cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

வாழ்வியல் வழிகாட்டி (Vaazhviyal Vazhikaatti) - The Life Guide

Contact/Donation: 9095728684 Telegram: @KanagarajPonnappan A channel for life changing PDF Books, Audios, Videos and Information regarding Wealth, Health, Relationship, Skills, Spirituality & Personal development...etc யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

إظهار المزيد
مشاركات الإعلانات
5 223
المشتركون
+324 ساعات
+667 أيام
+33530 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

🦋 நீங்கள் சரியான திசையில் தான் போய் கொண்டிருக்கிறீர்களா!?
மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும் எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் மட்டுமே தேர்ந்தெடுத்துப் பின்பற்றினால், 3 நாட்களுக்குள் நீங்கள் சரியான திசையில்தான் போய்க் கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கான ஏதாவது ஒரு சமிக்கை உங்களை வந்தடையும். மூன்று வாரங்களுக்குள் உங்கள் வாழ்க்கை பிரமாதமாக மாறுதல் அடையும். 'நான் மிகவும் விரும்பும் இந்த வேலை/ பணம்/ பரிசு/ சாதனை/ உறவு/ வீடு/ ஆரோக்கியம் கிடைக்காதவரை என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது' என்று நீங்கள் நினைத்தால்? இதிலுள்ள வினோதமான முரண்பாடு என்னவென்றால், மகிழ்ச்சியாக இருக்காதவரை அது கிடைக்காது. அது இன்னும் வரவில்லை என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும்வரை அது உங்களிடம் வராது. ஏனெனில் நீங்கள் அது இல்லாதது பற்றியே கவனத்தைக் குவித்துக் கொண்டு இருப்பதால் அத்தகைய அதிர்வு அலைகளையே நீங்கள் அனுப்புவீர்கள். நீங்கள் மோசமாக உணர்வதற்கு, நீங்கள் பிரபஞ்சப் போக்கிற்கு எதிராகப் போக முயற்சிப்பதுதான் காரணம். எதிர்ப்புதான் உங்கள் கனவுக்குத் தடைபோடுகிறது. உங்களை மோசமாக உணர வைக்கிறது.
😀 எது எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க உங்களால் முடியும்.
வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாமலேயே உங்களால் நன்றாக இருப்பதாக உணர முடியும். அப்போது மாற்றம் தானாகவே நிகழும். உங்களுடைய இப்போதைய சூழல் குறித்து அமைதியாக இருப்பதே நல்லது. வாழ்க்கையோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்திவிடுங்கள். வாழ்க்கை குறித்துச் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பின் நீங்கள் நம்பிக்கையாக உணரும் வழியில் உங்கள் கனவைக் குறித்துச் சிந்தியுங்கள். அல்லது உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வேறு ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்தியுங்கள். சரியான திசையை நோக்கிச் சுக்கானைத் திருப்புங்கள். பிரபஞ்சத்தின் போக்கில் நீங்கள் போகத் துவங்கியதும், ஒரு விடுதலை உணர்வு உங்களை அரவணைத்துக் கொள்வதை உணர்வீர்கள். - வாழ்க்கை ஒரு பரிசு
إظهار الكل...
14👍 7🙏 4👏 2🆒 2
https://t.me/boost/VaazhviyalVazhikaatti
Premium members can boost this channel to help it unlock additional features!
إظهار الكل...
வாழ்வியல் வழிகாட்டி (Vaazhviyal Vazhikaatti) - The Life Guide

Boost this channel to help it unlock additional features.

👍 2
உங்கள்_குழந்தையும்_ஐன்ஸ்டீன்_ஆகலாம்_என்_சி_ஸ்ரீதரன்.pdf13.67 MB
🙏 6 2
மருந்தில்_குணமடையாத_51_நோய்கள்!.pdf1.50 MB
🙏 8 4👍 1
🥰 நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதே முக்கியம்!
வாழ்க்கைக்கான மாயாஜால அணுகுமுறை என்பது அலோபதி மருத்துவத்தை ஒதுக்கி வைப்பது என்று பலர் அனுமானித்துக் கொள்கின்றனர். அலோபதி மருத்துவமானது அடிப்படைக் காரணங்களைக் களைவதை விடுத்து, அறிகுறிகளைக் களைய முனைகிறது; முழுமையில் கவனம் செலுத்தாமல், குறிப்பிட்ட ஒரு பகுதியில் கவனம் செலுத்துகிறது; தீர்வை உள்முகமாகத் தேடாமல், வெளியே வல்லுனர்களிடம் தேடுகிறது என்பதுதான் பலர் முன்வைக்கும் வாதம். ஆனால் குணமாக்குதலைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் தனித்துவமான உணர்ச்சி வழிகாட்டிகளைக் கொண்டுள்ளோம்.
🤒 உங்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஏதாவது ஒரு பிரச்சனை இருந்தால், உங்களுக்கு எந்த அணுகுமுறை நிவாரணம், நம்பிக்கை, மற்றும் நேர்மறையான உணர்வு ஆகியவற்றைத் தோற்றுவிக்கிறதோ அதைப் பயன்படுத்துங்கள்.
வழிமுறைகளைவிட, நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதே இங்கு முக்கியம். உங்களுக்கு எது நல்ல உணர்வைத் தருகிறதோ, அதைப் பயன்படுத்துங்கள். நவீன மருத்துவம் ஏராளமான நன்மைகளையும் தீர்வுகளையும் வழங்குகிறது. பல மருத்துவர்கள் உண்மையான குணமாக்குபவர்களாக விளங்குகிறார்கள். ஒரு மருத்துவ அணுகுமுறை உங்களுக்குக் கேடு விளைவிக்கும், உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று கூறிக் கொண்டே, அதைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், உங்கள் உடலுக்கு நேர்மறையான தகவல்களை அளியுங்கள். முடிந்த அளவு உங்களைச் சமமாகக் கருதும், உங்களை மரியாதையுடன் நடத்தும் மருத்துவர்களிடம் செல்லுங்கள்.
❤️அதாவது, அன்பு வழியில் இருக்கும் மருத்துவரிடம் செல்லுங்கள்.
إظهار الكل...
👍 16 12👏 2
அடுத்த_விநாடி_நாகூர்_ரூமி.pdf30.32 MB
🙏 5 2