ar
Feedback
Naushin_Binth_Sha

Naushin_Binth_Sha

الذهاب إلى القناة على Telegram

அல்குர்ஆன் அஸ் ஸுன்னாஹ் ஒளியில் உங்களுக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

إظهار المزيد
1 026
المشتركون
-124 ساعات
لا توجد بيانات7 أيام
-230 أيام
أرشيف المشاركات
இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : மார்க்க அறிவும் இறைநம்பிக்கையும் இதயத்திற்கு வெளிச்சமளிக்கின்றன. அடியானைச் சுற
இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : மார்க்க அறிவும் இறைநம்பிக்கையும் இதயத்திற்கு வெளிச்சமளிக்கின்றன. அடியானைச் சுற்றி உலகம் இருண்டுபோனாலும், அவனது ஈமானின் வெளிச்சம் அவனுக்கு வழிகாட்டி பிரகாசிக்கும். (நூல் : அல் ஃபவாயித் / الفوائد) வெளி உலகில் எத்தகைய சோதனைகளும், வழிகேடுகளும், மனக்குழப்பங்களும் சூழ்ந்திருந்தாலும், ஒருவருடைய உள்ளத்தில் இருக்கும் மார்க்க அறிவும் (இல்ம்) இறைநம்பிக்கையும் (ஈமான்) அவரை வழிதவற விடாமல் பாதுகாக்கும்.

#ஸலஃபுகளிடமிருந்து 📌✨ சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : إِذَا أَكْثَرَ الْعَبْدُ ذِكْرَ الْمَوْتِ، رَضِيَ مِ
#ஸலஃபுகளிடமிருந்து 📌✨ சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : إِذَا أَكْثَرَ الْعَبْدُ ذِكْرَ الْمَوْتِ، رَضِيَ مِنَ الدُّنْيَا بِالْقَلِيلِ ஒரு அடியான் மரணத்தை அதிகமாக நினைவுகூரும் போது, அவன் இவ்வுலகத்தின் சொற்பமான (குறைந்த) வசதிகளைக் கொண்டும் திருப்தியடைந்துவிடுகிறான். நூல் : ஹில்யதுல் அவ்லியா 6/386

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ஒருவர் குர்ஆனை கேட்பதற்குப் பதிலாக இசையைக் கேட்பதில் அதிக விருப
இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ஒருவர் குர்ஆனை கேட்பதற்குப் பதிலாக இசையைக் கேட்பதில் அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டிருப்பதை நீங்கள் கண்டால், அவருடைய உள்ளம் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய வார்த்தைகளான குர்ஆன் மீதும் உள்ள அன்பிலிருந்து வெறுமையாக இருக்கிறது என்பதற்கு இதுவே மிக வலுவான ஆதாரமாகும். (நூல் : அல் ஜவாப் அல் காஃபி 1/170)

#வெள்ளிக்கிழமை 📌✨ இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : முந்தைய சமுதாயங்கள் எந்த நாளை அடைய முடியாமல் போன
#வெள்ளிக்கிழமை 📌✨ இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : முந்தைய சமுதாயங்கள் எந்த நாளை அடைய முடியாமல் போனார்களோ, அந்த நாளை அல்லாஹ் நமக்கு எளிதாக்கிக் கொடுத்திருக்கிறான். இந்த புனிதமான நாளை வணக்கங்களால் உயிர்ப்பியுங்கள்! (நூல் : லதாயிஃப் அல் மஆரிஃப்)

ஃபஜ்ர் நேரத்தில் ஷைத்தான் செய்யும் சூழ்ச்சி! 🎙️ அஷ்ஷெய்ஹ் முஜாஹித் இப்னு ரஸீன் (ஹஃபிதஹுல்லாஹ்)

السلام عليكم ورحمة الله وبركاته 🌸 🎓 *இல்ம் இஸ்லாமிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்* `ILM OPEN UNIVERSITY``` > (Run by: PEOPLE EMPOWERMENT TRUST (PET) | Reg. No. 339/2024) ✨ வழங்கும் சிறப்பான 3 மாத கால சான்றிதழ் படிப்பு விரைவில்... (இன் ஷா அல்லாஹ்) *எங்களின் சிறப்பு அம்சங்கள்:* 💻 நேரலை வகுப்புகள் – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களுடன். 🎥 பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் – எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வசதி. 📚 தரமான கற்றல் – எளிய விளக்கம் மற்றும் ஆழமான புரிதல். 📜 சான்றிதழ் வழங்கப்படும் – படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன். 🎧 முழு ஆதரவு & வழிகாட்டுதல் – மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவி. *இயக்குநர்:* > As Sheikh Dr. ML Mubarack Madani Ph.D > (Director – Ilm Online University) ▶️ அறிமுக வீடியோவை பார்க்க: https://youtu.be/k26UdkwpNBc?is=Kzq-_kI-YT8a2OD9 📲 எங்களோடு இணைந்திருங்கள்: 🪀 WhatsApp Groups: • Group 1: https://chat.whatsapp.com/EWANx1wRNK5368m4TYKTV4?mode=gi_t • Group 2: https://chat.whatsapp.com/HrYSc6X1w5fIDzmKNwhCOt?mode=gi_t 📢 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb6MVNb2ZjCih1ZVpF0O 📘 Facebook: https://www.facebook.com/share/14YVdf5YB2s/ 📸 Instagram: https://www.instagram.com/ilm.onlinetamil?igsh=ODA5dGFoY3dhMWdu ▶️ YouTube: https://youtube.com/@ilmuniversity?si=M3fmRpTzWIf2PWOU Teligram: https://t.me/ilmuniversity Threads: https://www.threads.com/@ilm.onlinetamil 📞 தொடர்புக்கு / WhatsApp: +91 93337 12345 (இந்த நற்செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!) ✨

photo content

பாடல்கள் ஏற்படுத்தும் எதிர்மறை சிந்தனைகள்? 🎙️ அஷ்ஷெய்ஹ் முஜாஹித் இப்னு ரஸீன் (ஹஃபிதஹுல்லாஹ்)

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : فَمَنْ أَهْمَلَ تَعْلِيمَ وَلَدِهِ مَا يَنْفَعُهُ، وَتَرَكَهُ سُدًى، فَق
இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : فَمَنْ أَهْمَلَ تَعْلِيمَ وَلَدِهِ مَا يَنْفَعُهُ، وَتَرَكَهُ سُدًى، فَقَدْ أَسَاءَ إِلَيْهِ غَايَةَ الْإِسَاءَةِ، وَأَكْثَرُ الْأَوْلَادِ إِنَّمَا جَاءَ فَسَادُهُمْ مِنْ قِبَلِ الْآبَاءِ، وَإِهْمَالِهِمْ لَهُمْ، وَتَرْكِ تَعْلِيمِهِمْ فَرَائِضَ الدِّينِ وَسُنَنَهُ யார் தன் பிள்ளைக்குப் பயனளிப்பதைக் கற்றுக்கொடுக்காமல் அலட்சியமாக விட்டுவிடுகிறாரோ, அவர் அப்பிள்ளைக்குப் பெரும் தீங்கிழைத்துவிட்டார். குழந்தைகள் சீரழிந்து போவதற்குக் காரணம், பெற்றோர்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதும், மார்க்கத்தின் கடமைகளையும் சுன்னாக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் அலட்சியப்படுத்தியதுமே ஆகும். நூல் : துஹ்ஃபத்துல் மவ்தூத் பி அஹ்காமில் மவ்லூத் 16/229

குர்ஆன் வசனத்துடன் நேருக்கு நேர் மோதும் சுப்ஹான மவ்லிதை தான் நீங்கள் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து ஓதிக் கொண்டிருக்கிறீர்கள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையே தகர்ப்பது தான் இந்த மவ்லித். மவ்லித் வரிகள் : اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம்! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம்! குர்ஆன் வரிகள் : அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135) மவ்லித் வரிகள் : يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள். குர்ஆன் வரிகள் : அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22) மவ்லித் வரிகள் : اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார். குர்ஆன் வரிகள் : அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41) மவ்லித் வரிகள் : اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். குர்ஆன் வரிகள் : “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16) இன்னும் அதிகமான ஷிர்க் வரிகள் உண்டு. இதைவிட பல மடங்கு ஸஹாதத் கலிமாவை எட்டி உதைப்பது தான் முஹ்யித்தீன் மவ்லூது.

இமாம் ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : அல்குர்ஆன் மற்றும் சுன்னாவில் இருந்து மவ்லிது ஒதுவதற்கான ஒரு ஆதாரத்தை கூட நான் எங்கும் காணவில்லை! மற்றும் சிறந்த காலமான ஸஹாபாக்களின் காலத்தில் கூட இதற்காண ஆதாரத்தை எங்கும் காண முடியவில்லை நூல் : பத்ஹுல் ரப்பானி!

ஒரு ஸலவாத்; அளப்பரிய நன்மைகள்! நபி (ﷺ) அவர்கள் மீது நாம் சொல்லும் ஒவ்வொரு ஸலவாத்தும் நமது பாவங்களை போக்கி, அந்தஸ்தை உயர்த்துகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை நாளில் அதிகமாக ஸலவாத் சொல்வோம்!

#இறைவேதம் 📌✨ حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏ அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்
#இறைவேதம் 📌✨ حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏ அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் : என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99) لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ كَلَّا‌ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏ நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:100)

இமாம் அல் குர்துபி (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு பெண் தன் கணவனுக்குச் செய்யும் பணிவிடையும், அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்
இமாம் அல் குர்துபி (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு பெண் தன் கணவனுக்குச் செய்யும் பணிவிடையும், அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும் மார்க்கத்தில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். அவனது உரிமைகளைப் பேணி நடப்பது இறைவழிபாட்டிற்கு நிகரானது. நூல் : தஃப்ஸீர் அல் குர்துபி

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! எனவே, நீங்கள் (அவர் மீது) ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள். اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏ இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 33:56)

மார்க்கமுள்ள பெண்ணை மணந்துக் கொள்ளுங்கள்! ✨ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்
மார்க்கமுள்ள பெண்ணை மணந்துக் கொள்ளுங்கள்! ✨ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நூல் : ஸஹீஹ் புகாரி 5090.

ஃபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்!
+1
ஃபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்!

ஒற்றை ஸலவாத்துக்கு படைத்த எஜமானனின் பத்து அருள்கள்!

இறைநம்பிக்கையும் துஆவும்!
+1
இறைநம்பிக்கையும் துஆவும்!

உன்னை நேசிக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்!
+2
உன்னை நேசிக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்!