ch
Feedback
BBC News Tamil

BBC News Tamil

前往频道在 Telegram

RSS feeds from BBC. பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் @BBCSciencetech @BBCEarthExplorer @BBCSport_news @BBCworldoffl All contents are Copyright of bbc.co.uk/tamil Contact/Feedback: @BBCWorldoffl_Bot

显示更多
5 298
订阅者
-1324 小时
-157
-730
帖子存档
மெஸ்ஸி புதிய சாதனை: கடும் சவால் தந்த சுவிட்சர்லாந்தை அர்ஜென்டினா வெல்ல வித்திட்ட 'திருப்பு முனை' நிகழ்வு உலகக்கோப்பை காலிறுதியில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஒரு பரபரப்பான வெற்றியை அர்ஜென்டினா பெற்றுள்ளது. 2026 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை அர்ஜென்டினா எதிர்கொள்ளும். இந்தப் போட்டி பிபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு: ஜானகி மறைவு பற்றி இளையராஜா கூறியது என்ன? பிரபல திரைப்பட பாடகி ஜானகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா மற்றும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

கர்ப்பிணி உட்கொள்ளும் மருந்துகள் கருவில் உள்ள குழந்தையை சென்றடையுமா? புதிய ஆய்வு தந்த படிப்பினைகள் ஐசிஎம்ஆர் -பெண்கள் ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐஐடி பம்பாய் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், மனித நஞ்சுக்கொடியின் முக்கிய செயல்பாடுகளை ஆய்வகத்தில் மறுஉருவாக்கம் செய்யும் 'பிளசென்டா ஆன் எ சிப்' என்ற தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

வியட்நாம் படகு விபத்து: உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும் 15 பேர் பலியானது எப்படி? உயிர் தப்பிய பயணி தகவல் வியட்நாம் படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகள் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான படகில் அனைவரும் உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும் 15 பேர் பலியானது எப்படி? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

இங்கிலாந்திடம் தோல்வி: ஹாலாண்ட் செயல் நார்வேக்கு பின்னடைவானது எப்படி? உலகக்கோப்பை கால்பந்தில் மயாமியில் நடந்த போட்டியில், கூடுதல் நேரத்தில் நார்வேயை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஒரு கட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இங்கிலாந்து அணி மீண்டு வந்து வெற்றி பெற ஜூட் பெல்லிங்ஹாமின் அபாரமான இரண்டு கோல்கள் உதவின. 1966-க்குப் பிறகு ஆடவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற இங்கிலாந்துக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

எஸ்.ஜானகி குரலில் ரசிகர்கள் மனதில் நிலைத்த மற்றும் விருது வென்ற 5 பாடல்கள் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி தனது 88வது வயதில் இன்று (ஜூலை 11) கர்நாடகாவின் மைசூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். , சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார் எஸ்.ஜானகி. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

48,000க்கும் மேலான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூருவில் காலமானார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

எஸ். ஜானகியின் இசைப் பயணம் எப்படி தொடங்கியது? தமிழில் அவர் பாடிய முதல் பாடல் என்ன? கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் தனது இசை மூலம் இடம்பிடித்த எஸ்.ஜானகியின் இசை வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதை நாம் தெரிந்து கொண்டாலே அவரின் உழைப்பு என்ன என்பது புரிந்துவிடும். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து: '15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பலி' - நிலவரம் என்ன? வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர் சென்ற படகு விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. என்ன நிலவரம்? இந்திய தூதரகம் கூறுவது என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

பூமியை போல் உயிர் வாழத் தகுந்த கோளுக்கான தேடலில் விஞ்ஞானிகள் கண்டறிந்தது என்ன? பூமியை ஒத்த அமைப்புகளுடன் இருக்கும் ஒரு கோளை கண்டுபிடிக்க பல்லாண்டுக் காலமாக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். அதற்கு எத்தகைய பலன்கள் கிடைத்துள்ளன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

முருகன் வழிபாட்டு முறை தமிழ்நாடு, வட இந்தியா இடையே வேறுபடுவது ஏன்? நிபுணர்கள் விளக்கம் 'வட இந்தியாவில் பிறந்தவர்' என்று முருகக் கடவுள் குறித்துப் பேசியது பற்றி நாகவம்சி சமீபத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்ன? வட இந்தியாவில் இருக்கும் முருக வழிபாட்டுக்கும் தென்னிந்தியாவில் காணப்படும் முருக வழிபாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

தென் கொரியா: கோவிலில் டேட்டிங் செய்யும் இளைஞர்கள், காதலில் விழ உதவும் பௌத்த துறவிகள் தென் கொரியாவின் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த கோவில் ஒன்றில் இளம் ஆண்கள், பெண்கள் தங்கள் காதல் துணையைத் தேடிக்கொள்ள பௌத்த துறவிகள் உதவுகின்றனர். எப்படி தெரியுமா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

‘2 நாள் உதிக்காத சூரியன், மக்களை மூழ்கடித்த சுனாமி' - மிகப்பெரிய எரிமலை வெடிப்பு தந்த படிப்பினை 1883-ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு சம்பவம் பேரழிவை ஏற்படுத்தியது. அதனால் 36,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது என்ன நடந்தது? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்? பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தில் இந்தோனீசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; இந்தப் பயணத்தின் போது பிரமோஸ் விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிலிப்பைன்ஸிற்கும் இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை விற்றுள்ளது. இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்? அதற்கு ரஷ்யாவின் அனுமதி தேவையா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

இதயம் முரளி: தந்தை 'சொல்லாத காதலை' மகன் சொன்னாரா? ஊடக விமர்சனம் பருவங்களைக் கடந்த கைகூடாத காதல் கதையான இதயம் முரளி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன? இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

மீன் தொட்டி உள்பட உங்கள் வீட்டில் வைஃபை சிக்னலை பாதிக்கும் 4 விஷயங்கள் உலகம் வைஃபை மூலம் இயங்குகிறது, ஆனால் உங்கள் மதிய உணவு உட்பட விசித்திரமான சில விஷயங்கள் அதற்குத் தடையாக நிற்கக்கூடும். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

இ20 பெட்ரோல் கார், பைக் என்ஜினை பாதிக்குமா? விஸ்வரூபம் எடுக்கும் கேள்விக்கு நிபுணர்கள் பதில் இந்தியாவில் பெட்ரோலுடன் உயிரி எரிபொருளை அதிகளவில் கலக்கும் அரசின் முடிவுக்கு வாகன உரிமையாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இ20' பெட்ரோல் வாகனங்களின் மைலேஜைக் குறைத்துள்ளதுடன் செலவை அதிகரிக்கும் என்றும் வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு நிபுணர்கள் அளிக்கும் பதில் என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

கணவன் சிதையில் மனைவியை உயிரோடு எரிக்கும் 'உடன்கட்டை' ஏறும் வழக்கத்தை தடுத்த ஆங்கிலேயர் 1829-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்க் 'சதி' எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடை செய்தார். சதி என்பது ஒரு பழமையான இந்து வழக்கமாகும்; இதில் கணவனை இழந்த பெண் ஒருத்தி, தன் கணவனின் சிதையில் உயிருடன் எரிக்கப்பட்டார் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

கரூர் கூட்ட நெரிசல்: முதலமைச்சர் விஜய் தனக்கு இருந்த பொறுப்பை புறக்கணிக்கிறாரா? கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய விஷயங்கள் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேவேளையில் அவர் இந்தச் சம்பவத்தில் தனக்கு இருக்கும் பொறுப்பைப் புறக்கணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

அமெரிக்க தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரானின் சாபஹார் துறைமுகம் - இந்தியாவுக்கு சிக்கலாகுமா? அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் இரானின் சாபஹார் துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதமடைந்ததை இரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதன் விளைவுகள் இந்தியா மீதும் தாக்கம் செலுத்துமா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil