ar
Feedback
ThulirKalvi

ThulirKalvi

الذهاب إلى القناة على Telegram

Educational News Portal

إظهار المزيد
1 471
المشتركون
+224 ساعات
+37 أيام
-1130 أيام
أرشيف المشاركات
🗒️ In England, restrictions have been imposed on children usingf social media platforms. England. *Sports News* 🏀 In the Australian Open Badminton Tournament, the Indian pair Dhruv Rawat and Manisha emerged victorious. Australian Open Badminton Tournament. 🏀 In the women's singles category of the Australian Open Badminton Tournament, P. V. Sindhu secured a victory. P. V. Sindhu. *Covai women ICT_போதிமரம்*

*🔵⚡பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்* *🪀Join* https://whatsapp.com/channel/0029Vb74io8CMY0EBkZqf93h *நாள்:* 11.06.2026 *கிழமை: வியாழக்கிழமை* *திருக்குறள்:* பால்: பொருட்பால் இயல்: அரசியல் அதிகாரம்:43.அறிவுடைமை *குறள் எண்:426* குறள்: எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. *பொருள்:* உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு. *பழமொழி :* Fortune favors the brave. துணிவுடையோர்க்கே வெற்றி. *இரண்டொழுக்க பண்புகள் :* 1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன். 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன். *பொன்மொழி :* பொறுமை கசப்பானது; அதன் கனியோ இனிமையானது. Thought for the Day : Responsibility is the bridge between goals and achievements. *பொது அறிவு :* 1. இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக பதவி வகிப்பவர் யார்? N .S.ராஜா சுப்பிரமணி. 2. தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் துறை (AI) அமைச்சர் யார்? உயர் திரு. ஆர். குமார் அவர்கள். *English words :* Benefit – Advantage, நன்மை. Conceal – Hide, மறை. *NMMS :* 1, 7, 3, 63, 5, 215, 7, __ (1)342. (2) 511. (3)517. (4) 343. 1. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகிய இடங்களில் ஒற்றை எண்கள் அமைந்துள்ளன. 2. இரண்டாமிடத்தில் உள்ள 7 என்பதற்கான சமன்பாடு (முந்தைய எண் + 1)3 - 1 I) இரண்டாமிட எண் (1 + 1)3 - 1 = (2)3 - 1 = 8 - 1 = 7 II) நான்காமிட எண் (3 + 1)3 - 1 = (4)3 - 1 = 64 - 1 = 63 III) ஆறாமிட எண் (5 + 1)3 - 1 = (6)3 - 1 = 216 - 1 = 215 IV) எட்டாமிட எண் (7 + 1)3 - 1 = (8)3 - 1 = 512 - 1 = 511 விடை: (2) 511 *புவியியலும் சுற்றுசூழலும் :* "இன்றைய மாணவர்கள் நாளைய பொறுப்புள்ள குடிமக்கள்." எனவே வாரத்தில் இரு நாட்கள் குடிமையியல் குறித்தும் பார்ப்போம். குடிமையியல் என்றால் என்ன? குடிமையியல் என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறை, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய கல்வியாகும். *ஜூன் 11* உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் 1968 சூன் 11 இல் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. *நீதிக்கதை* *"வீட்டுப் பாடத்தின் மதிப்பு"* ஒரு கிராமத்தில் மணி என்ற மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்குச் சரியாகச் செல்வான். ஆனால் வீட்டுப் பாடம் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டான். ஒருநாள் ஆசிரியர் கணித வீட்டுப் பாடம் கொடுத்தார். மணிகண்டன் “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று நினைத்து விளையாடச் சென்றான். அவன் நண்பன் கோபி மட்டும் வீட்டுப் பாடத்தை கவனமாகச் செய்தான். மறுநாள் ஆசிரியர் அனைவரின் நோட்டுப் புத்தகத்தையும் பார்த்தார். கோபியின் வீட்டுப் பாடம் மிகவும் அழகாகவும் சரியாகவும் இருந்தது. ஆசிரியர் அவனைப் பாராட்டினார். மணி மட்டும் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்திருந்தான். பாடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது. அன்று மாலை மணி கோபியிடம், “நீ எப்படி பாடங்களை இவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறாய்?” என்று கேட்டான். கோபி சிரித்துக்கொண்டு, “வீட்டுப் பாடம் செய்வது பாடத்தை மீண்டும் பயிற்சி செய்வது போல. அதனால்தான் எனக்கு எளிதாகப் புரிகிறது,” என்றான். அப்போது மணிக்கு தனது தவறு புரிந்தது. அந்த நாளிலிருந்து அவன் தினமும் வீட்டுப் பாடத்தை நேரத்திற்கு செய்து வந்தான். சில மாதங்களில் அவனும் வகுப்பில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக மாறினான். நீதி: வீட்டுப் பாடத்தை தவறாமல் செய்வதால் அறிவும் திறமையும் வளர்கின்றன. 📚✏️ *இன்றைய செய்திகள்* 11.06.2026 🗒️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார். 🗒️இந்தியாவின் நீண்ட கால பிரதமர் எனும் சாதனை படைத்தார் நரேந்திர மோடி. 🗒️இங்கிலாந்து நாட்டில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. *விளையாட்டுச் செய்திகள்* 🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி துருவ்ராவத்-மனீஷா வெற்றி பெற்றுள்ளனர். 🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். *Today's Headlines* 🗒️ Minister Rajmohan awarded incentive scholarships to students who scored high marks in the Class 10 and Class 12 public examinations. 🗒️ Narendra Modi has set a record as India's longest-serving Prime Minister.

https://drive.google.com/file/d/1PpNKa4-OuqbKkbHxWjxqMgby3EjC7xEA/view?usp=drivesdk ❇️⚡பள்ளிக் கல்வித் துறை 08.06.2026 அன்று வெளியிட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைக் கடிதத்தின், பார்வையில் குறிப்பிட்டுள்ள அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் தொகுப்பு!

Good afternoon all. Kindly note today session and its timings Click the link for TET 1 - தமிழ் - SESSION 1 https://www.youtube.com/watch?v=GZlJ4Xd7g8A Click the link for TET 2 - தமிழ் - SESSION 1 https://www.youtube.com/watch?v=gqgXcO80X7c Session starts on 9.6.26 at 6.30 PM Today.

🅱️⚡2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு! https://drive.google.com/file/d/1fRzY28vsZhfqW621s0YNcqu9Oi-OWa5C/view?usp=drivesdk

100% Enrolment in Higher Education.pdf1.51 MB

Has to complete – முடிக்க வேண்டும் Has to wait – காத்திருக்க வேண்டும் Has to leave – கிளம்ப வேண்டும் Had to pay – பணம் செலுத்த வேண்டியிருந்தது Had to attend – கலந்துகொள்ள வேண்டியிருந்தது Had to complete – முடிக்க வேண்டியிருந்தது Had to wait – காத்திருக்க வேண்டியிருந்தது Had to leave – கிளம்ப வேண்டியிருந்தது Dare to speak – பேச துணியுங்கள் Dare to ask – கேட்க துணியுங்கள் Dare to try – முயற்சி செய்ய துணியுங்கள் Dare to face – எதிர்கொள்ள துணியுங்கள் Dare to succeed – வெற்றி பெற துணியுங்கள் Have been speaking – பேசிக் கொண்டு இருக்கிறேன் Has been speaking – பேசிக் கொண்டு இருக்கிறார் Had been speaking – பேசிக் கொண்டு இருந்தார் Will have been speaking – பேசிக் கொண்டு இருப்பேன் Must have finished – முடித்திருப்பார் என்று உறுதி Should have completed – முடித்திருக்க வேண்டும் Could have won – வென்றிருக்கலாம் Might have gone – சென்றிருக்கலாம் Would have helped – உதவியிருப்பார் May have arrived – வந்திருக்கலாம்

🔴Be able to speak – பேச முடியும் https://whatsapp.com/channel/0029Vb74io8CMY0EBkZqf93h Be able to write – எழுத முடியும் Be able to read – படிக்க முடியும் Be able to learn – கற்றுக்கொள்ள முடியும் Be able to understand – புரிந்து கொள்ள முடியும் Going to start – தொடங்கப் போகிறேன் Going to study – படிக்கப் போகிறேன் Going to work – வேலை செய்யப் போகிறேன் Going to learn – கற்றுக்கொள்ளப் போகிறேன் Going to travel – பயணம் செய்யப் போகிறேன் Supposed to come – வர வேண்டும் Supposed to attend – கலந்துகொள்ள வேண்டும் Supposed to study – படிக்க வேண்டும் Supposed to finish – முடிக்க வேண்டும் Supposed to help – உதவ வேண்டும் Likely to win – வெல்ல வாய்ப்புள்ளது Likely to succeed – வெற்றி பெற வாய்ப்புள்ளது Likely to improve – மேம்பட வாய்ப்புள்ளது Likely to arrive – வர வாய்ப்புள்ளது Likely to grow – வளர வாய்ப்புள்ளது About to leave – கிளம்ப உள்ளேன் About to start – தொடங்க உள்ளேன் About to speak – பேச உள்ளேன் About to finish – முடிக்க உள்ளேன் About to travel – பயணம் செய்ய உள்ளேன் Have to pay – பணம் செலுத்த வேண்டும் Have to attend – கலந்துகொள்ள வேண்டும் Have to complete – முடிக்க வேண்டும் Have to wait – காத்திருக்க வேண்டும் Have to leave – கிளம்ப வேண்டும் May come – வரலாம் May go – போகலாம் May start – தொடங்கலாம் May finish – முடிக்கலாம் Might speak – பேசக்கூடும் Might come – வரக்கூடும் Might go – போகக்கூடும் Might start – தொடங்கக்கூடும் Might finish – முடிக்கக்கூடும் Must study – படிக்க வேண்டும் Must work – வேலை செய்ய வேண்டும் Must attend – கலந்துகொள்ள வேண்டும் Must complete – முடிக்க வேண்டும் Must obey – கீழ்ப்படிய வேண்டும் Should study – படிக்க வேண்டும் Should work hard – கடினமாக வேலை செய்ய வேண்டும் Should attend – கலந்துகொள்ள வேண்டும் Should practice – பயிற்சி செய்ய வேண்டும் Should improve – மேம்படுத்த வேண்டும் Would like – விரும்புகிறேன் Would prefer – விரும்புவேன் Would choose – தேர்வு செய்வேன் Would accept – ஏற்றுக்கொள்வேன் Would help – உதவுவேன் Shall go – போவேன் Shall start – தொடங்குவேன் Shall finish – முடிப்பேன் Shall attend – கலந்துகொள்வேன் Shall return – திரும்புவேன் Will go – போவேன் Will come – வருவேன் Will study – படிப்பேன் Will work – வேலை செய்வேன் Will learn – கற்றுக்கொள்வேன் Need to study – படிக்க வேண்டும் Need to work – வேலை செய்ய வேண்டும் Need to learn – கற்றுக்கொள்ள வேண்டும் Need to improve – மேம்படுத்த வேண்டும் Need to complete – முடிக்க வேண்டும் Ought to help – உதவ வேண்டும் Ought to study – படிக்க வேண்டும் Ought to obey – கீழ்ப்படிய வேண்டும் Ought to respect – மதிக்க வேண்டும் Ought to practice – பயிற்சி செய்ய வேண்டும் Used to play – விளையாடுவது வழக்கம் Used to study – படிப்பது வழக்கம் Used to travel – பயணம் செய்வது வழக்கம் Used to work – வேலை செய்வது வழக்கம் Used to live – வாழ்ந்தது வழக்கம் Be able to speak – பேச முடியும் Be able to write – எழுத முடியும் Be able to read – படிக்க முடியும் Be able to learn – கற்றுக்கொள்ள முடியும் Be able to understand – புரிந்து கொள்ள முடியும் Going to start – தொடங்கப் போகிறேன் Going to study – படிக்கப் போகிறேன் Going to work – வேலை செய்யப் போகிறேன் Going to learn – கற்றுக்கொள்ளப் போகிறேன் Going to travel – பயணம் செய்யப் போகிறேன் Supposed to come – வர வேண்டும் Supposed to attend – கலந்துகொள்ள வேண்டும் Supposed to study – படிக்க வேண்டும் Supposed to finish – முடிக்க வேண்டும் Supposed to help – உதவ வேண்டும் Likely to win – வெல்ல வாய்ப்புள்ளது Likely to succeed – வெற்றி பெற வாய்ப்புள்ளது Likely to improve – மேம்பட வாய்ப்புள்ளது Likely to arrive – வர வாய்ப்புள்ளது Likely to grow – வளர வாய்ப்புள்ளது About to leave – கிளம்ப உள்ளேன் About to start – தொடங்க உள்ளேன் About to speak – பேச உள்ளேன் About to finish – முடிக்க உள்ளேன் About to travel – பயணம் செய்ய உள்ளேன் Have to pay – பணம் செலுத்த வேண்டும் Have to attend – கலந்துகொள்ள வேண்டும் Have to complete – முடிக்க வேண்டும் Have to wait – காத்திருக்க வேண்டும் Have to leave – கிளம்ப வேண்டும் Has to pay – பணம் செலுத்த வேண்டும் Has to attend – கலந்துகொள்ள வேண்டும்

🗒️Khalilur Rahman, Bangladesh's Foreign Minister, has been elected as the next President of the United Nations General Assembly. 🏀 *Sports News* 🗒️French Open Tennis: Marta Kostyuk created history by becoming the first Ukrainian woman player to advance to the semifinals of the French Open.

*🅱️⚡பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04-06-2026* *🪀Join* https://whatsapp.com/channel/0029Vb74io8CMY0EBkZqf93h *திருக்குறள்:* அதிகாரம்:43.அறிவுடைமை குறள் எண்:421 குறள்: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் *பொருள்:* அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌. *பழமொழி :* முயற்சி திருவினையாக்கும். *Effort never fails.* *இரண்டொழுக்க பண்புகள்* :. 1. இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருவேன் . 2. எனக்கென ஒப்படைக்கப்பட்ட பணிகளை பொறுப்புணர்வுடன் சரியாக செய்து முடிப்பேன். *பொன்மொழி :* எதிர்காலம், தங்கள் கனவுகளின் உறுதியை நம்புபவர்களுக்கே சொந்தமானது. *பொது அறிவு :* 1. நிலவில் இருந்து கனிமங்களை சேகரித்து வர இஸ்ரோ மேற்கொள்ளும் திட்டம் எது? சந்திராயன் 4. 2. உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் எங்கு அமைந்துள்ளளது? ஜம்மு - காஷ்மீர். (செனாப் பாலம், 359 m) *English words :* Advance - put forward,முன்னுக்குப்போ. Another - One more, இன்னுமொரு. புவியியலும் சுற்றுசூழலும் : பூமியையும் அதில் வாழும் மக்களையும் பற்றிப் படிக்கும் அறிவியல் புவியியல் ஆகும். புவியியலின் முக்கியப் பிரிவுகள் 🌍 இயற்கைப் புவியியல் மலைகள் ஆறுகள் கடல்கள் காலநிலை நிலநடுக்கம், எரிமலைகள் 👨‍👩‍👧‍👦 மனிதப் புவியியல் மக்கள் தொகை நகரங்கள் விவசாயம் தொழில்கள் போக்குவரத்து ஜூன் 04 ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது நீதிக்கதை: “ *குருவியும் பள்ளியும்* ” ஒரு கிராமத்தில் ஒரு சிறிய குருவி இருந்தது. அதற்கு தினமும் நண்பர்களுடன் விளையாடுவதுதான் பிடிக்கும். அருகில் இருந்த மற்ற குருவிகள் எல்லாம் பள்ளிக்குச் சென்று புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டன. ஆனால் இந்தக் குருவி, “இப்போ விளையாடுறதுதான் முக்கியம். படிப்பு பிறகு பார்த்துக்கலாம்!” என்று சொல்லி பள்ளிக்குப் போகாமல் இருந்தது. சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் பெரிய புயல் வந்தது. மற்ற குருவிகள் ஆசிரியர் கற்றுக் கொடுத்தபடி பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுத்து தப்பித்துக் கொண்டன. ஆனால் பள்ளிக்குச் செல்லாத குருவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது மிகவும் சிரமப்பட்டது. அப்போது அதன் நண்பர்கள் உதவி செய்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள். அன்றிலிருந்து அந்தக் குருவி, “விளையாட்டு முக்கியம் தான். ஆனால் படிக்க வேண்டிய வயதில் படித்தால் தான் வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க முடியும்” என்று உணர்ந்து தினமும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது. நீதி: படிக்கிற வயதில் கல்வி கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் வரும் சவால்களை அறிவுடன் சமாளிக்க முடியும். 📚✨ *இன்றைய செய்திகள் 04.06.2026* 🗒️தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்கள் ரூ.342 கோடியில் குடிநீர் நீர்த்தேக்கம் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் . 🗒️ மாவட்டம் முழுவதும் சிங்கப்பெண் விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தவேண்டும் -உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு. 🗒️25 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு... 🗒️ விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 🗒️ஐ.நா. பொதுச்சபை அடுத்த தலைவராக வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி கலீலூர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 🏀 *விளையாட்டு செய்திகள்* பிரெஞ்சு ஓபன் -டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் உக்ரைனிய வீராங்கனை- வரலாறு படைத்த கோஸ்ட்யுக் *Today's Headlines* 🗒️Tamil Nadu Public Works Department Minister N. Anand personally inspected drinking water reservoir projects worth ₹342 crore. 🗒️The High Court Bench has directed that "Singappen" awareness workshops be conducted across the district. 🗒️Heavy rainfall is likely in 25 districts. 🗒️The Central Government has decided to allocate ₹10,000 crore to help control aviation fuel prices.

🍁🎹 குறைந்த கட்டணத்தில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக கீபோர்டு வாசிக்க கற்றுக் கொள்ளலாம் ▪️மிகவும் குறைந்த கட்டணம் ▪️தமிழில் எளிமையான பயிற்சி ▪️வயது தடை இல்லை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்தக் குழுவில் இணையவும் https://chat.whatsapp.com/IeDqCRrvMeEGcxzmWg75wp?s=cl&p=a&mlu=1

*_பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த அலுவலர்கள் / பணியாளர்கள் காலை 10:00 மணிக்கு முன்பாக அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு!!!_* ☝️☝️☝️

Education Department - Attending Office on time.pdf1.22 KB

*_3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!!_* *_இணைப்பு: அரசாணை, அரசுக் கடிதம் மற்றும் நீதிமன்ற ஆணை._* ☝️☝️☝️ தகவல் தொகுப்பு.... BY N.PALANISELVAM, PGT, COMMERCE, GHSS, HIGHWAVYS - 625515 UTHAMAPALAYAM - TK THENI - DT

DSE - Maternity Leave 3rd and above Child.pdf10.05 KB

ஆனால் அவற்றாலும் அந்த எலியை பிடிக்க முடியவில்லை. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை... ஆனால் இளவரசர் சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதிசயம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான். உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்? 🔹நீதி: எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும் 🔹இன்றைய செய்திகள் 07.04.2026 ⭐ "12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ஆம் தேதி அன்று வெளியாகும்" ⭐ இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ⭐ இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. 🏀 விளையாட்டுச் செய்திகள் 🏀ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்: புவனேஷ்வர் குமார் சாதனை 🔹Today's Headlines ⭐ “The Class 12 public examination results will be released on May 8.” ⭐ 156 Chinese nationals have been arrested in Sri Lanka for being involved in large-scale international online financial fraud operations. ⭐ Iran has carried out a major drone attack targeting Ben Gurion International Airport in Tel Aviv, Israel. 🏀 Sports News 🏀 Bhuvneshwar Kumar becomes the first fast bowler to take 200 wickets in the Indian Premier League.

*🅱️⚡பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.04.2026* *🪀Join* https://chat.whatsapp.com/KoNesbzVevV8yqsibHmwxU 🔹திருக்குறள்: குறள் 732: பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு . 🔹விளக்க உரை: மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும். 🔹பழமொழி : Believe in yourself and succeed. உன்னை நம்பினால் வெற்றி பெறுவாய். 🔹இரண்டொழுக்க பண்புகள் :. 1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும். 2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன் 🔹பொன்மொழி : சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிவருகின்றன -ஏபிஜே அப்துல் கலாம் 🔹பொது அறிவு : 01. நமது உடலில் ரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் எது? வைட்டமின் கே-Vitamin K 02. கிரானைட் நகரம் என்று அழைக்கப்படுவது எது? அபெர்டீன், ஸ்காட்லாந்து Aberdeen, Scotland, 🔹English words : Appraisal - evaluation மதிப்பீடு Cautious - being careful to avoid risks. எச்சரிக்கை 🔹தமிழ் இலக்கணம்: ஒரு, ஓர் வரும் இடங்கள் எவை என்று பார்ப்போம் உயிர் எழுத்துகள் முன் ஓர் வரும் ஓர் ஆயுதம் ஓர் அலை ஓர் ஒட்டகம் ஓர் ஈ ஓர் இலை உயிர்மெய் எழுத்துகள் முன் ஒரு வரும் ஒரு காகம் ஒரு மெத்தை ஒரு சத்திரம் ஒரு மரம் ஒரு பழம் அறிவியல் களஞ்சியம் : பூமியின் 50% முதல் 80% வரையிலான ஆக்ஸிஜன் கடல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று பல்வேறு விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இந்த உற்பத்தியின் பெரும்பகுதி, தாவர அடிப்படையிலான கடல்வாழ் உயிரினங்களால் நடைபெறுகிறது. கடல்வாழ் பிளாங்க்டன்கள், பாசிகள், கடற்பாசிகள் மற்றும் சில பாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை செய்து, உலகின் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. 🔹ஏப்ரல் 7 உலக நலவாழ்வு நாள் உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (7 ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார். தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார். 🔹நீதிக்கதை - பசி ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான். அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் முடியவில்லை . மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

🌷ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத ஆசிரியர்களுக்கு மறுபணிநியமன (Re-employment) காலத்திற்கான ஊதியம் வழங்குதல் தொடர்பாக தெளிவுரை வழங்கி நிதித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

DSE - Re - Employment Salary.pdf5.77 KB

*🅱️⚡யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் 2023ஆம் ஆண்டு கடிதம் - பக்கம் 7, பத்தி 10...*