cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

இசைஞானி இளையராஜா ஒளிப்பாடல்கள்

Isaignani Ilayaraja Video Songs இசைஞானி இளையராஜா வீடியோ பாடல்கள்

Mostrar más
El país no está especificadoEl idioma no está especificadoLa categoría no está especificada
Advertising posts
1 263Suscriptores
Sin datos24 hours
Sin datos7 days
Sin datos30 days

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Oru Kathal Enbathu HD Video Songs # Tamil Songs # Chinna Thambi Periya Thambi # Prabhu & Nadhiya @ilayarajavideosongs @tamilmusiclink
Mostrar todo...
Methuva Methuva Oru Video Songs # Tamil Songs # Annanagar Mudhal Theru # Ilaiyaraja Tamil Hit Songs @ilayarajavideosongs @tamilmusiclink
Mostrar todo...
Everlasting Ilayaraja BGM | Background Music mastered for Easy listening | Soulful and Classic @ilayarajavideosongs @tamilmusiclink
Mostrar todo...
MADAI THIRANTHU || மடை திறந்து || Rare Song || Super Hit Song || HD
Mostrar todo...
MADAI THIRANTHU || மடை திறந்து || Rare Song || Super Hit Song || HD
Mostrar todo...
Nothing But Wind - Composers Breath - Ashwini Koushik's Ilaiyaraaja An Insight
Mostrar todo...
Ennulle Ennulle - Valli HD Song
Mostrar todo...
Ennulle Ennulle - Valli HD Song
Mostrar todo...
*இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻02/06/2021* *"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..." இதயத்தை மயிலிறகால் வருடியது போன்ற உணர்வைத் தருகிறது இப்பாடல்.... என்ன ஒரு இனிமையான குரல் ஸ்வர்ணலதா ! காற்றில் மிதப்பது போல் ஒரு உணர்வு . எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் மெய்சிலிர்க்கும் வண்ணம்...மென்மையான பின்னனியில் இனிமையான சங்கதிகளை தேவயான இடத்தில் புகுத்தி பாடைல மேலும் இனிைமயாக்குகிறார் இசைதேவன். ...* *இந்த பாடல் கீரவாணி ராகத்தால் மிக நுண்மையாகப் பின்னியெடுக்கப்பட்டவை - இந்த ராகம் பறவைகளுக்குப் பிடித்தமான ராகம் என்று சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன. பயணத்தின்போது ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல், ஒரு மரத்தில் பறவைகள் பறந்து எழுந்து மீண்டும் அமர்வது போன்ற உணர்வை நமக்குத் தருகிறது. பாடலுடன் பாடலின் நிரவல் இசைக்கோவையும் ஒன்றிணைந்து ஒரு காட்சிப் படிமமாகி, கவித்துவமான நுண் ஒலியால் நிரம்பியதே இளையராஜாவின் தனித்துவமான உலகம்...பாடலை கேட்கும்போதெல்லாம் இதயத்தை யாரோ பறித்தெடுத்துச் செல்வது போன்ற உணர்வுநிலைக்குத் தள்ளப்படுகிறோம்* *இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஏனோ நம் நினைவுச் சுழிகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது! வாலியின் வயோதிப பருவத்திலும் ஒரு வாலிபனைப்போல தன் உணர்வுகளை கொப்பளித்துவிடுகின்றார்....அழகான வரிகள்...காண்பவையாவும் சொர்க்கம் தான்*. *ஸ்வர்ணலதா பாடும் போது ஒருவித சோகம் கலந்திருப்பது போன்ற உணர்வைத் தன் வாழ்வின் முடிவிலும் விட்டுச் சென்றது பெருஞ்சோகம். இந்த பாடல் ஸ்வர்ணலதா என்ற பாடகி எவ்வளவு தூரம் தனித்துவமாக விளங்கியிருந்தவர் என்பதற்கான ஒரு சான்று*. *கோரஸ் தேவதைகளின் ஹம்மிங்கைத் தொடர்ந்து இந்த பாடல் ஆரம்பிக்கிறது. கோரஸ் பெண்களின் குரலையும் மீறி, மனதை வசியம் செய்யும் குரல் ஒரு அடர்த்தியான ஒலிக்கிறது. பாடலின் முதல் இன்டர்லூடில் அதாவது இடை இசையில் அலை அலையாய் எழுந்து அடங்கும் ஸ்ட்ரிங் செக்சன், வயலின்களின் ஆர்ப்பரிப்பும், அவை அடங்கி முடிவதற்கு முன்னே மறுபடியும் அடுத்த வயலின்கள் ஆரம்பிக்கும் விதம் கேட்டால் நிஜத்தில் இசை கற்றவன் அதிசயித்து போவான். இசை அறியாதவன் அசந்தே போவான். குறிப்பாக ப்ரீலூடுகளில் வரும் அந்த இசை கோர்வை..இளையராஜாவின் கிட்டார் இசை,சிம்பொனி கேட்கும் பரவசம்....* *வயலின்களோடு ஊடல் கொண்டது போலான புல்லாங்குழலின் முத்தாய்ப்பு அட்டகாசம், அந்த நேரம் கண்கள் மூடி கேட்டால் மனதின் மேலே ஏதோ ஒரு புழு ஊறுவது போல ஒரு உணர்வு , ஏதோ குளிர்காலத்திலும் முதுகில் ஓடும் வியர்வை துளி ஏற்படுத்தும் ஒரு ஓட்டத்தில் உண்டாகும் சிலிர்ப்பு ... அதைதான் புல்லாங்குழலின் ஒவ்வொரு பீட்டிலும் உணர்வீர்கள் , அந்த வயலின்களின் ஆர்ப்பரிப்பு முடிந்தவுடன் ஆரம்பிக்கும் கோரஸ் பெண்களின் ஹம்மிங்கில் ஏனோ கடல் அலையோடு மிதந்து வந்து கரை சேர்ந்த நுரையாய் நெஞ்சம் மாறி தாலாட்டுகிற அந்த நேரம்....அப்பேற்பட்ட இசை கோர்வையை எழுதிய இளையராஜாவின் திறமையை என்னவெண்று கூற,..* *"கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் .. ஆனாலும் அனல் பாயும் என்று பாடும்போது "ஆ ..னா .. லும் என்று பாடும்போதும் பா... யும் ... என்று பாடும்போது விழும் அந்த Dimensions ஸ்வர்ணலதாவுக்கே உரித்தானவை .. அவை ஸ்வர்ணலதா பாடும்போது தானாகவே வந்து விழுகிறதா, , அது அவர் குரலின் அபூர்வத்தால் வந்து விழுகிறதா . அல்லது ஸ்வர்ணலதா அப்படி பாடுகிறாரா என்றே யாருக்கும் புரியாத ஒரு புதிர் ...* *நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது, விபரிக்கமுடியாத ஏதோ உள்ளுணர்வு வருடுவதுபோல ஒர் இசைத்தவிப்பு.... பாடலை நீங்களும் கேளுங்கள்,,,அந்த தவிப்பு செவிகளை உந்தி செல்லும்!* ┈┉❀🌿🍁🌺🍁🌿 🎬 :வள்ளி(1993) 🎻 : இளையராஜா 🖌: கவிஞர் வாலி 🎤: ஸ்வர்ணலதா ┈┉❀🌿🌺🌿❀┉┈ *பாடல் வரிகள்:* என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற எதுவோ ஓர் மோகம் கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான் *இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றுமொரு இனிய பாடலுடன்*┈❀🌿🌺🌿 அன்புடன்..... *இசை பயணத்தில்*
Mostrar todo...