ளனர்.

வினேஷ் போகத் வழக்கில் 13ம் தேதி தீர்ப்பு. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில் ஆக.13ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம். 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்பாக 100 கிராம் கூடுதல் எடை உள்ளதாகக் கூறி வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என முறையீடு. இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் ஆக.13ம் தேதி தீர்ப்பு ஒத்திவைப்பு.