ar
Feedback
Tamil Stories தமிழ் கதைகள்

Tamil Stories தமிழ் கதைகள்

الذهاب إلى القناة على Telegram

தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story

إظهار المزيد
5 991
المشتركون
لا توجد بيانات24 ساعات
-27 أيام
-930 أيام
أرشيف المشاركات
கதை #S975 எப்படி சேமிக்கிறீர்கள் பெரியவர் ஒருவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவனுக்கு வருவாய் கிடைக்க வழியையும் ஏற்படுத்தி, தனிக் குடித்தனம் அமைத்து கொடுத்தார். அவ்வப்போது வந்து மகனைப் பார்த்துச் செல்வார் தந்தை ஒரு நாள் தந்தை வந்திருந்தார். இரவு நேரம், தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர். “அப்பா! நீங்கள் எப்படி பணத்தைச் சேர்த்தீர்கள்? என்னுடைய வருமானத்துடன், உங்களுடைய உதவி இருந்தும், எனக்கு ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறதே, ஏன்?” என்று கேட்டான் மகன். "மகனே! எதுவும் பழக்கத்தால் வருவது. வாழ்க்கையில் மிகவும் கவனம் தேவை. அவசியமான செலவு எது, அவசியம் இல்லாத செலவு எது என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; ஆடம்பரமான உடைகள், சினிமா, நாடகம், சிற்றுண்டி விடுதிக்குச் செல்லுதல் ஆகியவற்றை நான் தவிர்த்து வந்துள்ளேன். வீட்டில் வெளிச்சத்துக்கு ஒரு விளக்கே போதும் என்றால், எதற்காக மற்றொரு விளக்கை எரிய விடவேண்டும்” என்று சொல்லிவிட்டு எழுந்தார். உடனே மகன் எழுந்து, தேவையின்றி எரிந்து கொண்டிருந்த மற்றொரு விளக்கை அணைத்தான்.

கதை #S974 கொழந்தைய பாத்துக்கங்க ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டுள்ளனர். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச் செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக. இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்? என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். "ஏம்பா நீ சைலண்டா இருக்க.” “நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்” "எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்தக் கதை தெரியுமா?” “இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக் கிட்ட இதையே தான் சொன்னாங்க.” பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையைத் தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர்கொல்லி நோய் இருந்திருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். “உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும். நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது”. கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

கதை #S973 பொக்கைவாய் கனவு ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கைவாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒருநாடி ஜோதிடரை வரவழைத்தான். அந்த நாடிஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கைவாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கைவாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப்பார்த்துவிட்டு, மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள். அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார். இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம். பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாண்டால் வாழ்வில் ஜெயிக்கலாம்

கதை #S972 வடையே போதுமே கிராமத்திலிருந்து ஒருவன் நகரத்துக்கு வந்தான். பசி எடுத்தது அவனுக்கு ஒரு சிற்றுண்டி விடுதிக்குச் சென்று, ஒரு தோசை கொண்டு வரச் சொல்லி, சாப்பிட்டான், பசி அடங்கவில்லை. மேலும், ஒரு தோசை கொண்டுவரச் சொல்லி, அதையும் சாப்பிட்டான் அப்பொழுதும் அவன் வயிறு நிறையவில்லை. மூன்றாவது தடவை, ஒரு தோசை வரவழைத்து அதையும் சாப்பிட்டான். பசி அடங்கவில்லை. பிறகு ஒரு மசால் வடையைக் கொண்டு வரச் சொல்லி, அதைச் சாப்பிட்டதும் பசி அடங்கியது. அப்பொழுது அவன் தன் தலையில் அடித்துக் கொண்டு, “என்னைப் போல் மூடன் எங்கேயாவது இருப்பானா? மூன்று தோசைகளையும் வாங்கிச் சாப்பிட்டு, காசை வீணாக்கிவிட்டேனே! முதலிலேயே ஒரு மசால் வடையை வாங்கித் தின்றிருந்தால், பசி அடங்கியிருக்குமே” என்று மனம் வருந்தினான்.

கதை #S971 இரு பொக்கிஷம். ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந்தனின் தோரணையிலேயே அவனைப் பார்த்திருந்தான் சிஷ்யன். செயல் இழந்தவனாக அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனுக்கு என்ன ஆலோசனை சொல்லப்போகிறார் குருநாதர் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சிஷ்யனும் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தான். இப்போது உன் நிதி நிலைமை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் குரு. மானத்தோடு வாழ்ந்து பழகியவன். அதனால், இருந்த சொத்தையெல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டேன். செல்வமெல்லாம் தொலைந்தது. அதனால் என் மனைவியும் என்னைப் பிரிந்துவிட்டாள். குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவளது பெற்றோரிடம் போய்விட்டாள். உற்றார், உறவினர் யாருமே என்னை மதிப்பதில்லை. கையில் இப்போது நயா பைசா இல்லை. மனதில் தெம்பும் இல்லை. உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது” என்றான் வந்தவன். இனி இழப்பதற்கு எதுவுமில்லை உன்னிடம். ஆனால், இந்த நிமிடம் உன்னிடம் மிச்சமிருப்பது விலைமதிப்பற்ற இரண்டு பொக்கிஷங்கள். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அவற்றை ஒருவனால் விலைக்கு வாங்க முடியாது. உனக்கு ஏற்பட்ட தீமைகளின் நன்மையாக அவை உனக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை நீதான் கவனமாக மீட்டெடுக்க வேண்டும். சரியாகப் பயன்படுத்த வேண்டும். உன் வசம் இருக்கும் அந்த பொக்கிஷங்களை சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் நீ இழந்த அனைத்தையும் திரும்பவும் அடைவாய். இனி, எதைச் செய்தாலும் அதில் நீ வெற்றி பெறுவாய்” என்று கூறினார் குரு. அவர் பேசப்பேச, எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தான் எதிரே இருந்தவன். குருவின் குரலைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யனுக்கும் அவரது பேச்சின் பொருள் புரியவில்லை. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையில் இருப்பவனிடம் அப்படியென்ன பொக்கிஷங்கள் மிச்சமிருப்பதாகக் கூறுகிறார் குருநாதர் என தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு அதிகமானது. வந்திருந்தவன் அதைக் கேட்கும் முன்னர், சிஷ்யனே குறுக்கிட்டுக் கேட்டுவிட்டான். அப்படி என்ன விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் அவரிடம் மிச்சமிருக்கின்றன குருவே?” என்றான். ஆமாம் ஸ்வாமி. நீங்கள் சொன்னது எனக்கும் விளங்கவில்லை. என்னிடம் அப்படியென்ன மிச்சமிருக்கிறது ஒன்றுக்கும் உதவாத இந்த உயிரைத் தவிர?” என்று கேட்டான் வந்திருந்தவனும். ஓரமாக நின்றுகொண்டிருந்த சிஷ்யனையும் அருகே அழைத்து, எதிரில் அமரச் சொன்னார் குரு. பொறுமையாகவும் தீர்க்கமாகவும் தன் பேச்சைத் தொடர்ந்தார். தற்கொலை செய்துகொள்ளும் முடிவெடுத்த உன்னை இந்த நிமிடம்வரை தடுத்து நிறுத்திவைத்திருப்பது உனக்குள் மிச்சமிருக்கும் உன் தன்னம்பிக்கை. எந்த நம்பிக்கை உன் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் பக்கபலமாக இருந்ததோ, அதுதான் உன் தோல்விகளால் தொலைந்துபோகாமல் கொஞ்சமேனும் மிச்சமிருக்கிறது. அதுதான் முதல் பொக்கிஷம். துளியாக இருக்கும் அதை நெருப்பாகப் பரவ விடு.” தலையசைத்து ஆமோதித்தான் வந்திருந்தவன். சிலையாகிக் கவனித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு தொடர்ந்தார். உன்னிடம் இருக்கும் அந்த இரண்டாவது பொக்கிஷம் எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. தோல்விகளால்தான் அதை அடையமுடியும். கைவசம் இருக்கும் எல்லாமும் நம்மை விட்டுப் போன பிறகு நம்மிடம் மிஞ்சியிருப்பது அதுவேயாகும். தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு கணத்தையும் திரும்பத்திரும்ப சிந்தித்துப் பார்த்தால் அறியக் கிடைக்கும் அதுவே அனுபவம் எனப்படும்”. என்றார் குரு. அவர் சொல்லச்சொல்ல உத்வேகம் வந்தது தோற்றுப்போய் வந்திருந்தவனுக்கு. வாழ முடியும் என்ற வைராக்கியம் உருவானது. வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை வெகுண்டெழுந்தது. அவன் முகரேகைகள் தெரிவித்த பரவசத்தைப் பார்க்கும்போது சிஷ்யனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கதை #S970 நல்ல சோளம் பயிரிட தரமான சோளம் பயிரிட்ட விவசாயி ஒருவர் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவர் சிறந்த பயிரிடப்பட்ட சோளத்திற்கான விருதை வென்றார். ஒரு வருடம் ஒரு பத்திரிகை நிருபர் அவரை நேர்காணல் செய்தார், விவசாயி தனது விதை சோளத்தை அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொண்டதை நிருபர் கண்டுபிடித்தார். "ஒவ்வொரு ஆண்டும் உங்கள் அண்டை வீட்டார் சோளத்தில் போட்டியிடும் போது, உங்களின் சிறந்த விதை சோளத்தை எப்படி பகிர்ந்து கொள்ள முடியும்?" என்று நிருபர் கேட்டார். “ஏன் சார்,” என்றான் விவசாயி, “உங்களுக்குத் தெரியாதா? பழுக்க வைக்கும் சோளத்தில் இருந்து காற்று மகரந்தத்தை எடுத்து வயல்களிலிருந்து வயலுக்கு சுழற்றுகிறது. எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் தரம் குறைந்த சோளத்தை பயிரிட்டால், குறுக்கு மகரந்தச் சேர்க்கை எனது சோளத்தின் தரத்தை சீராகக் குறைக்கும். நான் நல்ல மக்காச்சோளத்தை பயிரிட வேண்டுமானால், என் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நல்ல சோளம் பயிரிட உதவ வேண்டும். நம் வாழ்க்கையும் அப்படித்தான். அர்த்தமுள்ளதாகவும் நன்றாகவும் வாழ விரும்புபவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை வளப்படுத்த உதவ வேண்டும், ஏனென்றால் ஒரு வாழ்க்கையின் மதிப்பு அது தொடும் வாழ்க்கையைக் கொண்டு அளவிடப்படுகிறது. மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவர்கள் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் காண உதவ வேண்டும், ஏனென்றால் ஒவ்வொருவரின் நலனும் அனைவரின் நலனுடனும் பிணைக்கப்பட்டுள்ளது.

கதை #S969 என்ன பெருசா நஷ்டம் தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது. அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். ‘அடிக்காதிங்க! அடிக்காதிங்க!’ என்று கத்தினார். ‘என்ன ஐயா! உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுரிங்க? என்று அங்கிருந்த ஒரு இளைஞன் கேட்டான். ‘அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாபிடுறோம். நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு. அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகலையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும்” என்றார் அவர். ‘என்ன அய்யா இப்படி சொல்லுரிங்க. அந்த பசு இப்படி சாப்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு” கேட்டான். அந்த பெரியவர் சொன்னார் ‘என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது? நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைகிறீங்க. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுதிர போகுது? எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்துவைகல எங்க ஆத்தாக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன்” என்றார்.

கதை #S968 ஒருபிடி அரிசி ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் பணக்காரனாக இருந்தும் கஞ்சனாக இருந்தார். ஒரு ரூபாயைக் கூட யாருக்கும் தரமாட்டார். ஆனாலும் அவருக்கு சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள துறவி ஒருவரை சந்திக்க சென்றார். துறவியிடம் சென்று, நான் சொர்க்கத்தை அடைய ஆசைப்படுகிறேன் அதை அடைவதற்கு வழி ஏதேனும் இருந்தால் சொல்லுங்களேன் என்று வேண்டினார். அதற்கு அந்த துறவி அவரிடம் யாருக்கும் அநியாயம் செய்யாமல் தர்மம் செய் என்று கூறினார். ஆனால் அவருக்கோ தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்ய மனம் வரவில்லை. அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையையும் விடமுடியவில்லை. அதனால் நாள்தோறும் ஒரு ஏழைக்கு ஒரு பிடி அரிசி மட்டும் தருவோம். அப்படி தருவதனால் நம் செல்வமும் குறையாது. நமக்கு சொர்க்கமும் கிடைக்கும் என்று முடிவு செய்தார். அதன்படி தினமும் ஒரு ஏழைக்கு ஒரு பிடி அரிசி தானம் தந்தார். மாதங்கள் சென்றன. மீண்டும் அந்த ஊருக்கு அந்த துறவி வந்தார். அவர் வந்திருப்பதை அறிந்த அவர் அந்த துறவியை காணச் சென்றார். அந்த துறவி ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். துறவியைப் பார்த்த அந்த பணகாரன் அவரை வணங்கினார். அவரை வணங்கிவிட்டு, துறவியிடம் ஐயா! தாங்கள் கூறியதுபோலவே நான் தினமும் ஒரு ஏழைக்கு ஒரு பிடி அரிசி தானம் கொடுத்துக் கொண்டு வருகிறேன். அதனால் எனக்கு உறுதியாக சொர்க்கம் கிடைக்கும் அல்லவா? என்று கேட்டார். அதற்கு அந்த துறவி ஒன்றும் பேசாமல் தம் அருகில் இருந்த மரத்தின் அடிப்பகுதியை தன் விரல் நகத்தால் கீறத் துவங்கினார். அந்த பணக்காரரும் நீண்ட நேரம் பொறுமையோடு அங்கேயே காத்திருந்தார். ஆனால் துறவியோ அடி மரத்தை கீறுவதை தொடர்ந்து கீறிக் கொண்டே இருந்தார். பொறுமை இழந்த அந்த பணக்காரன் துறவியைப் பார்த்து, ஐயா! நான் கேட்டதற்கு தாங்கள் ஏதும் பதில் சொல்லாமல் நீண்ட நேரமாக இந்த மரத்தை நகத்தால் கீறிக் கொண்டே இருக்கிறீர்களே! என்று கேட்டார். அதற்கு அந்த துறவி, அந்த பணக்காரரிடம் நான் இந்த மரத்தை என் நகத்தால் வெட்டிக் கொண்டிருக்கிறேன் என்றார். இதை நான் வெட்டி முடிக்கும் வரை அமைதியாக இரு என்று கூறினார். இதைக் கேட்ட செல்வந்தனுக்கு சிரிப்பு வந்தது. ஐயா! இவ்வளவு பெரிய மரத்தை உங்கள் விரல் நகத்தால் வெட்ட முடியுமா? கோடாரியால் வெட்டினாலே பல நாட்கள் ஆகுமே என்று கேட்டார். அதற்கு துறவி நீங்கள் தினமும் ஒருபிடி அரிசியை தானம் செய்துவிட்டு சொர்க்கத்திற்கு செல்ல ஆசைப்படும்போது, என் விரல் நகத்தால் இந்த பெரிய மரத்தை வெட்ட முடியாதா? என்று கேட்டார். உடனே அந்த பணக்காரன் துறவியிடம் தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். மேலும் இன்று முதல் ஏழை எளிய மக்களுக்கு வாரி வாரி வழங்கி சொர்க்கத்தை அடைவேன் என்று துறவியை வணங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

கதை #S967 விருந்துக்கு தகுதி தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகனிடம் சொன்னார். "மகனே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும். எல்லோரும் சாப்பிடுவோம்” என்றார். அவருடைய மகன் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தான். "தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!" சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகனிடம் திரும்பி, அவனிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகன் சொன்னான், "தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?

கதை #S966 அன்னையின் கைகள் ஒரு இளைஞன் நன்றாகப் படித்து, ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். அவன் முதல் நேர்முகத் தேர்வை நன்றாகவே செய்தான். அந்த கம்பெனியின் நிர்வாகி, இறுதி நேர்முகத் தேர்வை நடத்தி தன் முடிவை எடுத்தார். நிர்வாகி இளைஞனின் விண்ணப்பித்திலிருந்து தெரிந்துக் கொண்டது யாதெனில், அவன் பள்ளிப் படிப்பிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை ஒரு வருடம் கூட குறைந்த மதிப்பெண்கள் பெற்றதில்லை. நிர்வாகி அவனிடம், உனக்குப் பள்ளிக்கூடத்தில் “படிப்பு உதவித் தொகை” ஏதேனும் கிடைத்ததா என வினவினார். அதற்கு அவன் “இல்லை” என்று பதிலளித்தான். அப்படியானால், “உன் தந்தை பள்ளிக்குத் தொகை கட்டினாரா?” என நிர்வாகி கேட்டார். அதற்கு அந்த இளைஞன், “எனக்கு ஒரு வயது இருக்கும் போதே என் தந்தை இறந்து விட்டார். என் தாயார் தான் என்னை பார்த்துக் கொண்டார்” என்றான். தாயார் எங்கு வேலை செய்கிறார் என்று நிர்வாகி விசாரித்தப் பொழுது, அவன் “என் தாயார் சில வீடுகளில் பாத்திரம் தேய்த்தும் துணிகளை வெளுக்கும் வேலைகளை செய்கிறார்” என்று பதிலளித்தான். அதற்கு நிர்வாகி இளைஞனிடம் அவனது கைகளைக் காண்பிக்கச் சொன்னார். கைகள் மிருதுவாகவும், சுத்தமாகவும் காணப்பட்டன. உடனடியாக நிர்வாகி, “உன் தாயாருக்குத் துணி வெளுப்பதில் எப்போதேனும் ஏதாவது உதவி செய்திருக்கிறாயா?” எனக் கேட்டார். அந்த இளைஞன் மறுத்தவாறே, “என் தாயார் படிப்பில் மென்மேலும் அக்கறையை செலுத்தச் சொன்னார்” என்று கூறினான். நிர்வாகி இளைஞனிடம் ஒரு வேண்டுக்கோள் விடுத்தார். அன்று இரவு தாயாரின் கைகளை சுத்தப்படுத்த உதவி செய்து, மறுநாள் காலை அவரை சந்திக்குமாறு கூறினார். இளைஞன் மனதில் யோசனை செய்துக் கொண்டே, தனக்குக் கட்டாயம் இந்த வேலை கிடைத்து விடும் என்ற பூரிப்பில் வீடு சென்று தாயாரின் கைகளை சுத்தப்படுத்த அவா கொண்டான். தாயாருக்கு ஒரு புறம் சந்தோஷமும், மறு புறம் பயமும் தோன்ற, கைகளை மகனிடம் காட்டினார். அவன் தாயாரின் கைகளை நிதானமாக சுத்தப் படுத்தத் தொடங்கினான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாகத் தாயாரின் கைகளில் விழத் தொடங்கியது. தாயாரின் கைகளின் சுருக்கங்களையும், காயங்களையும் முதன் முறையாக மகன் கண்டான். சில காயங்களின் வலி மிக அதிகமாக இருந்தது. தண்ணீர் பட்டதும் தாயார் சிலிர்க்கத் தொடங்கினார். இளைஞன் முதல் முறையாகத் தன் கல்விக்காகத் தாயார் பட்ட துயரங்களை அறிந்தான். அவன் தாயார் செய்த தியாகங்களை நினைவுப் படுத்திக் கொண்டு, கையில் இருக்கும் காயங்களை நினைத்து வருந்தி, தன் மேற்படிப்பிற்கும், எதிர் காலத்திற்கும், அவன் தாயார் துணி வெளுத்து கஷ்டப் பட்டதை புரிந்துக் கொண்டான். கைகளை சுத்தப்படுத்தியப் பிறகு, மீதியிருந்த துணிகளைத் தானே துவைத்து வைத்தான். தாயும், மகனும் அன்று இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை இளைஞன் காரியாலயத்திற்குச் சென்று நிர்வாகியை சந்தித்தான். இளைஞனின் கண்ணீரைக் கண்டதும், நிர்வாகி அவனிடம் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார். அவன் எண்ணத்தை நிர்வாகி கேட்டப் போது, இளைஞன் “முதலாவதாக பாராட்டு என்றால் என்னவென்று அறிந்தேன். தாயாரின் உழைப்பு இல்லாவிட்டால் இந்த அளவுக்கு என்னால் வெற்றிப் பெற்றிருக்க முடியாது. இரண்டாவதாக, தாயாருடன் சேர்ந்து எப்படி உதவி செய்வது என்று அறிந்தேன். ஒரு காரியம் வெற்றி அடைய என்னென்ன துன்பங்களை சந்திக்க வேண்டும் என புரிந்து கொண்டேன். மூன்றாவதாக, குடும்பம், உறவு இவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்தேன்” என்று சொன்னான். நிர்வாகி, “பிறருடைய வேலையைப் பாராட்டி, அவர்களின் கஷ்டங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் ஒரு நபரையே தேர்வு செய்ய எண்ணினேன். பணம், செல்வம் தான் லட்சியம் என எவரும் எண்ணக் கூடாது. நான் உன்னைத் தேர்வு செய்கிறேன்” என்று கூறினார். பிற்காலத்தில் அந்த இளைஞன் நன்று உழைத்து தன் கீழ் வேலைச் செய்வோரின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றான். எல்லோரும் ஒன்றுச் சேர்ந்து கூட்டாக வேலை செய்து கம்பெனியின் பெயரையும் உயரச் செய்தனர்.

இருந்தார். பல மணிநேரம் சென்றாலும் நாலாவது நண்பர் வரவில்லை. மறுபடியும் உங்களின் நண்பரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் ஹோட்டல் ஓனர். சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட நாலாவது நண்பர் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று. அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய நாலாவது நண்பரை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. நான் உன் நண்பரின் மகன் என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள். எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார். அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், என்று தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர். என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர். என்றார். இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளருக்கு தெரியும். ஹோட்டல் உரிமையாளர் முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி 35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும். என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது. உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்.

கதை #S965 நான்கு நண்பர்கள் ஒரே பள்ளியில் பத்தாவது வரை படித்தவர்கள். அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல். அது. பத்தாவது தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள். நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர். தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர். 35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர். அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும். என முடிவெடுத்துக் கொண்டனர். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர், நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன். என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர். ஒரு நண்பனின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், இன்னொரு நண்பன் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மற்ற இரு நண்பர்களும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர். நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன. முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின. இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் இப்போது அந்த ஹோட்டலின் உரிமையாளரானார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது. முதலாவதாக ஒரு நண்பர் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தார், அவரிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன. ஹோட்டல் உரிமையாளரை பார்த்தவர், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். சார் உங்களுக்காக உங்களின் நண்பர் ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று ஹோட்டல் உரிமையாளர் சொன்னார். நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்கள் என நினைத்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்தில் அடுத்த நண்பர் வந்தார், அவர் ஒரு பெரிய பில்டர் ஆனார். வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார். இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவதாக ஒரு நண்பர் அடுத்த அரைமணி நேரத்தில் வந்தார். அவரிடம் பேசியதில் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது. மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, அவர்கள் டேபிளை புக் செய்துவிட்டு இன்னும் வரவேண்டிய இன்னொரு நாலாவது நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தனர். அவர் எப்போது வருவார்? இந்த நேரத்தில் உங்களின் நண்பரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன். என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர். ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட் என்று போர்ட் தொங்க விடப்பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர். 35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் வராத நண்பரின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் வராத நண்பரைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் வராத நண்பர் தான் நன்றாக படிப்பவனாக இருந்தார். சிறந்த அறிவாளியாக

அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு”, என்று சொல்லும் போது தாத்தாவின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது. “தாத்தா! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார். இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்”, என்று சொன்னார் கடவுள். தாத்தா ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர். ”மகனே! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!”, என்றார் தாத்தாவின் அப்பா. மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் தாத்தா. தாத்தாவின் அப்பா பேசினார். ”ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான். அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது”, என்றார் தாத்தாவின் அப்பா. ”அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!” என்று கெஞ்சினார் தாத்தா. “அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்”, என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார். தாத்தா அழத்தொடங்கினார். ”என்ன தாத்தா! போதுமா? நான் கிளம்பட்டுமா?” என்று கடவுள் கேட்டார். ”கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா. நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை. அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார். நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார். என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்”. தாத்தா மீண்டும் பேசினார்.”கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கேட்டுவிட்டு அழுதார் தாத்தா தாத்தாவுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம் ஆகவே அப்பா இருந்தால் மதியுங்கள் அப்பா இல்லையேல். நினையுங்கள்

கதை #S964 அப்பா ஒருநாள் ஒரு தாத்தா பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் தாத்தா. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் தாத்தாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தார்." தாத்தா! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்). ஆச்சரியப்பட்டார் தாத்தா. யோசித்தார். பிறகு பேசினார். ”கடவுளே! என் அப்பாவை நான் பார்க்க வேண்டும். அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?” என்று கேட்டார் தாத்தா” நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?” என்று கேட்டார். கடவுள்.”கடவுளே! ஆம்.. அவருக்கு நிகர் யாருமில்லை” என்றார் தாத்தா”அப்படியா!” என்றார் கடவுள்.”அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார் தாத்தா. ”அதெல்லாம் சரி! உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?” என்று கேட்டார் கடவுள். ”அப்பாவா? அம்மாவா? இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்”, என்றார் தாத்தா ”சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள் ”என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும். அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார். நான் என் மகனை அவனது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உருவாக்குவேன். ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?” என்று கேட்டார் தாத்தா. அமைதியானார் கடவுள். கடவுள். “ம். மேலே சொல்” என்றார் கடவுள். ”ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார். அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது. அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன். வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது. அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள். அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. “நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு” என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார். வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை”, என்று சொல்லிவிட்டு அமைதியானார் தாத்தா ”அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?” என்று கேட்டார் கடவுள். சிரித்தார் தாத்தா. ”இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள். அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை. அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை. எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்”, என்றார் தாத்தாகடவுள் சிரித்தார். “கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்”, என்றார் தாத்தா. ”அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார் கடவுள். ”ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று.

கதை #S963 பொய் சொல்லும் அம்மா மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய வயது மகனிடம் கேட்டான். "உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி"என்று. அப்போது அந்த மகன் சொன்னான். "என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள். ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவளாய் இல்லை" இதைகேட்ட தகப்பன் கேட்டான். "அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாளா?" அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான். "நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள், எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று. ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி, நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும். ஆனால்."இப்போதைய அம்மா, நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டாள்" அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை. இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே. என் உயிர் என் அம்மாதான்! என் உயிர் என் அம்மாதான்!

தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான். போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே எப்படி தந்தை இவரை தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள். “என் முடிவை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா அம்மா?” என்றான் மகளை நோக்கிய அரசன். “இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்”. அரசன் சொன்னான் “முதலாவதாக வந்தவன் மிக சிறந்த குதிரையேற்ற வீரன். திறமைசாலி. ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ எதுவும் இல்லை”. “இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது.” “மூன்றாமவன் உன்னை சற்று களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும்போது கூட உனக்கு அந்த களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்துவிட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்!” “நான்காம் நபர் மிக பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக் கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.” “ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளை புரிந்துகொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதை போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக்கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!” என்றார். “வாழ்க்கை துணை” என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே “வாழ்க்கைத் துணை” என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர். புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

குதிரையை அடக்கு என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான். “கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும்போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்கவேண்டும். இது தான் என்னோட பாலிஸி” என்றான் இளவரசியை பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு. மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றி கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்யமுடியும்” என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது. நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றி கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது. உடனே “எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும்” என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்த குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்துவிட்டான். ஓவியத்தில் தன் அழகை பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தை பற்றி சொல்லப்பட்டது. குதிரையை சுற்றி வந்து தடவிக்கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக்கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக்கொண்டு எழுந்தான். நேரே இளவரசியிடம் சென்று “வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். “வேண்டாம்! எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்!” “பரவாயில்லை! அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளிவிட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா!” என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக்கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு சமாதானமானது தெரிந்தவுடன், தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான். இளவரசி “வேண்டாம்! எனக்கு பயமாயிருக்கு! வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு!” என்று அச்சத்தில் தயங்கினாள். “பயப்படாதே! நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்” என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சிதான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் “வீல்” என்று அலறிவிட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள். காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்றுவிட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள். அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி. எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்துவிட்டாயா?” “அப்பா! எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றிபெறவில்லை. ஒவ்வொருவரும் ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்.” என்றாள். “என்ன செய்யலாம்? நீயே சொல்” “எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்துவிடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்” “சரியம்மா! உனக்கு பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்.” என்றான்.

கதை #S962 வாழ்க்கை துணை மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்தது. “தனக்குரியவனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும், அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்” என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, “அப்பாஅழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவவேண்டும் அப்பா” என்றாள். “மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனை தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே! அது அதைவிட சந்தோஷம்” என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான். பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான். இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுங்கள்” என்றாள். பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான். தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலை குறிப்பிட்டான். அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், “அப்படியே செய்கிறேன் குருவே!” என்றான். அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?” என்று கேட்டான். சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்! அரசே! அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் அஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத் தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை” என்றார்கள். விபரத்தை குறித்துக்கொண்டான் மன்னன். மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, “உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக்கொண்டு சவாரி செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்கமுடியும்” என்று அறிவித்தான். இந்த போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறு வயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள். ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு போட்டிக்கு ஒப்புக்கொண்டாள். குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்யவேண்டிய சிலவற்றை குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்யவேண்டியதை பற்றியும் விவரிக்கப்பட்டது. மகளை நோக்கி, “போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்கவேண்டும்” என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சு கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு ஏற்பாடானது. முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையை சுற்றி சுற்றி வந்தான். குதிரையின் பிடரியை பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கிவிட்டான். இளவரசியின் கையை பற்றி அனைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், “இந்த

கதை #S961 பாங்க் மேனேஜர் இருக்காரா பையன் தன் அப்பாவிடம் கேட்டான். அப்பா! கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே!” அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே! நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா!” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ! பாங்க் மேனேஜர் இருக்காரா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார். நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டிருக்கீங்க. இங்க பாங்க் மேனேஜர் னு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா! இதுதான் கோபமா?” “இல்லை மகனே! கொஞ்சம் பொறு!” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ! பாங்க் மேனேஜர் இருக்காரா!? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்!” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார். நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல பாங்க் மேனேஜர் யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா! இதுதான் கோபமா?” “இல்லை மகனே! கொஞ்சம் பொறு!” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ! பாங்க் மேனேஜர் இருக்காரா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க உங்களுக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா? எத்தனை தடவை இதே நம்பருக்கு போன் பண்ணுவீங்க! தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க!” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார் ”மகனே! இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற!” என்றவர், இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ! பாங்க் மேனேஜர் இருக்காரா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்அறிவு கெட்டவனே! நீயெல்லாம் சோத்தத் திங்கறியா” இல்ல வேற ஏதாவதை திங்கிறியா? அறிவில்ல உனக்கு? இன்னொரு தடவை போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க! வைடா போனை!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா! கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சுகொலைவெறின்னா என்னப்பா?” “இப்பக் காட்டறேன்” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன் லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ நான் பாங்க் மேனேஜர் பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா!”